தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின் உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் மற்றும் சி.வி விக்னேஸ்வரனும் பொய் பிரச்சாரத்தை செய்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த தகவலை அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்திய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்புகளின் எடுபிடி முகவராக இருக்கின்ற ரணிலுக்கு வெள்ளையடித்து தமிழ் மக்களை நம்ப வைத்து மீண்டும் அவருக்கு வாக்களிக்க சுமந்திரன் சதி செய்கின்றார்.
எனவே தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் இவர்களுடைய கருத்துக்களை நம்பி ஏமாற கூடாது.
சுமந்திரன் மற்றும் இந்திய மேற்கு தரப்பின் விருப்பத்தின் அடிப்படையில் ரணிலை பலப்படுத்தி பாதுகாக்கும் நோக்கத்தோடுதான் முள்ளிவாக்கால் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது திட்டமிடப்பட்ட சதி” என அவர் தெரிவித்துள்ளார்.