16

16

“நினைவுத்தூபியை அழித்தாலும் மே 18 கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அழிக்க முடியாது.” – சீ.வி.கே சிவஞானம்

“நினைவுத்தூபியை அழித்தாலும் மே 18 கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அளிக்க முடியாது.” என  ஊடக அறிக்கையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

சீ.வி.கே சிவஞானம் அவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிபிட்டுள்ளார்.

மேலும் அவ்  ஊடக அறிக்கையில் குறிப்பிகையில் ,

ஒவ்வொரு ஆண்டும் மே 18 என்பது சிங்கள இனவெறி அரசாங்கத்தின் தமிழின இன அழிப்பின் உச்சம் தொட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளாகும் . மனிதர்கள் கொல்லப்பட்டாலும் வரலாறு கொல்லப்பட முடியாதது என்பதை நினைவு  கொள்ளும்  நாளாகும்.2010 ஆம் ஆண்டு முதல் இனவெறி அரசாங்கங்களின் தடைக்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் மீறியும் தாண்டியும் நாம் எல்லோரும் பல்வேறு  வழிகளில் இந்நாளை  நினைவு கூர்ந்தே  வந்திருக்கிறோம்

இதன் ஒரு அடையாளமாகவே முள்ளிவாய்க்கால் மண்ணில் எளிமையான நினைவுத்தூபி நிறுவப்பட்டது நினைவேந்தல் நிகழ்வுகளை  தடுத்து வந்த அரசாங்கம் இப்பொழுது அந்த நினைவு தூபியையும்  இரவோடு இரவாக இடித்தழித்து விட்டு  அப்படி ஒரு தேவை இராணுவத்துக்கு இல்லை என்கிறது.  முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்து நின்று கொண்டு நினைவுத்தூபி  அழித்தது பற்றி தமக்கு தெரியாது என்கின்றனர். கல்லாலும் மண்ணாலும் சிமேந்தாலும் அமைந்த நினைவுத்தூபியை அழிக்கலாம்.  ஆனால் கல்லுப்போல ஒவ்வொரு தமிழன் மனதிலும்  ஆழ பதிந்த நினைவை, வரலாற்றை எமது இனம் இருக்கும் வரை அழிக்க முடியாது .

இதனை இனவாத சிங்கள தேசம் புரிந்த கொள்ள வேண்டும் நிகழ்கால அரசாங்கம் பதவிக்கு  வந்த சென்ற ஆண்டு முதல் கட்டவிழ்த்து விடப்பட்ட கடும்போக்குத் தனம் எம் இனத்தை தளர்வடைய செய்ய மாட்டாது என்பதை சென்ற ஆண்டிலும் நிரூபித்தோம்   அதே போன்று இந்த வருடமும் எதிர்வரும்  18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை  6.00 மணிக்கு எமது இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பகிரங்கமாக தீபங்கள் ஏற்றி அநியாமாக கொல்லப்பட்ட எமது உறவுகள் அனைவரையும் நினைவு கூர்ந்து வணங்கி  எமது தணியாத விடுதலை உணர்வை வெளிப்படுத்தி நிற்ப்போம்.” என்றார்

“கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும்.” – முஜிபுர் ரஹ்மான்

“கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

குற்றச் செயல்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் இடம்பெற்ற போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள்வதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் அதே தவறையே அரசாங்கம் செய்து வருகிறது.

தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் ஊடாக நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையை தனித்துவிட செய்யும் செயற்பாடுகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையுமாகும்.

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் இவ்வாறான கைதிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு , நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அரசாங்கம் கைதிகளை வேறுமுறையில் கையாளும் எனில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

எனவே நாட்டின் நற்பெயருடன் இவ்வாறு விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்னரும் இந்த அரசாங்கத்தின் மீது இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு பதிலாக தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கப் பெறும் சலுகைகள், வரப்பிரசாதங்கள் அனைத்தும் இல்லாமல் போகக் கூடும் என்றார்.