தாயின் கணவரால் 13 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் , இரண்டாம் தாரமாக திருமணம் செய்துள்ளார். தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் , இரண்டாம் தாரத்துடன் குடும்பம் நடாத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் தாயின் இரண்டாவது கணவர் , சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கிராமத்தைச் சேர்ந்த நாளாந்தம் கூலிக்கு கடற்றொழில் செய்து வருகின்ற குடும்பம் ஒன்றைச் சேர்ந்த 34 வயது பெண் தனது மூன்றாவது குழந்தை பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 21.05.2023 அன்று சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது.
இதன் போது பாவிக்கப்பட்ட பருத்தித்துணித் துண்டுகளில் ஒன்றினை மீளவும் எடுக்காது வயிற்றுக்குளேயே வைத்தியர்கள் வைத்துத் தைத்து அனுப்பிவிட்டார்கள்.
இதன் காரணமாக தீராத கடும் வயிற்று வலிக்குள்ளான பெண் கொக்குளாய் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளுக்குச் சுமார் பத்துத் தடவைகளுக்கும் மேல் சென்று வைத்தியர்களிடம் காட்டியுள்ளார்.
கருநாட்டுக்கேணியிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சுமார் 35 கிலோ மீற்றர் தூரத்தில் இருப்பதாகவும் பிறந்த குழந்தையுடன் மூன்று பெண் குழந்தைகளை கொண்ட குடும்பத்தில் தினமும் கூலிக்கு கடற்றொழிலுக்குச் செல்லும் தாம் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு அலைந்து திரிந்தாகவும் குறித்த பெண்ணின் கணவர் கவலையுடன் தெரிவித்தார்.
‘சத்திரசிகிச்சை செய்த இடத்தில் துணியின் துண்டு வெளியே தெரிகிறது. சீழ் பிடித்துள்ளது’ எனக் கூறிய போதும் ஆரம்பத்தில் கண்டுகொள்ளாதவர்கள் பின்னர் விபரீதத்தை உணர்ந்துகொண்டு 12.07.2023 அன்று முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் அனுமதித்து மீளவும் வயிற்றில் அதே இடத்தில் வெட்டப்பட்டு உள்ளே விடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் முல்லை மாவட்ட பொது வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிட்ட போது அவர் 13.07.2023 திகதியில் தாம் எழுதிய கடிதம் ஒன்றை காட்டி அந்தச் சம்பவம் தொடர்பில் தம்மால் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கூறினார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் இந்த விடயம் தொடர்பில் நாம் முல்லைத்தீவு பொது வைத்தியசாலை பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது ‘அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக தனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்தார். அவரிடம் ‘தாங்கள் இப்படியொரு கடிதத்தை எழுதியுள்ளீர்களே’ என அவரால் காட்டப்பட்டதாக கூறி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரதியை அனுப்பிய போது ‘அது போலிக் கடிதம்’ என ஒரேயடியாக மறுத்து விட்டார்.
இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான கவனயீனச் சம்பவங்களால் மக்கள் உயிராபத்தினை எதிர்கொள்ளாதிருக்கச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இலங்கையில் அண்மையில் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் இதே போல வைத்தியர்களின் அசமந்த போக்கினால் நான்கு சிசுக்கள் இறந்தே பிறந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்தும் இன்னமும் வைத்தியசாலை நிர்வாகம் எதுவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை நிறுவுவதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு நிறுவுதல் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்கான கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்த ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள சகல பிரிவினருக்கும் உண்மையைக் கண்டறிய வாய்ப்பு கிடைக்கும் என அலி சப்ரி தெரிவித்தார்.
குறித்த ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட வேண்டும் எனவும் அதற்கான வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
சட்டம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை தெளிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இன, மத வேறுபாடின்றி அனைவரும் பாரிய சேதங்களை சந்திக்க நேரிட்டது என்று தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை நாட்டிற்குள்ளும் சர்வதேச ரீதியிலும் எழுந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அதற்காக ஸ்தாபிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் முன்வைத்த யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் பொறிமுறைகளை ஆராய்ந்து இலங்கைக்குப் பொருத்தமான பொறிமுறையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் நாடு மீண்டும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படும். எனவே சமூகத்தை தெளிவுபடுத்தி இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவைப் பெற வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
சர்வகட்சி மாநாடு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முதலில் அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அரசாங்கத்தின் யோசனை என்ன என்பதை முதலில் எமக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அந்த யோசனைகள் வெளிவந்தவுடன், நாம் இதுதொடர்பாக ஆராய முடியும்.
இதுதொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எமது யோசனைகளையும் இதில் முன்வைத்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டுவேலைத் திட்டம் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நிகழும் மரணங்களுக்கான காரணிகளில் இரண்டாவது இடத்தில் புற்றுநோய் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையில் இறப்புக்கு இரண்டாவது முக்கிய காரணம் புற்றுநோய். பதிவாளர் திணைக்களத்தின் தரவுகளுக்கு அமைய 2019 ஆம் ஆண்டில் 15,599 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர், 2020 இல், 37,649 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த காலப்பகுதியில் நாங்கள் மிகப்பெரிய அதிகரிப்பைக் காண்கிறோம். ஆண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் வாய் புற்று நோயே அதிகளவில் காணப்படுகிறது. எனக்கு தெரிந்தவரை புகையிலை பயன்பாட்டை குறைக்க போதிய திட்டங்கள் இல்லை. எனவே நம் நாட்டில் புகையிலைக்கு எதிராக அதிக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
மிஸஸ் எர்த் இன்டர்நேஷனல் 2023 பட்டத்தை அம்பாறையை சேர்ந்த 21 வயதான சஷ்மி திஸாநாயக்க வென்றுள்ளார்.
45 நாடுகளைச் சேர்ந்த 60 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த போட்டி 07/17 முதல் 07/22 வரை பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டி நிகழ்வில் சஷ்மி திஸாநாயக்க 04 துணைப் போட்டிகளை வென்று திருமணமான உலக அழகியாக கிரீடத்தை வென்றுள்ளார்.
இந்நிலையில், சஷ்மி திஸாநாயக்க கிரீடத்தை எடுத்துக்கொண்டு நேற்று (26) காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து ஏ.கே.045 ஏர்ஏசியா விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது அவரை கணவர், பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய போட்டிகளுக்கு தயாராகும் இளம் பெண்கள் குழுவும் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திற்கு வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட 42 வாகனங்கள் குறித்து திணைக்களத்திடம் எந்த தகவலும் இல்லை என்று தேசிய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தபால் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இந்த வாகனங்கள் இல்லாதது தெரியவந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் 30-50 வருடங்களுக்கு இடைப்பட்டவையாகும்.
இந்த வாகனங்கள் பற்றிய தகவல்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு பதிவேடுகளில் உள்ளதாகவும் ஆனால் தபால் திணைக்களத்தின் பொருட்கள் பட்டியலில் இல்லை எனவும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.