12

12

“புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர்?” – பொலிகண்டி தொடங்கி பொத்துவில் போராட்டம் தொடர்பாக இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பின் பிரசார பிரிவு துண்டுப்பிரசுரம் !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம், அண்மையில் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் ஊடாக இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பின் பிரசார பிரிவு எனும் அமைப்பினால் துண்டுப்பிரசுரங்கள் விநியாகம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த சில நாட்களாக சாணக்கியன் என்றும் அவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கிறார் என்றும் எம்மில் பலர் பலவாறும் புகழ்ந்து கெண்டிருந்தோம். ஆனால் கடந்த 3ஆம் திகதி சாணக்கியனின் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை என்ற பேரணியில் தனது பசுத்தோலைக் கழட்டி வைத்து விட்டு சுமந்திரனுடன் இணைந்து புலியாக புறப்பட்ட போது தான் அவர்களது நோக்கத்தை முஸ்லிம்களாகிய நாம் சரிவரக்கண்டு கொண்டோம் .

முப்பது வருட கொடூர யுத்தம், அந்த யுத்தத்தில் புலிகளோடு நின்றவர்களையே நஞ்சூட்டி கொன்றது கசப்பான வரலாறு. அத்தோடு உடுத்த உடையுடன் எம்மை துரத்தி அடித்து தொழுகையில் வைத்து நம்மை கொன்று குவித்து , படுகொலை செய்த கொடூரர்களின் அடிவருடிகளான இவர்கள் மீண்டும் தனி நாடு கோரும் படலத்தை ஆரம்பித்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அத்துண்டு பிரசுரத்தில் அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளை செய்து கொண்டே இருந்தனர். அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக் கூடியவைகளாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சிக்கு உரிய தண்டனை அல்லாஹ்விடம் இருக்கிறது.

எனும் அல் குர்ஆனின் 14அத்தியாயத்தின் 46ஆவது வசனத்தை மேற்கோள் காட்டியதை தொடர்ந்து, இறைவன் இவ்வாறு கூறி இருக்க நாம் தமிழ் தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா? இதில் எம்மவர்கள் சிலரும் கலந்து கொண்டது வேதனைக்குரிய விடயம். ஏன் எதற்காக என அறியாத இளைஞர்களை பலிக்கடாக்களாக களத்தில் இறக்க எந்த பெற்றோர்கள் தான் விரும்புவர்? எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகளால் கொலையுண்ட எமது மக்களின் சடலத்தின் மேல் மீண்டும் ஒரு முறை பயணிக்க எவர் விரும்புவர்? ஆனால் இங்கு நடந்தது என்ன? அவர்களின் நோக்கத்திற்காக எம் முஸ்லிம்களின் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எமது முஸ்லிம் சமூக தலைவர்கள் என்போர் எம்மை கொன்று குவித்த புலிகளை விடுதலை செய்யுமாறு கோஷமிட்ட சம்பவமே ஆகும்.

இனியும் நம்மவர்கள் அவர்களின் பேச்சை நம்புவதன் ஊடாக எமக்கு கிடைப்பது என்ன? அவப்பெயரே அன்றி வேறு எதுவுமில்லை. நம்மவர் இனியேனும் சிந்தித்து செயற்படா விட்டால் எமது முஸ்லிம் சமூகத்திற்கு பாரியதொரு துரோகத்தை செய்தவர்களாக நாம் ஆகி விடுவோம் என்பதே உண்மை என அந்த துண்டு பிரசுரைத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரமானது இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG 20210212 WA0011

“அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறுவது சூரியன் மேற்கில் உதயமாவதை போன்றது அது ஒரு போதும் நடக்காது” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

“அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறுவது சூரியன் மேற்கில் உதயமாவதை போன்றது அது ஒரு போதும் நடக்காது” என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விமல்வீரவன்சவின் வீட்டில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது என்றால் அது மேற்கில் சூரியன் உதயமாவதை போன்றது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் நாங்கள் அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவே முயற்சிக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
நாலாம் பக்கத்திலும் அரசாங்கத்திற்கு எதிரான சதிகாரர்கள் காணப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“வடக்கில் 100க்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தும் மையங்கள்” – மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(11.02.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பி
லேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. அவர்களில் 85 சதவீமான உத்தியோகத்தர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான நடவடிக்
கைகளை மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்களுடன்
கலந்துரையாடி மேற்கொண்டுள்ளோம்.

முதற்கட்டமாக  30 தொடக்கம் 60 வரையானோருக்கு தடுப்பூசி வழங்கப்படும். அவர்கள் குறித்த பெயர் விவரங்கள் பிரதேச செயலர்கள் ஊடாக சேகரிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி போடுவதற்கு மக்களை பிரதேச செயலக ஊழியர்
களே ஒழுங்குபடுத்தி அழைத்து வருவர். வடக்கில் தடுப்பூசி போடு
வதற்காக 118 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்ற உடனடியாகவே மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும்” என்றார்.

“முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்குவைக்க முடியாது” – நாடாளுமன்றில் நீதியமைச்சர் !

முஸ்லீம்களின் சட்டங்களை மாத்திரம் இலக்குவைக்க முடியாது என நீதியமைச்சர் அலிசப்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு என தனியான நீதிமன்றங்கள் அமைக்கப்படுள்ளமை தொடர்பாகவும் அவர்களுக்கான நீதி நடவடிக்கைகள் தொடர்பாகவும் நாடாளுமன்றில் அத்துரலிய தேரர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கையில் ஒரே சட்டம் என்பதை பின்பற்றவேண்டும் என்றால் ஏனைய மதங்களினால் பின்பற்றப்படும் சட்டங்களையும் நீக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல தனிப்பட்ட மத நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் கண்டி திருமண மற்றும் விவகாரத்து சட்டம் யாழ்ப்பாண தேசவழமை சட்டம் ஆகியன காணப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒருமதத்தினது சட்டங்களை மாத்திரம் நீக்கமுடியாது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவற்றில் மாற்றங்களை கொண்டுவரலாம் அல்லது இலங்கையில் காணப்படும் தனியார் சட்டங்கள் அனைத்தையும் இல்லாமல் செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்

டிஜிட்டல் மயப்படுத்தப்படுகின்றது இலங்கையின் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் !

இலங்கையின் அனைத்து நீதிமன்ற கட்டமைப்பையும் டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான உடன்படிக்கை நேற்று(11.02.2021) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நீதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பில் ஆவணங்களை பராமரித்தல், முகாமைத்துவம், வழக்குகள் குறித்த அறிக்கைகளை வைத்திருத்தல், விநியோகத்தில் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் இதன் மூலம் டிஜிட்டல் மயப்படுத்தப்படவுள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம் நீதியமைச்சு, நீதிச்சேவைகள் ஆணைக்குழு, தொழில்நுட்ப அமைச்சு என்பன இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுத்தப்படவுள்ளது.

“இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்” – எம்.ஏ.சுமந்திரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இம்முறை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணையைக் கொண்டுவரவுள்ள நாடுகளுடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இந்தியாவுடனும் தொடர்ந்து பேசி வருகின்றோம்.

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டும்.

இந்தியாவில் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களின் உணர்வுகளையும் இந்திய மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயற்படும் என்றே நாம் நம்புகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்