15

15

“மக்களின் பொருளாதார – கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ராஜபக்சக்களுடன் எல்லா இடமும்ம் செல்வேன்.” – விக்கினேஸ்வரனுக்கு அங்கஜன் பதில் !

“மக்களின் பொருளாதார – கல்வி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ராஜபக்சக்களுடன் எல்லா இடமும்ம் செல்வேன்.” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அங்கஜன் இராமநாதன் தொர்பில் நேற்றையதினம் கருத்து தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்ட போது நாமல்ராஜபக்ஷ கழிவறைக்கு சென்றாலும் அங்கும் அங்கஜன் செல்வார் என தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் இது தொர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவித்துள்ள அவர் ,

விக்னேஸ்வரன் அவர்களின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. அவர் மீது நீண்ட காலமாக எனக்கு மதிப்பு இருந்தது. ஆனால் தற்போது அவர் வாயை திறந்தாலே,அவர் மீதான மதிப்பு குறைந்துகொண்டே வருகின்றது. அவர் கூறுகின்ற விடயங்கள் ஒரு சராசரி அரசியல்வாதி போல மாறிவிட்டது. யார் செல்வாக்காக இருக்கின்றார்களோ அவர் மீது தாக்குதலை தொடுக்கின்ற சித்து விளையாட்டில் இறங்கியிருக்கின்றார். இது உண்மையிலேயே வேதனையான விடயம்.

அவர்  இருந்து விட்டு விடுகின்ற அறிக்கையில் மூலமே அவர் இருக்கிறார் என்பதே எனக்கு தெரிகின்றது. யார் வெற்றிபெறுவார்கள் யார் தோல்வி அடைவார்கள் என்பதை அவர் கூறமுடியாது. ஏனென்றால் கடந்த தேர்தலில் தட்டுத்தடுமாறி  அவருக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தது. இந்த நிலையில்,நாமல் ராஜபக்சவுக்கு பின்னால் நான் நாங்கள் போகின்றோம் என ஒரு பத்திரிக்கையை சுட்டிக்காட்டி ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

மக்களை கல்வி ரீதியாக பொருளாதார ரீதியாக உறுதி செய்வதற்காக செய்வதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ச துணை நிற்பாராக இருந்தால் அவருக்கு பின்னால் நான் முழு இடமும் செல்வேன். என்னுடைய  மக்களை வாழ வைக்கவும் என்னுடைய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் எந்தளவு தூரத்திற்கு நான் செல்வதற்கு தயார். நாங்களும் செய்யமாட்டோம் செய்கின்ற அவர்களையும் விட மாட்டோம் என்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார்கள். ஜெனிவாவை காரணங்காட்டி ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வார்கள் ஆனாலும் கொரோனாவால் இந்த முறை அது நடைபெறவில்லை.

மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்த்துவிட்டு நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வை தேட முடியும். ஆனால் அன்றாட பிரச்சினைகளுக்கு எந்தவித பதிலையும் வழங்காது அறிக்கை அரசியல் மேற்கொள்வதில் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. யாருக்கு பின்னால் நின்றால் மக்களுடைய தேவையை பூர்த்தி செய்யலாமோ அவர்களுக்குப் பின்னால் நின்று எமது மக்களுக்கு தேவையான விடயங்களை செய்வதை எனது கடமையாக பார்க்கின்றேன். இவருக்கு பின்னால் நான் சொல்வதா அவருக்கு பின்னால் நான் சொல்வதா என ஈகோ பார்த்துக் கொண்டிருந்தால் எமது மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

பதவி துறந்தார் லொஹான் ரத்வத்த !

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வெலிகட மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தன்னால் ஏற்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் அரசியல் அரங்கில் லொஹான் ரத்வத்தை அடாவடித்தனங்களுக்குப் பெயர் போன ஒரு அரசியல்வாதி.  முன்நாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தவின் புதல்வாரன லொஹான் ரத்தவத்த, 2001ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது 10 முஸ்லிம் இளைஞர்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்த அமைச்சரின் நண்பர்கள் !

அனுராதபுர சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுடன் மதுபோதையில் அனுராதபுரசிறைச்சாலையினுள் நுழைந்து மேற்கொண்ட அடாவடித்தனமான நடவடிக்கைகள் மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சருடன் சிறைக்கு சென்ற அமைச்சரின்  நண்பர்கள், தமது பாதணிகளை நாக்கினால் நக்கிச் சுத்தம் செய்யுமாறு தமிழ் அரசியல் கைதிகளை சித்திரவதை செய்ததாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோமகன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வழக்கம் போல ஊடக அறிக்கைகளை விடுத்து பின்னர் ஓய்ந்து போவது எமது தலைவர்களது பண்பாடாகும். அவ்வாறில்லாமல் இந்த விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுக்க வேண்டும். கைதிகளது நலன்களை பாதுகாக்கும் ஒரு அமைச்சராக இருந்து கொண்டு எமது பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் மீது தனது நண்பர்களுடன் மதுபோதையில் இரவு நேரத்தில் துப்பாக்கி முனையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் அதிர்ச்சியை தந்துள்ளது.

அக்கும்பல் எமது பிள்ளைகளை தமது பாதணிகளை நாக்கி துப்புரவு செய்ய சொல்லியிருக்கின்றனர். எமது உறவுகளை உயிருடன் பாதுகாக்க முதலில் அவர்களை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்றவேண்டும். அதற்கு முன்னதாக அவர்கள் தொடர்பிலான வழக்குகள் உள்ள நீதிமன்றங்களில் அவர்களை முன்னிலைப்படுத்தி நடந்தவற்றை வெளிப்படுத்த வேண்டும்.

“பெளத்தம் பற்றி நாட்டுக்கு வகுப்பெடுத்துவிட்டு தனது வக்கிரமான முகத்தை அரசு காட்டியுள்ளது.” – மனோ கணேசன் காட்டம் !

பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசின் மிக வக்கிரமான இனவாத மனசை அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் காட்டுகின்றதா? என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது ட்விட்டர், முகநூல் தளங்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இராஜாங்க அமைச்சர் ஒருவர் அநுராதபுரம் சிறைக்கு சென்று, துப்பாக்கி முனையில், தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிட செய்து அவமானப்படுத்தி, பயமுறுத்தி உள்ளார். இது பாரிய மனித உரிமை மீறல், மனிதர்களின் ஆத்ம கெளவரத்தை அவமானப்படுத்தும் ஒரு செயல்,  ஒரு கிரிமினல் செயல்.

பெளத்தம் பற்றி நாட்டுக்கு தினந்தோறும் வகுப்பெடுக்கும் இந்த அரசின் மிக வக்கிரமான இனவாத மனசை இது காட்டுகின்றதா? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்குப் பதில் கூற வேண்டும்” – என்றுள்ளது.

இலங்கை இராஜாங்க அமைச்சரின் செயல் தொடர்பில் ஐ.நா அதிருப்தி !

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், தேசத்தின் கடமை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்றும் அவர் தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்துப்பெண் !

இலங்கை – யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று வயதில் நோர்வேக்குச் சென்ற கம்ஷாஜினி குணரத்தினம் தொழிலாளர் கட்சியில் இருந்து போட்டியிட்டார்.

அவர், 21 அக்டோபர் 2015 அன்று ஒஸ்லோவின் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நோர்வேயில் நேற்று நடந்த தேர்தலில் நோர்வே பாராளுமன்ற உறுப்பினராக கம்ஷாஜினி தெரிவாகியுள்ளார்

இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உண்மை – கஜேந்திரகுமார்

அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பார்வை இலங்கை மீது இருக்கும்போதே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்ற நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இதனை அவசரமாக எடுத்துச் செல்லாவிட்டால், தமிழர்களின் நிலை இன்னும் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“லொஹான் ரத்வத்தையை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குங்கள்.” – சஜித் பிரேமதாஸ காட்டமான பதிவு !

அநுராதபுரம் சிறைச்சாலையில் இழிவான சட்டவிரோதமான நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சரை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அந்தப் பதிவில்,

அநுராதபுரம் சிறைச்சா​லைக் கட்டடத் தொகுதியில் அரசாங்க அமைச்சரின் இழிவான மற்றும் சட்டவிரோதமான நடத்தையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்தக் கேவலமான சட்டவிரோத செயல் நமது நாட்டின் அராஜக நிலைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். எங்கள் தாய்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்த அரசுக்கு கடப்பாடு உள்ளது.

இந்த சட்டவிரோதமான மற்றும் கேவலமான செயல் நமது நாட்டில் மனித உரிமைகளின் நிலைமை வேகமாக குறைந்து வருவதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இந்த அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குமாறு நான் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றேன் என்றும் அவர் அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளா்.

சிறைக்குள் நுழைந்து தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய அமைச்சர் – மௌனம் காக்கும் அரசு !

அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் சென்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பல்வேறுபட்ட தரப்பினரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சிறையில் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

“நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் அவருடன் கூடவே அங்கஜனும் லெசல்வார்.” – க.வி.விக்னேஸ்வரன்

அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஜெனீவா என்பது நாடகமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தமை தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர் ,

அரசாங்கத்துடன் ஒட்டி இருந்துகொண்டு பந்தம் பிடிப்பவரே அங்கஜன். நாமல் கழிப்பறைக்கு சென்றாலும் பின்னால் செல்பவர். அவருக்கு ஏதோ ஒரு சில வாக்குகள் கிடைத்துவிட்டது. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அடுத்த முறை அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அவருடைய கூற்றை நாங்கள் முக்கியமாக கருத வேண்டிய அவசியமில்லை.

அண்மையிலே தமிழ் தேசிய கட்சிகள் எல்லோரும் இணைந்து பேசி ஒருமித்து ஒரு அறிக்கை அனுப்ப வேண்டுமென பேசியிருந்தோம். பின்னர் அதிலிருந்து இழுத்து இழுத்து செய்யாதிருந்ததால் இனியும் தாமதித்தால் காலம் தாமதித்து விடும் என்பதால் எஞ்சியிருந்த ஏனைய கட்சிகளை இணைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தோம்.

எங்களுடைய அறிக்கை ஒருமித்து சென்றால் நல்லது தான். ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அதனை செய்ய முடியாது போனாலும் மிகவும் முக்கியமானது நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். எங்களுக்குள்ளே இருக்கிற பிரச்சினைகளுக்காக நாங்கள் அடிபட்டு கொண்டிருந்தாலும் அவர்களுக்கு முழுமையான விடயங்களை வழங்க வேண்டும். இதிலே நாங்கள் இணைந்து செயல்பட்டால் நல்லது. அடுத்த தடவை இணைந்து செயற்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.