இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சுபீட்சத்திற்கும் அமைதிக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான உறவு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெறவுள்ளது.
தூதுவர் தரத்திலான பதவி நிலைகளுக்கு நியமிக்கப்படும் போது அதற்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழுவின் அங்கீகாரம் கிடைப்பது கட்டாயமாகையால் விரைவில் அந்தக் குழுவின் முன் அவர் ஆஜராவார் எனவும் கூறப்படுகின்றது.