20

20

13 வயதுடைய மகள் துஷ்பிரயோகம் – விஷம் அருந்திய பெற்றோர் !

13 வயதுடைய தமது மகள் துஷ்பிரயோகத்துக்கு  உள்ளாக்கப்பட்டதை அறிந்த தந்தையும் தாயும் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து  விஷம் அருந்திய நிலையில் வெலிமடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  சிறுமி வெலிமடை நகரில் மாலை நேரத்தில்  தனியாக காணப்பட்டதால் சந்தேகமடைந்த பொலிஸார் வெலிமடை  பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில்  மருத்துவ அறிக்கையைப் பெறுவதற்காக  பதுளை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்ததனையடுத்து  சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக சிறுமியின் 42 வயதுடைய தந்தை மற்றும் 38 வயதுடைய தாயை பொலிஸார் வெலிமடை பொலிஸ் நிலையத்துக்கு வரழைத்துள்ளனர்.

இதன்போதே மகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பது பெற்றோருக்கு தெரியவந்ததுடன் அவர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து விஷம் அருந்தியுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரையும் உடனடியாக  மருத்துவமனையில்  அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரிப்பு !

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்று 13 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்நிலைமை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதால் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரவு செலவு அலுவலகம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் அதே சந்தர்ப்பத்தில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளது என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை கொடூரமாக கொலை செய்த 22 வயது மகன் !

காலி மாவட்டம், நியாகமை பகுதியில் தந்தையை கொடூரமாக கொலை செய்த 22 வயது மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக பதிவாகியுள்ளது.

45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நியாகமை பிரதேசத்திலுள்ள யுவதி ஒருவரை உயிரிழந்தவரின் மூத்த மகன் காதலித்து வந்துள்ளார். இதற்குத் தந்தை கடும் எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவ தினமான நேற்றைய தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மதுபோதையில் வந்த தந்தை, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரி மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஆத்திரமடைந்த மகன் தந்தை மீது கத்தியால் குத்திப் பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.

படுகாயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட தந்தை அங்கு உயிரிழந்துள்ளார்.

கொலையாளியான மகனைக் கைது செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பலாலி விமான நிலையத்தை விரிவுபடுத்த 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு !

யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பலாலி விமான நிலையத்தில் புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தின் பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் ஆராயும் வகையில் கடந்த வாரம் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்.

 

இந்த நிலையிலேயே தற்போது பலாலியில் காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,  தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.” – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர 

நாட்டில் தேவையான அளவு உரம் கையிருப்பில் இருக்கின்றன. விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பெற்றுக் கொடுக்கத் தவறும் அதிகாரிகளுக்கு எதிராக எந்தவித தராதரமும் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுப்போம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகையில்,

80 ரூபாவுக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் போது அரிசி ஒரு கிலோ 200 ரூபா மற்றும் 220 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

லுனுகம்வெஹெர பகுதியில் வீதிக்கு அருகில் 5 கிலோ அரிசி பொதிகள் கிலோ 125 -130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நீண்ட காலமாக கடைகளுக்கு செல்வதில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

நாட்டில் பெருமளவு மக்கள் நாட்டரிசி மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றையே உணவுக்காக கொள்வனவு செய்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிக்கும் வகையில் அந்த அரிசி வகைகள் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

குறைந்த விலையில் அவற்றை சந்தையில் பெற்றுக் கொள்ள முடியும்.  வெகு தூரம் செல்ல முடியாவிட்டால் சதொச நிறுவனங்களில் அவற்றைக் கொள்வனவு செய்யலாம்.

அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவிக்கும் வகையில் நாட்டில் எங்கும் எம். ஓ.பி உரம் தட்டுப்பாடு கிடையாது. அவ்வாறு காணப்பட்டால் உடனடியாக அவற்றை வழங்க முடியும்.

சில அதிகாரிகள் அரசாங்கத்தை அசெளகரியங்களுக்கு உள்ளாக்குவதற்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுடன் செயற்பட்டு வருகின்றன.

அவர்கள் அந்த உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர். அவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் 40,000 ரூபாவுக்கு மேல் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்ட யூரியா உரம் தற்போது விவசாயிகளுக்கு 9,000 ரூபாவுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகிறது.

அதேபோன்று எம் ஓ பி உரமும் 4,500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உரங்கள் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன என்றார்.

தன்கட்சியை சேர்ந்த குடுமி ஜெயாவின் ஊழல்களை கேள்வி கேட்க முடியாத உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண ஆளுநர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி !

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி  ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.

இலஞ்சமாக வழங்கப்பட்டதா வட மாகாண ஆளுநர் பதவி | Bribery Charges Against Northern Governor

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் மேலும் பேசிய அவர்,

“ தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர். அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.

ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தன்னுடைய கட்சிக்காரர் செய்த ஊழல்களுக்கு மட்டும் துணைபோகின்ற ஒரு அவலமான நிலையும் – அதனை கண்டிக்காத நிலையம்  காணப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உமாசந்திர பிரகாஷ் மேற்கண்டவாறு ஆளநர் நியமனம் பற்றி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.