சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்ச்சி இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.
தமிழ்த் தேசிய கட்சிகள் என்ற முறையிலும் தமிழ்த் தேசிய உணா்வுகளை கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.
அந்த விதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.
ஆனால் இதுரை காலமும் தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலேயே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்று தான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கிறோம்.
ஆகவே தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்செல்ல வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” என சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.