21

21

கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்!

கஞ்சா பயிர் செய்கை செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக சுமார் 150 வெளிநாட்டு முதலீட்டாளர்களது திட்டங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

மருந்து தயாரிப்புக்காக மாத்திரம் கஞ்சா பயிர் செய்கை திட்டத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன் முதற்கட்ட செயற்திட்டத்தை இந்த வருடத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குருநகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபர் இன்று (20) யாழில் 23 வயதுடைய சந்தேக நபர் 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த யூன் மாதம் குருநகர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குறித்த நபரை கைது செய்வதற்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முயற்சித்த போது குறித்த நபர் தப்பியோடி கோப்பாய் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் மறைந்திருந்ததோடு,

இன்றைய தினம் (20) குறித்த பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கு ஹெரோயின் பொருள் விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த போது 5 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ்பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவருக்கு ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.