கொரோனா பரவுதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் பரந்த அளவிலான கொரோனா மருத்துவ பரிசோதனைகளை செய்ய பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியா சுகாதாரத் துறை செயலாளர் மேட் ஹான் காக் கூறும்போது, “இந்த வருட இறுதிக்குள் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாக்ஸோ ஸ்மித் க்லைன் மற்றும் சனோஃபி பாஸ்டர் ஆகிய மருந்து நிறுவனங்களிடமிருந்து சுமார் 60 மில்லியன் அளவுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிலையில் தங்கள் நாட்டில் நடைபெற்று வரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி விவரங்களை ரஷ்யா திருட முயல்வதாக பிரித்தானியா முன்னரே குற்றம் சாட்டியது.
கரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.
இதுவரையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் 3,20,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,381 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துவிட்டனர். மிக அபாயகரமான இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி உலக நாடுகள் எங்கும் வேகமாக நடைபெற்று வருகிறது.