“ஏப்ரல் 21 ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை.” என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(07.04.2021) விவாதிக்கப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனக்கூறிய அவர், ஏப்ரல் 21 தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா? என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ள போதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.