16

16

இலங்கை நாட்டின் பொருளாதாரம் மந்தநிலை! அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 200 ஐ கடந்தது!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.06 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்தின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 195.28 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றய நிலவரப்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 198.96 ரூபாயாகவும் கொள்முதல் விலை 194.42 ரூபாயாகவும் ஆகவும் காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் இன்றைய விற்பனை விலை 159 ரூபாய் 4 சதமாக உயர்வடைந்துள்ளது. மேலும், அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 155 ரூபாய் 26 சதம் ஆக காணப்படுகின்றது.

இதேவேளை, நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 158 ரூபாய் 17 சதமாகவும், கொள்வனவு விலை 154 ரூபாய் 39 சதமாகவும் காணப்பட்டது.

அண்மைய நாட்களாக இலங்கை ரூபாய் பாரிய வீழ்சியை சந்தித்து வருவதுடன், இந்நிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் குழப்பநிலை, அந்நிய செலவாணி குறைவடைந்தமை, வெளிநாட்டு முதலீடுகள் பற்றாக்குறை, இறக்குமதி செலவு அதிகரிப்பு உள்ளிட்டவை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 “சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.” – சீனா வலியுறுத்தல் !

“சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்.” என சீனா வலியுறுத்தியுள்ளது.

‘க்வாட்’ கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட மாநாட்டின் போது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டும் என்று க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் மறைமுகமாகக் கருத்து தெரிவித்ததன் பின்னணியில் சீனா இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ‘க்வாட்’ கூட்டமைப்பின் தலைவர்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியம் எந்நாட்டின் ஆதிக்கமுமின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ‘க்வாட் மாநாடு’ குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் பெய்ஜிங்கில் கருத்து தெரிவித்த போது,

‘பிராந்தியத்தின் ஒருமைப்பாடு, அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரத்யேக குழுக்களை அமைத்து சிதைக்கக் கூடாது. பனிப்போர் மனநிலையில் செயற்படுவதை சம்பந்தப்பட்ட நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். பிராந்தியத்தில் சீனாவால் அச்சுறுத்தல் நிலவுவதாக சில நாடுகள் மிகைப்படுத்திக் கூறி வருகின்றன. இதுபோன்று கூறி, பிராந்திய நாடுகளுடன் பிளவு ஏற்படுத்தும் முயற்சியை சீனா எதிர்க்கிறது.

இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் நாடுகள், பிராந்திய அமைதிக்கும் வளர்ச்சிக்கும் எதிராகச் செயற்பட்டு வருகின்றன. பிராந்தியத்தில் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு எதிராகவும் அந்நாடுகள் செயற்படுகின்றன. அந்நாடுகளுக்கு எந்தவித ஆதரவும் கிடைக்காது.

பரஸ்பர நம்பிக்கையும் புரிதலும் ஏற்படும் வகையில் நாடுகள் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். உலகமயமாதல் அதிகரித்து வரும் சூழலில், குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக பிரத்யேக குழுக்களை அமைத்து செயற்படுவது, சர்வதேச அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

குறிப்பிட்ட கொள்கைகளுக்காக மற்ற நாடுகளைக் குறிவைத்து செயற்படுவதை அக்குழுக்கள் தவிர்க்க வேண்டும். அமெரிக்கா சரியான பாதையில் பயணிக்க வேண்டும். சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அந்நாடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தையின் மூலமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும்’ என கூறினார்.

“நீங்கள் அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது” – ஜோபைடனுக்கு வடகொரியா எச்சரிக்கை !

நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று ஜோபைடன்  அரசுக்கு வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா, அமெரிக்காஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில்,

“நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு வருடங்களில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்று கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.

கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

“ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம்” – விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு

“ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடவேண்டாம்” என விமல் வீரவன்சவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு அபகீர்த்தி ஏற்படும் விதத்தில், பொய்யான மற்றும் வெறுக்கத்தக்கக் கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொழும்பு மாவட்ட நீதவான் இன்று இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதிவாதிகளுக்குக் கொழும்பு மாவட்ட நீதவான் அருண அளுத்கே உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டத்தரணி ருஸ்ஜி அபீப் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த 9 ஆம் திகதி ஆற்றிய உரையின் மூலம் தனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அவ்வாறான பொய்யான கருத்துக்களை வெளியிட்டமை மற்றும் தமது பெயருக்குக் களங்கம் விளைவித்தமை தொடர்பில் 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டைப் பிரதிவாதிகளிடமிருந்து பெற்றுத்தருமாறும் ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கைது !

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுபிட்டி பகுதியில் வைத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்திய அசாத் சாலி நாட்டின் சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் புதிய பிரேரணைக்கு பிரிட்டன் தலைமை தாங்குவது நம்பிக்கைத் துரோகமாகும்.” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான புதிய பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது நட்புறவற்ற செயலாகும். இது நம்பிக்கைத் துரோகமாகும்.” என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபைகளில் இலங்கை மீதான புதுப்பிக்கப்பட்ட பிரேரணை வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஊடகங்களிடம் வெளிவிவகார அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை மீது முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை நாட்டின் இறையாண்மையை மீறுவதாகும். இவ்வாறானதொரு பிரேரணைக்குப் பிரிட்டன் தலைமை தாங்குவது, ஒரு பொதுநலவாய உறுப்பினரான இலங்கை மீது பிரிட்டனின் நட்புறவற்ற செயலாகும்.

இது பிரிட்டன், இலங்கைக்குச் செய்யும் நம்பிக்கைத் துரோகமாகும்.

இலங்கையைத் திட்டமிட்ட வகையில் பிரிட்டன் தலைமையிலான சில நாடுகள் பழிவாங்குகின்றன” – என்றார்.

“புர்கா தடையை ஜெனீவாவுடன் தொடர்புபடுத்த முடியாது ” – கெஹெலியரம்புக்வெல

புர்கா நிஹாப்பினை தடை செய்யும் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியுள்ள அரசாங்கம் , “புர்கா தடையை ஜெனீவாவுடன் தொடர்புபடுத்த முடியாது ” எனவும் எனினும் இந்த விடயத்தில் உடனடி முடிவுகள் எதனையும் எடுக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளது.

கலந்தாலோசனைகளை மேற்கொண்டு கருத்தொருமைப்பாட்டுடன் இதனை முன்னெடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த விடயம் குறித்து தீவிரமாகஆராயப்பட்டது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு பிரிவினரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே புர்காவை தடை செய்வது குறித்து ஆராயப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உத்தேச புர்கா தடையை ஜெனீவாவுடன் தொடர்புபடுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

“ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம்” – சஜித் பிரேமதாஸ

“ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று (15.03.2021) கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். போரினால் ஒட்டுமொத்த நாட்டுமக்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட வடக்கு, கிழக்கு மக்கள் அதனால் அதிகளவில் பாதிப்படைந்தனர்.

எனவே, ஒருமித்த இலங்கைக்குள் அவர்களுக்கான நீதியை உறுதிசெய்வது அவசியமாகும். அதன்மூலம் தேசியபாதுகாப்பும் நாட்டின் சுயாதீனத்தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.

அதேபோன்று தோட்டத்தொழிலாளர்களையும் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கக் கூடியவகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். சிறுபான்மையின மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து வாழக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்” என்றார்.

இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அதானி குழும உரிமையாளர் கௌதம் அதானி !

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணிப்பதற்காக தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை தொடர்பில் இந்தியாவின் அதானி குழும உரிமையாளர் கௌதம் அதானி, இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம், துறைமுக அதிகார சபை மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு தொழில் முயற்சி இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான வரலாற்று உறவின் சின்னமாக அமையுமென கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத முதலீட்டுக்கு அதானி குழுமத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எஞ்சிய 49 வீத பங்குகளில் முதலீடு செய்வதற்கு துறைமுக அதிகார சபை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“புர்கா அணிவதற்கான தடையானது நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி” – ரவூப் ஹக்கீம்

“புர்கா தடை அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சி” என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்
அல் ஜசீராவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிய குழுவொன்றுசெய்த தவறுகளிற்கான (இவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினை மேற்கொண்டவர்கள் ) முஸ்லீம் சமூகத்திற்கு களங்கமேற்படுத்துவதற்காக அவசியமற்ற விதத்தில் முன்னெடுக்கப்பட்ட விவகாரமொன்றிற்கு அளவுக்கதிகமாக எதிர்வினையாற்றும் நடவடிக்கையே புர்காதடையும் ஏனைய தடைகளும். ஆனால் இந்த நிகழ்ச்சி நிரல் யுத்தமுடிவடைந்த காலம் முதல் நீண்ட காலமாக காணப்படுகின்றது.
யுத்தத்தின் முடிவு சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் வெற்றிபெற்றவர்கள் நாங்கள் என்ற உணர்வை உருவாக்கியது. அவ்வேளை ஆட்சியிலிருந்த அரசாங்கம் முஸ்லீம்களை அடுத்த எதிரியாக சித்தரிக்ககூடிய விவரிப்பை உருவாக்க நினைத்தது,இதன் மூலம் சிங்களபெரும்பான்மையினத்தவர்களை தங்கள் பக்கமே வைத்திருக்கலாம் என அது எண்ணியது.
இது அனைத்து வகையான இனவாத கொள்கைளாலும் நாளுக்குநாள் ஓரங்கட்டப்படும் சமூகமொன்றறை பூதாகரமாக சித்தரிக்கின்ற களங்கப்படுத்துகின்ற முயற்சியை தவிர வேறு எதுவுமில்லை இது அவ்வாறானதொன்று அரசாங்கம் இஸ்லாம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ச்சியான தடையற்ற பிரச்சாரத்தை தங்களின் கரங்களில் உள்ள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்துள்ளது.
இதுவே அவர்களது முக்கிய தந்திரோபாயமாக காணப்பட்டது, தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியான பின்னர், மிகவும் திறமையான ஊடக தந்திரோபாயம் மூலமாக முன்னெடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையினத்தவர்களின் உணர்வுகளை திருப்திப்படுத்துவதற்காக முயற்சிகள் இடம்பெறுகின்றன. ஆணைக்குழு அதனை தடை செய்யவேண்டும் இதனை தடை செய்யவேண்டும் என தெரிவிப்பதன் மூலம் தனது எல்லைகளிற்கு அப்பால் செல்ல முயல்வதை அவதானிக்க முடிகின்றது.
இது மிகவும் துரதிஸ்டவசமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் முஸ்லீம்களை களங்கப்படுவத்துவதற்காக – முஸ்லீம்களை கத்தோலிக்கர்களிற்கு எதிராக மோதவிடுவதற்கக சில புலனாய்வு நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்டவர்கள் போல தோன்றுவதை சிங்கள பெரும்பான்மையினத்தவர்கள் உணர்கின்றார்கள் . இல்லை
எங்களிற்கு கத்தோலிக்க சமூகம் உட்பட எந்த சமூகத்துடனும் பகைமையில்லை.
இந்த இரு சமூகங்களே 2015 ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது அவ்வேளை ஆட்சியிலிருந்தவர்களிற்கு எதிராக வாக்களித்திருந்தன .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டமைக்கான காரணம் இதுவாகயிருக்கலாம்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.