இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அடையாளம் !

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60 ஆயிரத்து 975 பேருக்குப் புதிதாகக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பாதிப்பு 31 லட்சத்து 67 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 லட்சத்து 4 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 75.92 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்து 4 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தப் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 24.24 சதவீதம் மட்டுமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் 848 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு சதவீதம் 1.84 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக மகாராஷ்டிராவில் 212 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *