27 வருட மண வாழ்க்கையை முறித்துக்கொள்வதாக மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான பில்கேட்சும் அவரது மனைவி மெலிண்டா கேட்சும் அறிவித்துள்ளனர். ஆயினும் Bill and Melinda Gates அறக்கட்டளைக்காக இருவரும் ஒன்றாகத் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளனர்.
உலகளவில் மென்பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான பில்கேட்ஸ், 27 ஆண்டுகளுக்கு முன்பு மெலிண்டாவை தனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், 27 வருட மண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக அவர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், நீண்ட சிந்தனைக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இனிமேலும் ஒன்றாக சேர்ந்திருக்க முடியாது என நம்புவதால், இவ்வாறு முடிவு செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆயினும், Bill and Melinda Gates அறக்கட்டளைக்காக தொடர்ந்து ஒன்றாக செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளனர்.