ஏதேச்சதிகாரத்தை மக்கள் விரும்புவது மாற்றுக்கொள்கைளிற்கான நிலையம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேற்கொண்ட ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் குறித்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பத்தில் ஒருவர் ஏதேச்சதிகாரம்குறித்து விருப்பம் வெளியிட்டுள்ளனர்.
ஏனைய வகை ஆட்சி முறைகளை விட ஜனநாயக ஆட்சி முறையை அதிகளவானவர்கள் விரும்புகின்ற போதிலும் சமீபத்தைய ஆய்வின் மூலம் பத்தில் ஒரு இலங்கையர் சில சூழ்நிலைகளில் ஜனநாயக முறையை விட சர்வாதிகார ஆட்சிமுறை பொருத்தமானது என கருதுகின்றமை தெரியவந்துள்ளது.
2018 இல்; மைத்திரிபாலசிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில் அரசமைப்பு நெருக்கடி உருவானவேளை இதுபோன்றதொரு மனோநிலை காணப்பட்டது என மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கான வலுவான ஆதரவு உள்ளபோதிலும் ஜனநாயக ஆட்சி மீதான விரக்தி அதிகரிக்கும்போது எதேச்சதிகார ஆட்சிக்கான ஆதரவு புத்துயிர் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை முன்னர் எப்போதையும் விட குறைவாக காணப்படுகின்றமையும் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களி;ல் 22 வீதமானவர்களே நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்-19 வீதமானவர்களே அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜனநாயக கட்டமைப்புகளின் நம்பிக்கை தன்மைக்கு அவை குறித்த மக்களின் நம்பிக்கை மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ள ஆய்வு சட்டமியற்றும் ஸ்தாபனங்கள் மற்றும் சட்டங்களை உருவாக்குபவர்களை உருவாக்கும் அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கை இராணுவம் மற்றும் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை விட குறைவாகவே உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
2011 இல் 63 வீதமான மக்கள் நாடாளுமன்றத்தை நம்பினார்கள் 2022 இல் இது 24 வீதமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஆய்வு இந்த அரசியல் கட்சிகள் குறித்தே மக்கள் மத்தியில் மிகக்குறைந்தளவு நம்பிக்கை காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனது.
2011 இல் அரசியல் கட்சிகளின் மீதான நம்பிக்கை 56 வீதமாக காணப்பட்டது 2024 இல் அது 19 வீதமாக குறைவடைந்துள்ளது என தெரிவித்துள்ள மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த முடிவுகள் இலங்கையின் ஜனநாயகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்களை வெளிப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது.