அருண்மொழி

அருண்மொழி

“தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாது செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” – சாள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு- வவுனியா பகுதிகளில், மகாவலி எல். வலயத்தின் ஊடாக தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை இல்லாது செய்ய தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்”  இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என சீன நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு நான்கு நாட்கள்  உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன நிதி அமைச்சருக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று காலை பீஜிங்கில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட சீன நிதி அமைச்சர் லியு குன்  இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்தார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சீனா நன்கு புரிந்துகொண்டுள்ளதாக தெரிவித்த சீன நிதியமைச்சர், நெருக்கடியை சமாளிக்க இதுவரை இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றத்தையும் வரவேற்றார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா தொடர்ந்து பூரண ஆதரவை வழங்கும் எனவும் சீன நிதி அமைச்சர் உறுதியளித்தார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பணப் பரிமாற்றம் தொடர்பாக நீண்டகாலமாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாகவும், சீனாவுடன் நெருக்கமாகச் செயற்படும் ஏனைய சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுவதாகவும் சீன நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சவாலான பணியில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மிகவும் பாராட்டுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மீட்சியை ஏற்படுத்துவதற்கும் இலங்கையில் போட்டித்தன்மை வாய்ந்த டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்குமான வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சண்ட்ரா பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி – கிளிநொச்சியில் ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி !

வடக்கில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சானின் விளைச்சலில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாதன்குடியிருப்பு, பிரமந்தனாறு, உழவனூர் ஆகிய பகுதிகளிலேயே இந்த ஜம்போ கச்சான் செய்கைக்கு மேற்கொள்ளப்படுகிறது. குறித்த பகுதிகளில் கச்சான் பயிர்செய்கைக்கு சிறந்த இடங்களாக காணப்படுகின்றன.

கடந்த வருடம் ஜம்போ கச்சான் செய்கையில் பாரியளவு விளைச்சலால் விவசாயிகள் அதிக இலாபம் பெற்றிருந்தனர். ஆனால், இவ்வருடம் இந்தநிலைமை அப்படியே தலைக் கீழாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நிலவிவரும் கடும் வறட்சி காரணமாக ஜம்போ கச்சான் அறுவடையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனால், சில விவசாயிகள் ஜம்போ கச்சான் அறுவடையை செய்யாது கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஜம்போ கச்சான் தற்பொழுது நான்கு மாதம் கடந்த நிலையில் அறுவடை செய்ய முடியாத நிலையில், கச்சானின் விளைச்சலும் பாரிய வீழ்ச்சியாக காணப்படுகிறது.

பல லட்சம் ரூபாய் செலவழித்து ஜம்போ கச்சான் செய்கையில இடுபட்ட விவசாயிகள் ஒருகிலோ கச்சானைக் கூட இவ்வருடம் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய அதிகாரிகள், நஷ்ட ஈட்டினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” – யாழ்ப்பாணத்தில் கையெழுத்து போராட்டம் !

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மேற்கொள்ளப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“ஐ.எம்.எப். மரணப் பொறியை தோற்கடிப்போம்” “ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் குறித்த போராட்டம் மேற்கொள்ளப்படடது.

 

“முல்லைத்தீவு நீதிபதி மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

தனக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக பதவி விலகுவதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (18) இடம்பெற்ற நீதித்துறைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா 2023.09.23 ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அதில் ‘உயிரச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் காரணமாக தான் பதவி விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகளுக்கு மனஅழுத்தம் இருப்பது வழமை ,மன அழுத்தத்தால் பதவி விலகுவதாக இருந்தால் இலங்கையிலுள்ள சகல நீதிபதிகளும் பதவி விலக நேரிடும்.

நீதிபதிகளுக்கு மாத்திரமல்ல சட்டத்தரணிகளுக்கும் மன அழுத்தம் உள்ளது.நாடாளுமன்றம் வரும் எமக்கும் மன அழுத்தம் உள்ளது.சபாபீடத்தில் அமர்ந்துள்ள சபாநாயகருக்கும் மன அழுத்தம் உள்ளது.அவ்வாறானால் அவரும் பதவி விலக நேரிடும். தனக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் காரணமாக பதவி விலகுவதாக நீதிபதி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதும் அது எந்தவகையான, யாரால் விடுக்கப்பட்டது என்பது தொடர்பிலோ ,தனக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகையான மன அழுத்தம் என்பது தொடர்பிலோ எதுவுமே குறிப்பிடவில்லை.

தனக்கு உயிரச்சுறுத்தல் இருந்தால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.உயிரச்சுறுத்தல் விடுத்த நபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்க முடியும். ,காவல்துறை மா அதிபருக்கு அறிவிக்க முடியும்..அந்த அதிகாரம் எமக்கு கூட இல்லை.ஆனால் அவர் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி அமைதிப்பேரணி !

பலஸ்தீன மக்களுடான தமது ஆதரவை வெளிப்படுத்தியும், காஸாவில் இடம்பெற்றுவரும் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் நேற்றைய தினம் புதன்கிழமை (18) கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டு தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.

ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் – ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில தினங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்துவரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் பலஸ்தீன மக்கள் மீதான இலங்கையர்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கிலான ‘ஒருமைப்பாட்டு’ போராட்டமொன்று உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பினால் நேற்று புதன்கிழமை பி.ப 3.00 மணிக்கு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் அமைந்துள்ள பலஸ்தீன தூதரகத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கிய அமைதிப்பேரணியாகவே இப்போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி போராட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கில் பி.ப 3.00 மணியளவில் பெருமளவானோர் விஜேராம மாவத்தையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தை வந்தடைந்த அதேவேளையில் அப்பகுதியில் பஸ் மற்றும் ஜீப் வண்டிகளில் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் இன, மதபேதமின்றி அங்கு குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், ‘காஸாவில் துன்பப்படும் எமது மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தி இங்கு ஒன்றிணைந்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் எனது மனமுவந்த நன்றியைக் கூறுகின்றேன். பலஸ்தீன மக்களுக்கான உங்களது ஆதரவுக்கு நன்றி. நாங்கள் உங்களை நேசிக்கின்றோம்’ என்று மிகவும் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.

அதனைத்தொடர்ந்து அடைமழைக்கு மத்தியில் பலஸ்தீன கொடிகளையும், ‘நாங்கள் பலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம்’, ‘நாங்கள் பலஸ்தீனத்துடன் இருக்கிறோம்’, ‘கொலைகளை நிறுத்துங்கள்’, ‘பலஸ்தீன கேள்விக்கான அடிப்படைக்குத் தீர்வை வழங்குங்கள்’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு அங்கிருந்து அனைவரும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸார் அவர்களைத் தடுத்தனர். இவ்வாறு கொடிகள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறும், பேரணியாகவும் செல்லமுடியாது என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தினர்.

அதனையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் தமது சொந்த வாகனங்களிலும், பேரணியாகவன்றி சில குழுக்களாகவும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தை சென்றடைந்து, அங்கு கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது ‘பலஸ்தீனம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை உடன் நடைமுறைப்படுத்துங்கள். சுதந்திரமானதும், இறையாண்மை உடையதுமான பலஸ்தீனத்தை உருவாக்குங்கள்’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதையை அவர்கள் ஏந்தியிருந்தனர். அதன் பின்னர் பலஸ்தீன மக்களுடனான தமது ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும், காஸா மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ஐக்கிய நாடுகள் அலுவலகப் பிரதிநிதியிடம் மகஜரொன்றைக் கையளித்ததுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

“இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும்.” – செந்தில் தொண்டமான் அதிருப்தி !

பிறப்பு, இறப்பு சான்றிதழில் இனத்தினை குறிப்பிடுவது குறித்து பதிவாளர் நாயக திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ்களில் தமது இனத்தை குறிப்பிடுவது தொடர்பாக பதிவாளர் நாயக திணைக்களத்திற்கு சுற்றுரூபம் வெளியிட எவ்வித உரிமையும் இல்லை.

இலங்கையர் என்ற வகையில் தனது இனத்தை பிறப்பு இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிட இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அனைவருக்கும் உரிமை உள்ளது.

பிரஜா உரிமை இல்லாத சமூகமாக நாம் இருந்த பொழுது, இந்தியா வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளமே எமக்கான அங்கீகாரமாக இருந்தது. எம் இனத்தின் அடையாளத்தை தீர்மானிப்பதற்கு மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது.

1948 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை இன்றி இருந்த நம் சமூகம் கிட்டத்தட்ட 40 வருட போராட்டங்களுக்கு பிறகு இந்திய வம்சாவளியினர் என்ற அங்கீகாரத்துடன் பிரஜா உரிமை பெற்றது.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களை, ‘இலங்கை தமிழர்’ என அடையாளப்படுத்த முற்படுவது அம்மக்களின் அடையாளத்தை மறைக்கும்  ஒரு செயல்பாடாகும். இவ்வாறான சுற்றுநிரூபங்களை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

“பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் ! ” – தேசம் திரை காணொளி !

பாலஸ்தீனமும் – இலங்கையும் – காலனித்துவச் சிந்தனையில் தார்மீக உணர்விழந்த மேற்குலகமும் !

இரு தரப்பு மோதல் கொலையான சம்பவம் – கிளிநொச்சியில் 22 வயது இளைஞர் கைது !

கிளிநொச்சி, ஊற்றுக்குளம் பகுதியில்  நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயம்.”- இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த

வடக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனைக் குறிப்பிட்டார்.

அத்தோடு இதன் ஊடாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலுக்கும் மட்டுமன்றி நுகர்வோருக்கும் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் குழுவொன்று முறையற்ற இலாபம் ஈட்டுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆகவே அத்தகைய மீன்பிடி மாபியாவை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

வரண்டு போன அமேசன் – இறந்துபோன நூற்றுக்கணக்கான டொல்பின்கள் !

பிரேசிலில் மழைக்காடுகளின் வழியாக ஓடும் அமேசான் நதியின் கிளை நதிகள் வரண்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத வரட்சி காரணமாக அமேசானின் கிளை நதிகள் வரண்டுள்ளன.

இதன் காரணமாக அந்த நதிகளின் வழியாக தொலை தூர கிராமங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வந்த படகு போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வது பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான டொல்பின்களும் இறந்துவிட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஏராளமான படகுகள் தரைத்தட்டி கிடக்கின்றன. இதுதொடர்பான ட்ரோன் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.