பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசகர்களாக பயிற்றுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
யுக்திய சுற்றிவளைப்பு திட்டத்திற்கு அமைவாக, இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொஹொலன்கே தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக, ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இருந்து 200 மாணவர்கள் பயிற்றுவிக்கப்படவுள்ளதாகவும் இந்த திட்டத்தை பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது.
இதனிடையே, யுக்திய சுற்றிவளைப்பிற்கு இணையான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பயிற்சியை பெற்றுக்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களை பாடசாலை மட்ட ஆலோசகர்களாக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஶ்ரீ ஜயவர்தனபுர மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் 400 மாணவர்களுக்கு இதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.