கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும், துணை வேட்பாளர் கமலா ஹாரீஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாகப் போட்டியிடுகிறார்.ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். மேலும் அக்கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார்.
தேர்தலையொட்டி தீவிரம் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கமலா ஹாரிஸ், ஹாரிஸ் டிரம்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்த வகையில், கொரோனா தடுப்பூசி பற்றிய டிரம்பின் அறிவிப்பில் நம்பிக்கை இல்லை எனக்கூறினார். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் கூறுவதை மட்டும்தான் நான் நம்புவேன். டிரம்ப் கூறும் கருத்துகளை நம்பமாட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிர்பர் டொனால்ட் ட்ரம்ப், கொரோனா தடுப்பூசி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிபர் வலியுறுத்தியுள்ளார். தனது தலைமையிலான அரசு கொரோனா வைரசுக்கு விரையில் தடுப்பூசியை உருவாக்கும் என உறுதியுடன் கூறினார். ஜோ பிடனும், கமலா ஹாரீஸும் அமெரிக்க பொருளாதாரத்தை அழித்துவிடுவார்கள் என டிரம்ப் குற்றம்சாட்டினார்.