04

04

சிறுமிகள் குளிக்குமிடங்களை வீடியோ பதிவு செய்த கொடூரம் – யாழ்ப்பாணத்தில் ஆறுதிருமுருகனினால் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்திற்கு சீல் !

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரான கலாநிதி ஆறு.திருமுருகனால் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் நடத்தப்பட்டு வரும் துர்க்காபுரம் சிறுவர் இல்லத்தையும், இன்னொரு சிறுவர் இல்லத்தையும் உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மகளிர் இல்லத்தில் பெண்பிள்ளைகள் குளிக்கும் இடத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கமராக்களால் சிறுமிகள் குளிப்பதும், உடைமாற்றுவதும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் சிறுமிகளின் உரிமை மீறப்படுவதாகவும், அவர்கள் சமூகச் சீரழிவுகளை எதிர்கொள்வதாகவும் வழங்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்தே குறித்த இல்லத்தை மூடும் உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார். மற்றைய இல்லம் முறையான அனுமதி பெறப்படாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-

ஆறு. திருமுருகனால் நடத்தப்பட்டு வரும் மகளிர் இல்லத்துக்கு கடந்த மே மாதம் 29 சிறுமிகள் மலையகத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகளாவர். சிறுமிகளுக்கான விடுதியில் தங்கவைக்கப்பட வேண்டிய அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டோரைத் தங்கவைக்கும் பெண்கள் விடுதியிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே தன்னை பெரிய வள்ளலாக காட்டிக்கொண்ட தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரனினால் நடத்தாப்பட்டு வந்த சிறுவர் இல்லம் தொடர்பான வாத விவாதங்கள் முடிவுக்கு வந்திராத நிலையில் தன்னை கலாச்சார காவலனாகவம்- இந்து சமய மீட்பராகவும் காட்டிக்கொண்ட ஆறுதிருமுருகனினால் நடாத்தப்பட்ட சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.