“சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டு“ என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றினை இன்றைய பாராளுமன்ற அமர்விலே முன்வைத்துள்ளார்.
கொரோனா பரவல் வேகமாக இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்த்தன அவர்கள் முகக்கவசம் அணியாது வந்தமையினை சுட்டிக்காட்டி பேசும் போதே இவ்வாறு வெர் குறிப்பிட்டுள்ளார்.

“சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டாகவுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், உடனடியாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டு வலியுறுத்தினார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கைக்கு பதில் தெரிவித்த சபாநாயகர் “இரண்டாம் உலக யுத்தத்தில் குண்டு மழைகள் பொழிந்துகொண்டு இருந்த நேரத்தில் கூட பாராளுமன்றம் கூடியது, இப்போது எவ்வாறு பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பது“ என்றும் கூறினார்.