24

24

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து !

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1700 ரூபாவாக அதிகரித்துக் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பெருந்தோட்ட;நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவைப்;பிறப்பித்துள்ளது.

 

இந்த நிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் ;இரத்து செய்யப்படுவதாக அறிவித்து தொழில் ஆணையாளர் நாயகம் எச்.கே.கே.ஏ.ஜயசுந்தரவினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 

இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசாங்க தரப்பினருக்கும்; பெருந்தோட்ட நிறுவனங்களுக்கும் இடையே புதிய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில், முன்னதாக முன்மொழியப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஜனாஸா எரிப்புக்கான அரசாங்கத்தின் மன்னிப்பு தேவையில்லை. தண்டனையே தேவை.” – நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா

ஜனாஸா எரிப்பு தொடா்பாக மன்னிப்புக் கேட்பதை விடுத்து அதற்குக் காரணமானவா்களுக்கத் தண்டனை பெற்றக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இன்றைய நாடாளுமன்ற அமா்வில் கருத்துத் தொிவித்தபோதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸாக்களை எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வெளியிட்டிருந்தாா்.

 

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஜனாஸாக்களை எாித்தமை குறித்து மன்னிப்பு கோாியமை நல்ல விடயம். ஆனால் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தையும் மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி வெளியிடப்பட்டமையால் நாடாளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.

 

இவ்விடயம் தொடா்பாக நான் பல தடவை இந்தச் சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன். எனவே மன்னிப்புக் கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த நாடாளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் எம்.எல்.எம்.அதாவுல்லா மேலும் குறிப்பிட்டுள்ளாா்.

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரம் – தமிழர்களிடம் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிய அரசாங்கம்!

83 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜுலைக் கலவரத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களிடமும் 41 வருடங்களின் பின்னர் அரசாங்கம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இவ்விடயம் குறித்து இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, 83 கலவரம் நாட்டை இருண்ட யுகத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்காக மன்னிப்புக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

நாம் அப்போது ஆட்சி செய்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும், நாம் அம்மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும். அதேபோன்று, 41 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டை கறுப்பு யுகத்திற்கு அழைத்துச் சென்ற, 83 கலவரம் நடைபெற்றது.

 

இதனால், நாட்டிலுள்ள தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

அப்போதைய காலக்கட்டத்தில் நாம் அரசியலில் இல்லாவிட்டால்கூட, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தமிழர்களிடம் மன்னிப்புக்கோர நாம் இவ்வேளையில் கடமைப்பட்டுள்ளோம்.

இதனால்தான் இவ்வேளையில், நாம் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள போலந்து!

இலங்கைத் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சில துறைகளில் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்கு போலாந்து அரசு கவனம் செலுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அண்மையில் போலாந்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அலி சப்ரி, தனது X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில்” இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன எனவும் இலங்கையர்கள் போலந்திற்குள் நுழைவதற்கான விசா வசதிகளை தளர்த்துவது குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் போலாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.