தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் , 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் தமிழ்மொழி தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும் பேசியமை தொடர்பாக ஆளுங்கட்சியினுடைய அங்கத்தவர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளியிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையானது இந்த நாட்டிலுள்ளவர்களுக்கானது அல்ல. மாறாக, புலம்பெயர்ந்துள்ளோருக்கு ஆற்றிய உரையாகும். ஆகவே, அது தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை.
மேலும், விக்னேஸ்வன் கூறியது போன்று வட, கிழக்கு மக்களுக்கும் தேவையானது இதுவல்ல. ஆகவே, விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.