07

07

59வயது தாயை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போதைப்பொருளுக்கு அடிமையான மகன்!

59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

 

விசாரணையில் சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் சம்பவத்தின் போது அவர் போதையில் இருந்துள்ளதாகவும் அவருக்கு எதுவும் நினைவில்லை எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தேசியத்துக்கு தலைமையில்லை! இரகசிய உடன்பாடுகளே புலிகளின் முடிவுக்குக் காரணம்!!

இலங்கையின் அண்மைய கால அரசியல் நிலை தொடர்பிலும் – விடுதலை புலிகள் காலத்திலும் – இன்றைய காலகட்டத்திலும் தமிழ் தேசியம் எவ்வாறு உருமாறியுள்ளது என்பது தொடர்பிலும் சமகால உலக அரசியல் போக்கு மற்றும் இலங்கையின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஆகிய விடயங்கள் தொடர்பாக அரசியல் ஆய்வாளர் மயில்வாகனம் அருள்குமார் அவர்களுடன் கலந்துரையாடுகிறார் தேசம் ஜெயபாலன்.

 

யாழ்ப்பாணத்தில் இரவோடு இரவாக வைக்கப்பட்ட புத்தர் சிலை – நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

சுழிபுரம் – சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை (08) இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

 

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கை ஊடாக அழைப்பு விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி, நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது.

 

எனவே அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம் – என்றுள்ளது.

மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராய நடவடிக்கை!

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள காற்றாலை மின்சாரத் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து ஆராயவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரதேவி வன்னியாராச்சி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

உத்தேச காற்றாலை மின் திட்டம் மன்னாரில் உள்ள பறவைகள் வழித்தடத்தை தடை செய்யக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

 

காற்றாலை மின் திட்டத்தினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் பகுதியில் பறவைகள் வழித்தடம் உள்ளதா என தெரியவில்லை. விடயம் தொடர்பில் பேராசிரியருடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

காற்றாலை மின் திட்டம் அமைக்கப்படும் இடத்தை மாற்ற வேண்டும்,.இதன் மூலம் 150க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காப்பாற்றப்படும் என சஜித் பிரேமதாச முன்னர் தெரிவித்திருந்தார்.