22

22

பாடசாலை சிறுவர்களுக்கு ஆபாச வீடியோக்கள் காட்டிய பாடசாலை அதிபர் கைது !

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் கல்விகற்றுவரும் சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படம் காட்டி வந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5 ஆம் ஆண்டில் 3 சிறுமிகள், 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்விகற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் 5 ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

 

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டிவந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்பிற்கு போகமுடியாது என பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்டபோது சிறுமி அதிபரின் இந்த செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சம்பவதினமான நேற்று இரவு பெற்றோர்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை கைது செய்தனர்.

 

கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் நிலையத்தின் முன்பு வாள்வெட்டு!

யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார்.

 

நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ,இடம்பெற்ற குறித்த வாள்வெட்டு சம்பவத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் இளைஞனே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாளடவெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாகவும், சிசிடிவி காணொலிகளின் அடிப்படையில் ஒருவரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.