கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வைத்திருந்த பாடசாலை ஆசிரியர் மற்றும் விஹாராதிபதி என இருவர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 7ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 17 போதை மாத்திரைகள், 80 மில்லி கிராம் கஞ்சா, 04 கையடக்கத் தொலைபேசிகள், தொலைக்காட்சிப் பெட்டி, 02 எரிவாயு சிலிண்டர்கள், மற்றுமொருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் 4 தேசிய அடையாள அட்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.