27

27

முல்லைத்தீவில் சுடர் ஏற்ற முற்பட்ட தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கைது !

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இலங்கை இராணுவத் தரப்பினால் பாரிய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ள போதும் பல இடங்களில் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

முல்லைத்தீவு கடற்கரையில் சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் மற்றும் அவரது மனைவி உட்பட பலர் சுடர் ஏற்றுவதற்காக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது. முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் சென்று மக்களை அச்சுறுத்தியிருந்தனர்.

முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் கடற்கரையில் பொதுச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.     முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் உணர்வுபூர்மாக மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழில் போராட்டம் !

யாழ்.நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டம் பொலிஸாரின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று , மாவீரர் நினைவுதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், யாழ்ப்பாண நகரில் சமூக நீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தேசிய கொடியை ஏந்தி, விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.

இதன்போது அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார், தற்போதுள்ள நிலையில் இவ்வாறு அதிகளவானோர் ஒன்றுகூடி போராட்டங்களை நடத்த முடியாது என கூறினர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறும் இல்லாவிடின் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டவர் கைது !

மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர், விசேட அதிரடிப்படையினரால் மன்னாரில்  இன்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முகநூலில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதாக தெரிவித்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 12 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோம் !

வவுனியா ஓமந்தை குஞ்சுக்குளம் பகுதியினை சேர்ந்த 12 வயதும் 6 மாதங்களுக்கு ஆன பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு நேற்றையதினம் வயிற்றுக்குத்து ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர்கள் மாணவியினை சிகிச்சைக்குட்படுத்திய போதே மாணவி கர்ப்பம் அடைந்த விடயம் தெரியவந்துள்ளது. அதனையடுத்து வைத்தியர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையிருந்தனர்.

மாணவியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த சமயத்தில் தன்னை ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளதாக மாணவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குறித்த மாணவி சிகிச்சைகளுக்காக தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பாதுகாப்பற்ற நிலையில் சிறுவர்களும் பெண்களும் – தினமும் நிகழும் துஷ்பிரயோகங்கள் !

இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைபாடுகளை அதிகளவில் பதிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதெல்லையை கொண்ட சிறுவர்களே, அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்

யாழில் தமிழ் தாதிய மாணவரை தாக்கிய கடற்படை தாதிய மாணவன் !

தனது கைத்தொலைபேசி இலக்கத்துக்கு கேக் படத்தை அனுப்பிய தமிழ் தாதிய மாணவரை கடற்படை தாதிய மாணவன் சரமாரியாக தாக்கியுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தாதிய பயிற்சிக் கல்லூரியிலேயே நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் அறிய வருவதாவது,
தாதிய பயிற்சிக் கல்லூரியில் கடற்படையைச் சேர்ந்த மாணவர்களும்
பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவ்வாறு பயிற்சி பெறும் கடற்படை மாணவர் ஒருவர், லண்டனில் தமிழர்களை நோக்கி கழுத்தை வெட்டுவேன் என்று சமிக்ஞை காட்டிய இராணுவ அதிகாரியின் படத்தை கடந்த மே 19ஆம் திகதி அனுப்பியுள்ளார் என்றும் இது தமிழ் மாணவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், நேற்றைய தினம் பிறந்த நாள் கேக் வெட்டும் படம் ஒன்றை தமிழ் மாணவர் ஒருவர் குறித்த கடற்படை மாணவனின் கைபேசி இலக்கத்துக்கு அனுப்பினார் என்றும் இதனால், ஆத்திரமடைந்த கடற்படை மாணவன் படம் அனுப்பிய தமிழ் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப் பட்டது.

இது தொடர்பில், கல்லூரி நிர்வாகத்துக்கு அறிவித்தபோதும் நடவடிக்கை
எடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர் என்றும் அறிய வருகின்றது.

“மக்கள் விரும்பாத சில தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.”- பொறுமை காக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை !

உலக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டை சுபீட்சத்தை நோக்கி இட்டு செல்வதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எதிர்காலத்தில் எடுக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இவ்வாறான தீர்மானங்கள் விமர்சிக்கப்பட்டாலும், எதிர்வரும் காலங்களில் இதன் பலனை பொது மக்கள் பெறுவார்கள். எனவே, நாட்டில் தற்போது மிகக் குறைந்த தெரிவுகளே உள்ளதால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன நிலையில், அதனை பொது மக்கள் அங்கீகரியுங்கள்.

இலங்கையர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை உணர்ந்து கொள்ள வேண்டும். கொவிட் -19 தொற்று நோயால் சுற்றுலாத் துறையின் மூலம் ஈட்டப்பட்ட ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு வருமானத்தை இலங்கை இழந்துள்ளது.

சுற்றுலாத் துறையானது நேரடியாகவும் மறைமுகமாகவும் முப்பது மில்லியனுக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. அபிவிருத்தி அல்லது அபிவிருத்தியடையாத என அனைத்து நாடுகளும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறிய பொருளாதாரமாக இருப்பதால் இலங்கை அதன் தாக்கங்களில் பெரும் பகுதியை எதிர்கொண்டது. என தெரிவித்த அவர்,  அரசாங்கம் பொருளாதாரத்தை எவ்வாறு நிர்வகித்தது என்பதை ஜனாதிபதி ராஜபக்ஷ நினைவு கூர்ந்தார். இதேவேளை முக்கியமாக சுற்றுலா மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் என்பன இழக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இவ்வாறான வருமான ஆதாரங்களை இழப்பதன் மூலம் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊடகவியலாளரை மூர்கக்த்தனமாக தாக்கிய இராணுவத்தினர் – முல்லைத்தீவில் சம்பவம் !

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது சிறிலங்கா இராணுவம் மூர்க்கத்தனமான  தாக்குதல்! - ஐபிசி தமிழ்

லங்காசிறி ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராநித்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்க தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளரை ஏன் எடுக்கின்றாய் என கேட்டே நான்கு இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.