தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்பட்டுள்ள விவைாசி உயர்வானது நாளாந்த உணவுக்கான கையிருப்பையே சிதைத்து விடுகின்ற நிலையில் கல்வி எல்லாம் இரண்டாம் கட்டமாகிவருவதை பல பின்தங்கிய குடும்பங்களில் காண முடிகின்றது.
அண்மையில் கிளிநொச்சி கிராமப்புற பாடசாலை ஆசிரியர் ஒருவருடன் பாடசாலை மாணவர் நிலை பற்றி அறிய தேசம் இணையத்திலிருந்து தொடர்பு கொண்ட போது “ கிராமப்புறம் என்பதால் மட்டுமன்றி இங்குள்ள பல பிள்ளைகளுடைய பெற்றோர் நாட்கூலிகள். நாட்டின் விலையேறந்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளுக்கு காலை உணவு கூட வழங்க அவர்களுக்கு வழி இல்லை. பாதிக்கும் மேற்பட்ட பிள்ளைகள் காலை உணவு உண்ணாமலேயே பாடசாலைக்கு வருகின்றனர். பல மாணவர்கள் காலைக்கூட்டத்திலேயே மயங்கி விழுந்து விடுகின்றனர். பசியோடு எவ்வாறு இந்த மாணவர்களால் 1.30 மணி வரை இருந்து கற்க முடியும். ஆரமப காலங்களில் வழங்கப்பட்ட சத்துணவு திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டன.” என வேதனையுடன் அந்த ஆசிரியர் பதிவு செய்திருந்தார்.
குறிப்பாக கிராமப்புறங்களில இந்த நிலை இன்னமும் இதிகமாகியு்ளதாக பாடசாலை அதிபர்கள் பலரும் விசனப்பட்டுக்கொள்வதை காணமுடிகின்றது. கூலி வேலைககு போகும் தந்தை இருக்குமு் குடும்பங்களை கொண்ட பகுதிகளில் உயர்தரம் (12) சாதாரண தரம் கற்கும் மாணவர்கள் (11) அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர் எனவும், ஏன் என வினவப்பட்ட போது தந்தையுடன் வேலைக்கு செல்வதாக மாணவர்கள் கூறியதாகவும் ஒரு பாடசாலை அதிபர் கூறியிருந்தார்.
இது போக பாடசாலை உபகரணங்களின் விலையேற்றம் இன்னும் மாணவர்களை திண்டாட வைக்கின்றது. சாதாரண அப்பியாசக்கொப்பி ஒன்றின் அடிப்படை விலை 100 ரூபாயை தொடுகின்றது. அப்படியானால் ஏனைய பொருட்களின் விலை..? டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.
இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதுதான் நேரம் என கருதி பல தனியார் கல்வி நிலையங்களும் காசு கொள்ளையில் முழு மூச்சுடன் ஈடுபடுக்கின்றன. தனியார் கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள் அரச பாடசாலைகளின் ஆசிரியர்களே. கேள்விகளை பாடசாலை கரும்பலகையில் எழுதிவிட்டு விடை தேவை என்றால் தனியார் கல்வி நியைத்துக்கு வரவும் எனக்கூறும் நிலையே இன்னமும் வடக்கில் தொடர்கிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தர கற்கைகளுக்கு பாடசாலை கல்வி மட்டுமே போதுமானதாக இல்லாததால் தனியார் கல்வி நிலையங்களுக்கு கட்டாயமாக போக வேண்டிய சூழல் உள்ள நிலையில் கலைப்பிரிவு மாணவர்களிடம் ரூபா 5000 வரை அறவிடப்படுகின்றது. அதே நேரம் விஞ்ஞான பிரிவு மாணவர்களிடம் ரூபா 10000 க்கும் மேல் அறவிடப்படுகின்றது. பணம் உள்ள குடும்பங்களுக்கு சரி – இல்லாத – ஏழை மாணவர்களின் நி என்னவாகும்..? இந்த ஆசிரியத்தை புனிதப்படுத்தும் பலரும் இதை கண்டுகொள்வதே கிடையாது. பொருளாதார நெருக்கடியில் இந்த ஆசிரியர்களின் சுரண்டல் இன்னமும் அதிகமாகி்கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் எரிபொருள் தட்டுப்பாடு வேறு. அரசாங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து ஏதோவொரு வகையில் பெற்றோல் கிடைத்துக்கொண்டே இருக்கறது. அவர்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்றே படிப்பார்கள். ஆனால் தினசரி வேலைக்கு போகும் நாட்கூலிகளுக்கு பெற்றோல் இல்லை. இருந்தாலும் அதன் லீட்டரின் விலை 500 ரூபாய். நாட்கூலி 1500 ரூபாயில் பெற்றோல் போடுவதா – பிள்ளையை படிக்க வைப்பதா என்ற சூழலே வடக்கில் காணப்படுகின்றது.
யுத்தத்தின் கோர பிடியிலிருந்து ஓரளவு நிமிர்ந்து கொண்டிருந்த நமது சமூகமானது இன்று மீண்டும் பொருளாதார நெருக்கடியின் சுமையால் தனது கல்வி வாய்ப்பை இழக்க ஆரம்பித்துள்ளது.
எனவே விரைந்து செயலாற்றி மீண்டும் இந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்த – தொடர்ந்து கல்வி கிடைக்க வடக்குக்கான கல்வி அமைச்சின் நிறுவனங்களும் – கற்ற சமூகமும் – புலம்பெயர் தமிழர்களும் – குறிப்பாக தமிழ்தேசியம் என கூவித்திரிந்து கொண்டிருக்கும் வடக்கின் அரசியல் தலைமைகளும் – தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் – இது தொடர்பில் அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லிபியாவின் கிழக்கு நகரமான டோப்ரூக்கில் உள்ள நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் தாக்கி அதன் சில பகுதிகளுக்கு தீ மூட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர் மின்வெட்டு மற்றும் கட்டுப்பாடற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்தே அங்கு போராட்டம் நடத்தப்படுகின்றது.
லிபியா மக்கள் டோப்ரூக் நகரில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தி, பின் நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு அதன் ஒரு பகுதிக்கு தீ மூட்டியுள்ளனர்.
இந்நிலையில், லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
தென் கொரியா எல்லைக்கு அருகில் அன்னிய பொருட்களை குடிமக்கள் தொடுவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, வடகொரியாவுக்குள் பரவியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தென்பகுதியில் இருந்து எல்லையில் வீசியெறியும் பொருட்களை சுற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக தெற்கில் உள்ள ஆர்வலர்கள் துண்டு பிரசுரங்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை அனுப்ப பலூன்களை எல்லையில் பறக்கவிட்டனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக, கொவிட் அந்த வழியில் எல்லையைத் தாண்டியிருக்க சாத்தியம் இல்லை என்று தென்கொரியா கூறியுள்ளது.
வட கொரியாவின் மாநில ஊடகங்களின்படி, தென் கொரிய எல்லைக்கு அருகில் அடையாளம் தெரியாத பொருட்களை தொட்டதன் பின்னர், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் அதிகாரப்பூர்வ விசாரணையில் கண்டறியப்பட்டனர்.
இபோ-ரியில் உள்ள ஒரு மலையில் பொருட்களைக் கண்டுபிடித்த பின்னர், ஏப்ரல் தொடக்கத்தில் 18 வயது சிப்பாய் மற்றும் 5 வயது குழந்தை வைரஸுக்கு நேர்மறை சோதனை செய்ததாக அது தெரிவித்துள்ளது.
விசாரணையின் விளைவாக, நாட்டில் உள்ள மக்கள் காற்று மற்றும் பிற காலநிலை நிகழ்வுகள் மற்றும் எல்லைக் கோடு மற்றும் எல்லைகளை ஒட்டிய பகுதிகளில் பலூன்கள் மூலம் வரும் அன்னிய விஷயங்களை விழிப்புடன் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஒரு விசித்திரமான பொருளைக் கவனிக்கும் எவரும் உடனடியாக அதைப் புகாரளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே அவசரகால தொற்றுநோய் எதிர்ப்புக் குழுவால் அதை விரைவாக அகற்ற முடியும்.
அறிக்கை தென் கொரியாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் கொவிட் எவ்வாறு நாட்டிற்குள் வந்திருக்க முடியும் என்பதற்கான வடக்கின் விளக்கத்தை கடுமையாக மறுத்தது.
நேட்டோ நாடுகளுக்கு ரஷியா நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், உலக ஸ்திரத்தன்மைக்கு சீனா கடும் சவால்களை முன்வைக்கிறது என்றும், நேட்டோ மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டது.
சைபர் தாக்குதல்கள் முதல் பருவநிலை மாற்றம் வரை, பெரும் அதிகாரப் போட்டி மற்றும் எண்ணற்ற அச்சுறுத்தல்களின் ஆபத்தான கட்டத்தில் உலகம் மூழ்கியுள்ளது என்று மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேட்டோ அமைப்பை ரஷியா மற்றும் சீனா கடுமையாக சாடி உள்ளன. எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், எந்த பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதோ, அதே அச்சுறுத்தல்களை நாங்களும் உருவாக்குவோம், என ரஷிய அதிபர் புடின் எச்சரித்தார்.
நேட்டோதான் உலகம் முழுவதும் பிரச்சினைகளை உருவாக்குகிறது என சீனா குற்றம்சாட்டி உள்ளது. ரஷிய அதிபர் புடினின் அச்சுறுத்தல்கள் புதிது இல்லை என்று எஸ்டோனிய பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்தார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வார அறிவிப்பை ‘கல்வி’ நோக்கத்திற்காகச் செய்ததாகக் கூறி தடை கோரிய கனடாவில் வசிக்கும் சிங்களவரின் மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
உலக வரலாற்றில் தமிழ் இனப்படுகொலையும் ஏனைய இனப்படுகொலைகளும் இடம்பெற்ற காலப்பகுதியாக ஒவ்வொரு வருடமும் மே 18ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழுநாட்களை புலம்பெயர்ந்த கனேடிய தமிழர்கள் குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்தும் சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், ‘இனப்படுகொலை’ என்ற வார்த்தையை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் சிங்கள விண்ணப்பதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு பிரிவினருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் மீதான வெறுப்பை வளர்க்கிறது என்றும் இந்த வழக்கில் வாதிடப்பட்டது. எனினும் சிங்கள விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை இரத்து செய்த ஒன்ராறியோ நீதிமன்றம், இலங்கை 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது, ஆனால் ‘போருக்கான காரணம் முடிவிற்கு வரவில்லை’ என்று அறிவித்துள்ளது.
முல்லைத்தீவில் 20 மாணவிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியர் யூன் 24இல் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவரோடு முன்னிலையானார்.
முல்லைத்தீவின் முக்கிய பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் சில மாணவர்களின் துணையோடு மிகக் கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தமை அண்மையில் அம்பலமாகி இருந்தது. 1,500 முதல் 2,000 வரையான மாணவ மாணவிகள் கற்கின்ற இப்பாடசாலையில் காபொத சாதரண தர, உயர்தர வகுப்புகளுக்கு கணித பாடம் கற்பிக்கின்ற ஆசிரியரே இந்த பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். தனது முப்பதுக்களை இன்னமும் தொட்டிராத திருமணமாகாத இந்த ஆசிரியர் தச்துதன் என அறியப்படுகின்றார். இவரது படமும் வெளியிடப்பட்டுள்ளது. அபிவிருத்தி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்ட இவர் கணித பாட ஆசிரியராக கடமையாற்றி வந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தேசம்நெற்கு தகவலளித்த அப்பாடசாலையின் கபொத உயர்தர முதலாம் ஆண்டு மாணவர், இவருடைய பாலியல் சேட்டைகள் அனைத்தும் அவருடைய பேர்சனல் க்கிளாஸ் (personal class) நடைபெறும் வீட்டிலேயே நடைபெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட 20 மாணவிகள் இவரிடம் தனியார் கல்விக்கு சென்றவர்களாகவே உள்ளனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவிகளே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றுமொரு பெண்கள் பாடசாலையில் இருந்து இவரிடம் பேர்சனல் க்கிளாஸ் க்கு வந்த ஒரு சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் பற்றி சம்பந்தப்பட்ட பாடசாலையின் மாணவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் தச்சுதன் முல்லைத்தீவில் தனியாக ஒரு வீட்டை எடுத்து பேர்சனல் க்கிளாஸ் எடுத்து வந்ததாகவும் அங்கு அவர் கபொத சாதாரண தரம் முடித்து உயர்தரம் முதலாம் ஆண்டு கற்கச் சென்ற மாணர்கள் சிலருக்கு மது பானங்களை வாங்கிக் கொடுத்து நட்பாகி தன்னுடைய கபடநாடகத்திற்கு அவர்களைப் பயன்படுத்தி உள்ளார். இம்மாணவர்களும் பருவ வயதின் கோளாறுகளுக்கு உட்பட்டு மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை அரைநிர்வாணமாக நிர்வாணமாக தங்கள் மொபைல் போன்களில் படங்களை எடுத்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு இந்த மோபைல் போன்களையும் தச்சுதனே வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் அம்மாணவர் தேசம்நெற்க்கு தெரிவித்தார்.
மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தியதுடன் நிற்காமல் பேர்சனல் க்கிளாஸ் நடக்கும் வீட்டின் குளியல்அறையில் மாணவிகளுக்கு தெரியாமல் கமரா பொருத்தப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டும் உள்ளதாக அம்மாணவர் மேலும் தெரிவித்தார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகள் அத்தனை பேரும் தரம் 11 தரம் 12 யைச் சேர்ந்தவர்களே. அதாவது கபொத சாதாரண தர மாணவிகளும் உயர்தரத்திற்குச் சென்ற முதலாம் ஆண்டு மாணவிகளும் எனத் தெரியவருகின்றது.
ஆசிரியர் தச்சுதனுடன் சம்பந்தப்பட்ட சில மாணவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே சில மாணவர்கள் அவர்களுடைய மோபைல்களைப் பறித்து சோதணையிட்டுள்ளனர். அதன் போது மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள், விடியோக்கள், மாணவிகளுடன் தகாதமுறையில் நடந்துகொள்ளும் விடியோக்கள் என்பன இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாணவர்கள் மீது ஏனைய மாணவர்கள் இளைஞர்கள் சிலர் தாக்கவே அம்மாணவர்கள் தச்சுதனை நோக்கி விரலைக் காட்டியுள்ளனர். இந்த இளைஞர்கள் ஆறு பேர் பொலிஸாரிகனால் கைது செய்யப்பட்டனர்.
தச்சுதனைப் தேடிப் பிடித்து அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்கள் இளைஞர்கள் தெருவுக்கு இழுத்து வந்து அவரைத் தாக்கி உள்ளனர். இந்நிலையில் தலைமறைவான ஆசிரியர் தச்சுதன் யூன் 24 இல் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் எஸ் தனஞ்செயன் முன்னிலையாகி இருந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர் மருத்துவ பரிசோதணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது அவர்களில் ஒரு மாணவி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆசிரயர் தச்சுதனை மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதாலும் அவர் குற்றத்துடன் சம்பந்தப்பட்ட தடயங்களை பெற்றுக்கொள்ள வேண்டி இருப்பதாலும் தச்சுதனுக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறையினர் கேட்டிருந்தனர். முலைத்தீவு மாவட்ட நீதிபதி ரி சரவணராஜா ஆசிரியர் தச்சுதனை யூன் 30ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தச்சுதன் குறித்த பாடசாலையில் வைத்து மாணவிகளுடன் எவ்வித சேட்டையிலும் ஈடுபட்டதாக எந்தக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில்லை. ஆனால் இவர் இச்சம்பவத்திற்கு முன்னதாக வேறொரு பாடசாலையின் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டு பிரச்சினைக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.
பெண்கள் குறிப்பாக இளம் மாணவிகள் பாதிக்கப்படுகின்ற போது அவர்கள் சமூகத்தின் பழிக்கு ஆளாகவேண்டி வரும் என்பதால் இவ்வாறான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை அவர்கள் மௌனமாகவே கடந்து போகின்றனர். அதனால் இப்பாலியல் கொடுமையை இழைக்கின்றவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவதேயில்லை. முல்லைத்தீவில் நடந்த சம்பவம் முதலாவது சம்பவம் அல்ல. அதே போல் அது கடைசிச் சம்பவமாக இருக்கப் போவதுமில்லை.
2009இற்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் எதுவும் தமிழ் பகுதிகளில் நடைபெறவில்லை என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவிப்பது மிகவும் வேடிக்கையானது. பொங்கு தமிழ் நடத்திய பேராசிரியர் கணேசலிங்கம் தன்னுடைய வீட்டில் வேலை செய்து வந்த மலையகச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கு இலங்கையில் மிக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அச்சிறுமி பின்னர் தமிழீழ விடுதலைப் புலகளால் காணாமலாக்கப்பட்டார்.
20.09.2005இ யாழ்ப்பாணத்தில் நீதியரசர் திருமதி சிறிநிதி நந்தசேகரம் முன்னிலையில் ‘பொங்கு தமிழ்’ கனேசலிங்கம் என்று யாழ்ப்பாணத்தில் பிரபலமாகத் அறியப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் தங்கராசா கனேசலிங்கம்இ ஆஜர்ப்படுத்தப்பட்டார். இவர் முள்ளையவளையைச் சேர்ந்த முத்தையா யோகேஸ்வரி என்ற பதின்மூன்று வயது வேலைக்காரப் பெண்னைப் பாலியல் கொடுமை செய்த குற்றத்திற்காகவே நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். சிறு வயதிலிருந்து கனேசலிங்கம் வீட்டில் வேலைக்காரியாய் இருந்த யோகேஸ்வரியை கணேசலிங்கம் நாற்பது தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த றமேடியஸ் என்பவர் யோகேஸ்வரிக்காக வழக்காடினார். தங்கராசா கணேசலிங்கம் சார்பில் இன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியும் அன்றைய ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ம் வாதிட இருந்தனர். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக இவர்கள் வழக்கில் இருந்து வாபஸ்பெற்றனர். அதன் பின் தங்கராசா கணேசலிங்கத்தின் சட்டத்தரணியாக ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ந ஸ்ரீகாந்தா வழக்கை எடுத்திருந்தார். இவ்வழக்குடன் தொடர்பற்ற வேறு காரணங்களுக்காக மனித உரிமைவாதியான றேமடியாஸ் இலங்கை இராணுவத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கற்ற மாணவிகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதும் அவ்வாசிரியருக்காக தமிழ் தேசியசவாத சட்டத்தரணிகள் வாதிட்டதும் தெரிந்ததே.
மாணவிகளுக்கு வீட்டுக்கு வெளியே பாதுகாப்பானதாகக் கருதப்படும் பாடசாலைகளில் கல்வி நிலையங்களில் எமது மாணவிகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களுமே மாணவிகளை துகிலுரியும் நிறுவனங்களாகி உள்ளன.
மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார்.
றாகம பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பல ஆண்டுகளாக இந்த நாட்டின் வளங்களை வீணடிக்கும் செயல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 7, 8 பில்லியன் என்ற பாரிய கையிருப்பு எவ்வாறு பூச்சியமானது என்றும் மத்திய வங்கியிலிருந்த தங்கம் எவ்வாறு காணாமல்போனது.?
இந்த முட்டாள்தனமாக தீர்மானத்தை எடுத்து இந்தப் பணத்தை வீணடித்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, 2, 3 ஆண்டுகளில் நாட்டை முழுமையாக கையேந்தும் நிலைக்கு கொண்டுசென்றவர்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அத்தோடு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியுமாயின் மீளப்பெற வேண்டும் என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதேபோல், 1992- ம் ஆண்டு நடந்த வழக்கில் 22 முதல் 24 வார கால கர்ப்பத்தை சம்பந்தப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக கலைத்துக்கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.
இந்நிலையில், கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது.
15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பு வழங்கவில்லை. கருக்கலைப்பை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் திரும்பி வழங்கப்படுகிறது’ என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தொடர்ந்து 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 25-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கருக்கலைப்பு சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் மாகாணங்களில் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளை பாதுகாக்க எனது அனைத்து சக்தியையும் பயன்படுத்துவேன். கருக்கலைப்பு சட்டம் தொடர்பான இந்த தீர்ப்பு கோர்ட்டு மற்றும் நாட்டிற்கு சோகமான நாள். உரிமையை சுப்ரீம் கோர்ட்டு பறித்துள்ளது’ என்றார்.
தூத்துக்குடி, விளாத்திகுளமருகே தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருடன் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் கலந்துரையாடி, தேவைகள் குறித்துக் கேட்டறிந்தார்.
தாளமுத்துநகர், மாசார்பட்டி, குளத்துவாய்பட்டியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழகம் முழுவதும் 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு 317 கோடிரூபாவில் புதிய வீடுகள் கட்டித்தரும் திட்டத்தை அறிவித்தார்.
முதற்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி முகாமிலுள்ள மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன.
விளாத்திகுளம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
போராட்டம் காரணமாக சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கைகலப்பில் ஹிருணி பிரேமச்சந்திரவினுடைய மார்பகங்கள் வெளித் தெரிந்ததாக காணொளி ஒன்றை பதிவேற்றி சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளவாசிகள் பலரும் பகிர்ந்து அதனை கேலியும் கிண்டலும் செய்திருந்தனர்.
இதுபோன்றுதான பதிவுகளை தமிழ் இளைஞர்கள் சிலரும் பகிர்ந்திருந்ததை என்னுடைய முகநூல் கணக்கிலும் காண முடிந்தது. இன்றைய காணொளியை பகிர்ந்து – கிண்டலடித்த இளைஞர்கள் பலரும் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் தொடர்பிலும் அப்போது அரங்கேற்றப்பட்டிருந்த பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் தொடர்பிலும் அதிகம் கோவப்பட்டவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். இது போக வித்யா படுகொலை நடந்தபோது கோவப்பட்டது போல தங்களை காட்டிக்கொண்டவர்களாக கூட இவர்கள் இருக்கலாம். இதேபோன்றுதான் கேலியும் கிண்டலும் தன்இன பெண்ணுக்கு – தன் குடும்ப பெண்ணுக்கு நடந்தால் மட்டும் துடித்துப் போகும் நம்மவர்கள் அடுத்த வீட்டுப் பெண்களுக்கு என்ன நடந்தால் எங்களுக்கு என்ன என கிண்டல் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கேட்டால் அனைத்தையும் நகைச்சுவை என கடந்து போகின்றனர். இப்படியான சின்னச்சின்ன நகைச்சுவைகள் தான் பெண்கள் மீதான அடக்கு முறைகளின் ஒட்டுமொத்தமான வடிவம் என்பேன்.
இதற்கு நான் அளிக்கும் பதிலை விட ஹிருணிகா பிரேமச்சந்திர அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வழங்கியுள்ள பதில் இவர்களுக்கு சாட்டையடி போல இருக்கும் என நம்புகிறேன். அவருடைய பதில்.
“I am proud of my breasts! I breastfed three beautiful kids. I nurtured them, comforted them and dedicated my whole body for them. I am sure people who make fun of my exposed breasts ( due to the clash with the police) also sucked thier mothers nipples until its raw when they were infants.
Anyway when you are done talking, making memes and laughing about my breasts , there was ANOTHER civilian died in a queue… Just so you know!
#ආසියාවේආශ්චර්ය් #GoHomeGota2022”
“எனது மார்பகங்கள் குறித்து நான் பெருமிதம் அடைகிறேன்!
அதனூடாக மூன்று அழகிய குழந்தைகளுக்கு நான் தாய்ப்பால் ஊட்டியுள்ளேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு சௌகரியமளித்து, எனது ஒட்டுமொத்த உடலையும் அவர்களுக்காக அர்ப்பணித்தேன்.
(பொலிஸாருடனான கைகலப்பு காரணமாக) வெளித்தோன்றிய எனது மார்பகங்களை வைத்து கிண்டலும் கேலியும் செய்பவர்கள், தாம் குழந்தைகளாக இருக்கும் போது தமது தாய்மார்களின் மார்பகக் காம்புகளிலிருந்து தாய்ப்பால் அருந்தியவராகவே இருப்பர் என நான் உறுதியாக நம்புகின்றேன்.
எப்படியென்றாலும், எனது மார்பகங்களைப் பற்றி நீங்கள் கதைத்து, மீம்ஸ்களை உருவாக்கி, நகைத்து இருக்கும் போது, எங்கோ ஒரு வரிசையில் இந்த தேசத்தின் ஒரு குடிமகன் இறந்திருப்பான் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள்!”