உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, குற்றப் புலனாய்வு திணைக்களம், நாளையத்தினம் (25) இது குறித்த அவரிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், பொலிஸ் மா அதிபருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.