மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் செயலாளர்கள் இருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவினை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இன்று (01) இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் யோகநாதன் றொஸ்மன் மற்றும் அவரின் உதவியாளர் பிரதீபன் கௌசிகரன் ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் இராஜாங்க அமைச்சரின் இணைப்பதிகாரியாக இருந்த ஒருவரும் அவரின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.