“இரணைதீவால் அரசாங்கம் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மோதலை உருவாக்க முயல்கின்றது”  என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை மேற்படி இடத்தில் அடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கத்தோலிக்கர்கள் அதிகளவில் வாழும் தீவில் உடல்களை அடக்கம் செய்ய முயல்வதன் மூலம் முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் குரோதத்தையும் வெறுப்புணர்வையும் விதைக்க அரசாங்கம் முயல்கின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து தெரிவித்துள்ள ஹரீன்பெர்ணான்டோ முழுமையற்ற அறிக்கையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.