11

11

பிரபாகர ஜாதி வெறியிஸம்!: துரை நரையன்.

இலங்கையில் இனரீதியிலான ஒடுக்கு முறைக்கெதிராக இனவெறியுணர்வுகள் கூர்மையடைந்த போது எழுந்த இனப் போராட்டத்தின் தலைமையை கைப்பற்றவும் தலைமையை தொடர்ந்து காப்பாற்றுவதற்காகவும் வன்முறைகளைக் கையிலெடுத்துக் கொண்டு உண்மையில் தலைமைப் பண்பு கொண்ட நற்சிந்தனையாளர்கள் எல்லாம் ஒவ்வொருவராக கொலை செய்து அழிக்கப்பட்டமை கண்கூடான வரலாறு.

பிரபாகரனால் தனது தலைமையைக் காப்பாற்றுவதற்காக அழிக்கப்பட்ட மாற்று கட்சியினரில் அனைவரும் மாற்றுச் சாதியினரே என்பது தெள்ளத் தெளிவானது. மேலும் தலைமையைக் காப்பாற்றும் உச்சப் போராட்டத்தில் தன் சாதியினரையும் (பிரபாகரன் அவர்களுள் உயர்ந்தவர் என்பது வேறு விடயம்) இலங்கை அரசிற்கு காட்டிக் கொடுத்தும் கொலை செய்தும் இருக்கின்ற நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

மொத்தத்தில் தன்னிகரற்ற தலைமையை தனக்காக வைத்துக் கொள்வதைத் தவிர அதன் மூலம் தானும் தன்னைக் காக்கும் சகாக்களும் வசதியான உச்ச பட்ச வாழ்க்கையை அனுபவிப்பதைத் தவிர வேறு எந்த நல்லெண்ணமும் கொண்டவராக அவர் காணப்படவில்லை.

ஆரம்ப வளர்ச்சிக் காலத்தில் ஆரம்ப ஆயுதப் போராட்ட முன்னேற்பாட்டாளர்களான தங்கதுரை, குட்டிமணி போன்றோரால் பிரபாகரன் ஓரங்கட்டப்பட்ட போது பிரபாகரன் சாதியிசத்தைக் கையிலெடுத்து புலிகள் இயக்கத்தைக் கட்டிக் கொண்டார்.

புலிகளின் ஆரம்ப காலம் முதல் நீண்ட காலங்களுக்கு அதன் படையணிகளதும், பிரதேசங்களதும் தலைவர்களாக இருந்தவர்கள் எல்லோரும் பிரபாகரனின் ஊரான வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்களான அவரின் சாதியினரே. அது உப தலைவராக இருந்த மாத்தையாவாகட்டும் , கடற்படைப் பொறுப்பாளர் சூசை ஆகட்டும், கிழக்கு மாகாணப் பொறுப்பாளராய் இருந்த குமரப்பா (குமரேந்திரன்) ஆகட்டும் இரண்டாம் தலைமைக்கு இடித்துக் கொண்டிருந்த கிட்டுவாகட்டும் புலிப் பணத்தையே சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளில் பிழைக்கும் பிரபாகரனின் ஊரையும் சாதியையும் சேர்ந்தவர்கள் இன்றும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இவ்வாறாக புலிகள் அமைப்பையே பொருளாதார ரீதியில் ஏமாற்றிய பலர் அவர்கள் வெளியூராயும் வெளிச் சாதியாயும் இருக்கும் பட்சத்தில் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வல்வெட்டித்துறையை சேர்ந்த பிரபாகர சாதியாய் இருக்கும் பட்சத்தில் அப்பெரிய பணத் தொகையுடன் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் – இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுவெல்லாம் சாதி வெறியின் உச்சமில்லையா?

மேலும் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் எல்லோருமே எவ்வாறு வல்வெட்டித்துறை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆனார்கள் என்பது இலங்கைத் தமிழ் சமூகம் எப்படி புலிகளினால் அடக்கி ஒடுக்கி எள்ளி நகையாடப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் காண்பிக்கவில்லையா? வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரனின் சாதியைச் சேர்ந்தவர்களைத் தவிர வேறு எவரும், வேறு எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும் தலைமை தாங்கும் தகுதியற்றவர்களாகவா இருந்திருக்கிறார்கள்?. மிகச் சிறு பிரிவினராகிய வல்வெட்டித்துறை பிரபாகர சாதியினரே தலைமை தாங்க முடியும் என்ற நிலை தாங்களே தங்கள் எண்ணப்படியே ஆள முடியும் என்றெழுந்த சிங்களத்தின் நிலைக்கு ஏதும் வித்தியாசத்தை காண்பிக்கிறதா? சிங்களத்திற்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் தெரிகிறது.? இவர்கள் எப்படி சிங்களத்தை தப்பு கூற முடியும்?

ஆரம்பகால புலிகள் அமைப்பு வளர்ந்த காலப்பகுதியில் பிரபாகரன் வல்வெட்டித்துறை கடந்த ஏனைய கடற்கரைப் பிரதேசங்களில் திரிந்தபோது லாவகமாய் தனது சாதிவாதத்தை உபயோகித்துக் கொண்டமை அன்றைய கால அரசியல் ஈடுபாட்டாளர்களுக்கு அப்பட்டமாய் தெரிந்த விடயம்.

மேலும் பிரபாகரன் தனக்கேற்ற விசுவாசிகளை உருவாக்குவதற்காக தன்சாதி கடந்து மேலும் சாதி குறைந்தவர்களையும் பதவிகளில் இணைத்துக் கொண்டார் என்பது வேறு உண்மை. அது புலிகளின் கையாழுகை தந்திரமும் கூட.

உதாரணமாக பண்டிதர் எனப்படும் ரவீந்திரன் யாழ் அரசியல் பொறுப்பாளராகவும் தமிழ்ச்செல்வன் இயக்க அரசியல் பேச்சாளராகவும் கையாளப்பட்டிருந்தனர். தம்மை தலைவர் மரியாதை செய்து பதவி வழங்கியதற்கு பதிலாக கைகட்டி, வாய் பொத்தி நின்று சேவகம் செய்வார்கள் என்ற புலித் தந்திரத்தின் சமூக ஏமாற்று சிந்தனையின் வழியாகவே பண்டிதரும், தமிழ்ச்செல்வனும் பதவி வழங்கப்பட்டிருந்தனரே அன்றி சாதி பார்க்காத தன்மையினால் அல்ல. மேலும் நாங்கள் அவதானிக்கலாம்- இவர்கள் எல்லாம் பிரபாகரனின் தீவிர விசுவாசிகளாக, வெறிபிடித்த தொண்டர்களாக எள் என்றால் எண்ணையாய் நின்றார்கள்- கிட்டு, மாத்தையா, பொட்டம்மான் சூசை, குமரப்பா (நிர்ப்பந்த கொலை) போன்ற தலைவர்கள் யாரும் தாக்குதற் சமர்களில் உயிரிழந்தவர்கள் அல்ல. ஆனால் பண்டிதர், தமிழ்ச்செல்வன் போன்றோர் தீவிர அடிமைத்தன தலைமை விசுவாசத்தினால் தாக்குதல்களில் தம்மை முட்டாள்தனமாக அழித்துக் கொண்டனர். அந்த விசுவாசத்தனத்தை பெறும் சதி, ஏமாற்று முயற்சியாகவே அவர்களுக்கு பதவிகள் கொடுத்து ஏமாற்றப்பட்டனர். அவர்களும் விசுவாசமாய் தம்மை அழித்துக் கொண்டனர். போராட்ட ஆரம்ப காலங்களில் சிங்கள அரசுகளுடன் பதவிக்கும், புகழுக்கும் பணத்திற்குமாக விசுவாசமாக துரோகிப்பட்டம் வாங்கிய தமிழர்கள் போன்றதே இந்நிகழ்ச்சி.

நிற்க! இந்த சாதி வெறிக் கூட்டமான பிரபாகர அட்டூழியச் சமூகத்தின் திருமணங்கள் பற்றி நாம் அவதானித்தோமானால் சாதி வெறியின் உச்சம் புலப்படும்.

குமரப்பாவை எடுத்துக் கொள்வோம். அவர் உயர்சாதிப் பெண்ணைத்தான் மணமுடித்தார். மேலும் அவர் பற்றிய பெண் திருகுதாளங்கள் மட்டுநகர் மக்களிடம் வெளிப்படை. கிட்டுவை எடுத்தால் அவரும் உயர்சாதிப் பெண்ணையே காதலியாக்கிக் கொண்டார். மேலும் காதலி வீட்டுக்குச் சென்ற போதே வெடிகுண்டுத் தாக்குதலுக்குள்ளாகி தம்மவர்களே எறிந்த வெடிகுண்டுக்காக, ஈபிஆர்எல்எவ் இளைஞர்கள் கந்தன் கருணைப் படுகொலை காதலிக்கு சாகசமாக செய்து காட்டப்பட்டது தனிக் கதை. சூசையை எடுத்துக் கொள்ளுங்கள்- உயர்சாதிப் பெண்ணையே மணந்து கொண்டார். திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பதற்காக கைத்துப்பாக்கி வெடிப்பயமுறுத்தல்கள் ஏற்படுத்தப்பட்டது தனிக்கதை. மாத்தையாவையும் எடுத்துக் கொண்டால் உயர் சாதிப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார் என்பதுதான் உண்மை- இருந்தாலும் அவர் விதவைப் பெண்ணையே திருமணம் செய்தார் என்பதைக் கருத்திற்கெடுக்கலாம். ஏனென்றால் இவர்கள் எல்லோருடனும் ஒப்பிடுகையில் மாத்தையா நெருக்கடியான வாழ்க்கைக்கு ஊடாக வந்தவர் என்பது உண்மையானது. அக்காரணமும் அவர் தனித்து விடப்பட்டு ஒதுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டதற்கான ஒரு காரணமாகும்.

மேலும் தமிழ்ச்செல்வன் கூட உயர்சாதிப் பெண்ணையே மணமுடித்தவர். இங்கே பிரதானமாக உணர்ந்து கொள்ள வேண்டிய விடயம் இவர்கள் அனைவரும் காதல் திருமணமே செய்திருந்தனர். காதல் என்பது மின்சார அதிர்ச்சி போன்றது. அது எங்கும் பாயக் கூடியது. ஆனால் இவர்கள் எல்லோருக்கும் – ஆம் எல்லோருக்கும் உயர்சாதிப் பெண்கள் மீதே இந்த எலெக்றிக் பாய்ச்சல் நடந்திருக்கின்றது. இவர்கள் ஒருவருக்கேனும் இவர்கள் சாதியிலோ அல்லது இவர்களை விடக் குறைந்த சாதியிலோ இந்தக் காதல் வந்து விடவில்லை. ஆம். இந்த மின்சாரப் பாய்ச்சல் கூட உயர் சாதியைப் பார்த்துத்தான் பாய்கிறது. இது அவர்களின் உச்சமான சாதி வெறியின் வெளிப்பாடே.

இந்த சாதிவெறித் தலைவர்களில் மிகவும் உயர்வான சாதி வெறியர் பிரபாகன்.

பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்குமான ஆரம்ப போராட்ட மோதலே காதல் பிரச்சனையாலேயே ஏற்பட்டது. உண்மையில் பிரபாகரன் ஆரம்ப போராட்டத்தில் தூய எண்ணம் கொண்டவராகவே இறங்கியிருந்தார். போராளிகள் காதலிப்பதில்லை- மணமுடிப்பதில்லை என்பதெல்லாம் அவர் எண்ணம். அவ்வாறுமே இருந்தார். ஆரம்பத்தில் தமிழின தேசிய விடுதலைப் போராட்டமானது நீண்ட நாட் போராட்டமாக நிகழ்ந்து விடும் என எதிர்பார்க்கப்படவில்லை. ஓரிரு வருடங்களில் வெற்றி கொள்ளப்படும் என்று எதிர்பார்த்தே இளைஞர்கள் வேகமாக அணிதிரண்டார்கள். அதனால் காதலிப்பதில்லை- மணமுடிப்பதில்லை என்ற சிந்தனை பிரச்சனையற்று இருந்தது. இலங்கை- இந்திய ஒப்பந்தத்துடன் போராட்டம் வெற்றியை எட்டியிருந்தும் – அதனைப் புலிகள் சுக்கு நூறாக்கி தமிழினத்தையே அழிக்குமளவிற்கு கொண்டு சென்றதும் தனிக்கதையாகும்.

நிற்க! போராட்டம் தடம்புரண்டு தொழிலாக மாறிய போதும்- போராட்ட காலம் நீண்டு சென்ற போதும் நிலமைகள் மாறியது. எனவே தலைவர்கள் வசதி வசதியாக மணமுடித்து ஜாலி வாழ்க்கைக்கு தொடங்கினர். இந்த நிலையில் பிரபாகரன் பல்கலைக்கழக உண்ணாவிரதிகளில் ஒருவரான மதிவதனியை அவர் உயர்சாதி என்ற காரணத்தினால் மணமுடித்தார். போராளிகள் மணமுடிப்பதில்லை என்ற கொள்கையை சாதி வெறி காரணமாக மாற்றி திருமணம் செய்து கொண்டார் -திருமணத்திற்கு முன்னமே மதிவதனி கர்ப்பமாய் இருந்தது உலகறிந்தது. ஆனால் அதே பிரபாகரன் இயக்கத்தினுள் காதலித்து கர்ப்பவதியாகிய ஒரே காரணத்திற்காக காதல் ஜோடியொன்றை சுட்டுக் கொன்ற கொடுமையைச் செய்தார். கரும்புலிகள் என்ற போர்வையில் சிறுவர்களை தற்கொலைப் போராளிகளாக அனுப்பி விட்டு பிரபாகரன் மனைவியுடன் சந்தோசமாய் இருந்து பிள்ளைகள் பெற்றிருக்கின்றார் என்பது புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது. இதை குரூரத்தின் உச்சமாகத்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் இந்த வல்வெட்டித்துறை மற்றும் அவர்களைச் சேர்ந்த சாதியிஸத்தினால் தான் இந்த போராட்டம் சுக்கு நூறாக்கப்பட்டதற்கான மற்றுமோர் வெளிப்படையான உதாரணம் வன்னிச் சமரின் போது வெளிநாடுகளில் நடந்த போராட்டங்களை ஆய்வு செய்வதன் மூலம் புரியமுடியும்.

பிரதானமாக பாரிய அளவில் நடந்த லண்டன் வெஸ்ற் மினிஸ்டர் போராட்டங்களை எடுத்துப் பாருங்கள். அங்கே ஒருவர் இருபது நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தார். அவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பிரபாகரனின் ஜாதியை சேர்ந்தவர்- அவருடன் உடனிருந்தவர்களும் அவர்களே. மேலும் இவர்கள் லண்டனில் வல்வெட்டித்துறை சமூகத்தினர் நிறைந்து செறிந்து வாழும் ‘லண்டன் வல்வெட்டித்துறை” என சொல்லப்படுகின்ற ரூட்டிங் பகுதியை சேர்ந்தவரே. இந்த போராட்ட காலப்பகுதியில் தொடர்ந்து அதிகம் பங்கு கொண்டவர்கள் வல்வெட்டித்துறை சமூகத்தவரே. இவர்கள் பிரபாகரன் தமது சாதியையும் ஊரையும் சேர்ந்தவர் என்பதை மட்டும் சிந்தித்தார்களே ஒழிய மக்கள் கொல்லப்படுவதற்கான சூழ் நிலையை பிரபாகரன்தான் ஏற்படுத்தினார் என்பதையும், மக்களை நிர்ப்பந்தமாக துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்து மக்கள் அழிவுக்கு பிரபாகரன் தான் காரணமாக இருந்தார் என்பதையும் தமது சாதி வெறியின் காரணமாக சிந்திக்க தவறி விட்டனர்.

மேலும் இந்தப் போராட்ட நாட்களில் சாப்பாடு, குடிநீர் முதலானவை வல்வெட்டித்துறை சமூகத்தினரால் ரூட்டிங் பகுதியில் இருந்தே எடுத்துச் செல்லப்பட்டன. மற்றும் உண்ணாவிரதத்தை பார்வையிடவும், முடித்து வைக்கவும் வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினரும் வல்வெட்டித்துறை எம்.பி எனச் சொல்லப்படக் கூடிய ரூட்டிங் எம்.பியே. மொத்தத்தில் இந்த வெஸ்ற்மினிஸ்டர் போராட்டமானது VVT சமூகத்தாலேயே நடத்தப்பட்டது.

மேலும் வணங்காமண் சேகரிப்பு பொருட்களும் ரூட்டிங் இல் உள்ள குடோன்களிலேயே முடக்கப்பட்டிருந்ததையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்றும் போராட்டத்தில் அடிக்கடி முகம் காட்டிய அதன் மூலம் தன்னை பிரபலப்படுத்த முயன்ற எம்.பி சிவாஜிலிங்கம் (இவர் 15 வருடங்களுக்கு முன்பு பிரபாகரனால் கொலைசெய்யப்பட ஆள் அனுப்பபட்டவர் என்பது தனிக்கதை-) இப்போது பிரபாகரனை சரி என்று சொல்வதால் இவர் எவ்வாறு பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தப் போகிறார்?. மற்றும் வல்வையை சேர்ந்த காரணத்தினால் மரண தண்டனைக்குரிய இவரே தப்பித்து கொண்டார். அந்த சமூகத்தவர்களுக்கு மட்டும் விதி விலக்குகள் (புலிகளுக்குள்) உண்டு.

சாதிவெறியின் உச்சக்கட்டம் பாருங்கள்- இந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியது பிரபாகரன்தான். தன்சாதியைச் சேர்ந்த சிங்களவன் சிங்களத்தை ஆட்சி செய்வும் தான் தமிழரை அடக்கியாளவும் திட்டமிட்டு மிக உயர்வான உதவிகளை அளவுக்கு மீறி தனக்கு செய்திருந்த யு.என்.பி யையும் உதறியெறிந்து விட்டு சாதி வெறியின் ஓங்காரமாய் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கினார்.

ராஜபக்சவும் பாருங்கள் – பிரபாகரன் போலவே ஓநாய் வெறியெடுத்து பிரபாகரனையே கொன்றொழித்தார். அந்த வெறி இன்றும் நின்று விடாது பிரபாகரன் போலவே எக்காளமிடுகிறார்.

சாதி மற்றும் ஊர் என்ற வெறியின் உச்சக்கட்டம் உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து மக்களுக்கு எது நல்லது என்பதை புரிந்து கொள்ள மறுத்து ஒரு தேசிய இனமே கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் அழிவுக்கு வடிகாலிடப்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் இன்றைய அனைத்து அழிவுகளுக்கும் புலிகளே முழுக் காரணிகள் – அவர்களையும் அழித்தார்கள். அழிவுப் பாதையிலும் தள்ளி விட்டார்கள்.

இன்று ஒன்றுமே இல்லாத ஓவென்ற வெற்றிடமாய் தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டுள்ள நிலையிலும் மிஞ்சிய அற்ப சொற்ப மக்களையும் ஏமாற்றிப் பிழைப்பதற்காக பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் மீண்டும் உயிர்த்தெழுவார் என்றும் சிலிர்த்தெழுவார் என்றும் அவர் மந்திரஜாலம் நிகழ்த்துவார் என்றும் மண்டைக்குள் இல்லாத சில பகுதி மக்களை ஏமாற்ற முயற்சிப்பது இன்றும் அவர்கள் திருந்தத் தயாரில்லாத கேவலமான கெட்ட முயற்சியாகும்.

தயவு செய்து தமிழினம் இனியாவது இனிமேலாவது தவறான சிந்தனைகளையும் தவறுகளையும் ஏற்றுக் கொண்டு அவற்றை மறுதலித்து சாதி வெறி மற்றும் ஊர்வெறிச் சிந்தனைகளைத் தகர்த்து தமிழ்த் தேசிய இனம் என்ற ஒரே அடிப்படையில் தமிழினத்தைக் காக்கவல்ல சூழ்நிலையை தீர்வை நோக்கி நகர்த்த முழு அளவில் இணைந்து கைகோர்த்து செயற்பட வேண்டிய உண்மையை உணர்ந்து கொள்வோம். மேலும் 70 ம் 80 ம் ஆண்டு காலப் பகுதியை ஒத்ததான துரோகத்தன அரசியல் ஜனநாயகம் என்ற வார்த்தைகளின் ஊடாக நுழையும் என்பதையும் உணர்ந்து அவற்றிற்கெதிராகவும் திடமாயும் செயற்படுவோமாக.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்!

உலக மக்கள் தொகை நாள் ( World Population Day) – புன்னியாமீன்

world-population-day-11-july.jpgஉலக மக்கள் தொகை நாள் என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது. “பொருளாதார நெருக்கடிக்கு ஈடுகொடுத்தல்; பெண்களுக்காக நிதியீடு செய்வது ஏன் என்பது மிகச் சிறந்த தெரிவு’ என்பது இவ்வாண்டின் தொனிப் பொருளென ஐ.நா. சனத் தொகை நிதியம்(UNFPA) பிரகடனப்படுத்தியுள்ளது.

(UNFPA) நிறைவேற்றுப் பணிப்பாளர் தோரயா அஹ்மத் ஒபெய்ம் உலக மக்கட் தொகை தினம் தொடர்பாக விடுத்துள்ள செய்தியில்; “இன்று அபிவிருத்தியடைந்து வரும் உலக நாடுகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான சிக்கல்களே பெண்களைப் பிரதானமாகக் கொன்று வருகின்றன. மேலும் தாய்மார் மரண வீதமே உலகில் மிகப்பெரிய அளவில் ஆரோக்கிய நியாயமின் மையாக விளங்குகின்றது. என்றிருந்தார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி உலக மக்கள் தொகை 500 கோடியை எட்டியது. மக்கள் தொகைப் பெருக்கத்தின் அபாயத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை 1987 ஆம் ஆண்டு முதல் ஜூலை 11 ஆம் திகதியை (World Population Day, recognized by the UN ) உலக மக்கள் தொகை தினமாக அறிவித்தது. 1989 முதல் இத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. மக்கள் தொகை பெருக்கத்தின் தீமைகளையும், சிறுகுடும்ப நெறியின் நன்மைகளையும் எடுத்துரைப்பது இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.

பிறப்பு மற்றும் இறப்பு வீதத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி 2009 ஜூலை 10 ம் தேதி உலகின் மக்கள் தொகை 6,770,073,396 (00:51 GMT (EST+5) Jul 10, 2009) அதாவது 677 கோடியாகும். சராசரியாக உலக மக்கள் தொகை நிமிடத்திற்கு 150 பேர், மணிக்கு 9000 பேர், நாளைக்கு 2,160,000 பேர் என்ற வேகத்தில் அதிகரித்து வருவதாக மதிப்பீட்டின் பிரகாரம் கூறப்படுகின்றது.

உலக சனத்தொகை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகைக் கல்வி நிறுவகத்தின் அறிக்கை பிரகாரம் கி.பி. 01இல் உலக சனத்தொகை சுமார் 20 மில்லியன்களாக காணப்பட்டது. இத்தொகை கி.பி. 1000ஆம் ஆண்டில் 275 மில்லியனாகவும், கி.பி. 1500ஆம் ஆண்டில் 455 மில்லியனாகவும், 1650ஆம் ஆண்டில் 500 மில்லியனாகவும், 1750ஆம் ஆண்டில் 700 மில்லியனாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரித்த மக்கள் தொகை 1804ஆம் ஆண்டில் 1 பில்லியனாகவும், 1850ஆம் ஆண்டில் 1.2 பில்லியனாகவும், 1900 ஆம் ஆண்டில் 1.6 பில்லியனாகவும், 1927ஆம் ஆண்டில் 2 பில்லியனாகவும், 1950ஆம் ஆண்டில் 2.55 பில்லியனாகவும், 1960ஆம் ஆண்டில் 3 பில்லியனாகவும், 1975ஆம் ஆண்டில் 4 பில்லியனாகவும், 1987ஆம் ஆண்டில் 5 பில்லியனாகவும் உயர்ந்தது. இத்தொகை 1990ஆம் ஆண்டில் 5.3 பில்லியனாகவும், 1995ஆம் ஆண்டில் 5.7 பில்லியனாகவும், 1999ஆம் ஆண்டில் 6பில்லியனாகவும், 2006ஆம் ஆண்டில் 6.5பில்லியனாகவும் உயர்ந்து தற்போது (2009 ஜுலை) 6.76 பில்லியனாக ஆகியுள்ளது. 2012ஆம் ஆண்டில் 7 பில்லியனாகவும், 2020ஆம் ஆண்டில் 7.6 பில்லியனாகவும், 2030ஆம் ஆண்டில் 8.2 பில்லியனாகவும், 2040ஆம் ஆண்டில் 8.8பில்லியனாகவும், 2050ஆம் ஆண்டில் 9.2 பில்லியனாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. பொதுவாக நோக்குமிடத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைத் தொடர்ந்து சனத்தொகையானது மிக வேகமாக பல மடங்குகள் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடியும்.

இன்று உலகளாவிய ரீதியில் அதிக சனத்தொகைக் கொண்ட 15 நாடுகளை எடுத்துக் கொள்ளுமிடத்து மக்கள் தொகை கடிகார (World Population Clock) மதிப்பீட்டின் படி பின்வருமாறு அமைந்துள்ளது.

1. சீனா 1,331,630,000 (19.67%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
2. இந்தியா 1,165,930,000 (17.22%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
3. ஐக்கிய அமெரிக்க 306,829,000 (4.53%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
4. இந்தோனேசியா 230,512,000 (3.4%) ஜுன் 24, 2009 மதிப்பீட்டின்படி
5. பிரேசில் 191,437,000 (2.83%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
6. பாக்கிஸ்தான் 166,826,000 (2.46% ) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
7. பங்களாதேஸ் 162,221,000 (2.4%) ஐ.நா மதிப்பீட்டின்படி
8. நைஜீரியா 154,729,000 (2.29%) ஐ.நா மதிப்பீட்டின்படி
9. ரஸ்யா 141,832,000 (2.1%) ஜுலை 5, 2009 மதிப்பீட்டின்படி
10. ஜப்பான் 127,580,000 (1.89%) மே 1, 2009 மதிப்பீட்டின்படி
11 மெக்சிகோ 109,610,000 (1.62%) ஐ.நா மதிப்பீட்டின்படி
12. பிலிப்பைன்ஸ் 92,226,600 (1.36%) ஜனவரி 1, 2009 மதிப்பீட்டின்படி
13. வியட்னாம் 88,069,000 (1.3%) ஐ.நா. மதிப்பீட்டின்படி
14. ஜெர்மனி 82,062,200 (1.21%) ஜனவரி 1, 2009 ஐ.நா. மதிப்பீட்டின்படி
(15) எத்தியோப்பியா 79,221,000 (1.17%) ஜுலை 5, 2008 மதிப்பீட்டின்படி ஆகியன அமைந்துள்ளன.

மேற்குறிப்பிட்ட அட்டவணைப்படி உலக சனத்தொகையில் தெற்காசிய நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஸ் ஆகியன கூடிய சனத்தொகைக் கொண்ட நாடுகளாக இருப்பதை அவதானிக்கலாம். 2009ஆம் ஆண்டு ஜுலை 05ம் திகதியின் மதிப்பீட்டின் பிரகாரம் இப்பட்டியலில் இலங்கை 56ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை சமூகக் குறிகாட்டிகள் பலவற்றில் மாறுபட்ட போக்கைக் கொண்ட நாடாக விளங்குகின்றது. இங்கு வருடாந்த இயற்கை அதிகரிப்பு வீதம் 1.1 ஆகவும், பிறப்புவீதம் 1000 பேருக்கு 17.9 வீதமாகவும், இறப்பு வீதம் 1000 பேருக்கு 6.6 வீதமாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் 2001 ஆம் ஆண்டு குடித்தொகை கடிகாரத்தின் பிரகாரம் 18,797,257 தொகையாகவும், 2007 ஆம் ஆண்டில் 20,010,000 தொகையாகவும் இருந்த குடித்தொகை தற்பொழுது 2009ஆம் ஆண்டு மதிப்பின் படி 21,128,772 தொகையாக உயர்வடைந்துள்ளது. இங்கு ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 வயதாகவும், பெண்களின் சராசரி ஆயுட்காலம் 78 வயதாகவும் காணப்படுகின்றது.

இலங்கையின் சராசரிக் குடித்தொகை வீதத்தினை நோக்கும் போது, 1995 முதல் 2000 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 1.37 வீதமாக இருந்த வளர்ச்சி வீதம் அண்மைய தரவுகளின் படி 1.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது. இது 2050 ஆண்டில் 0.45 வீதமாக மேலும் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் கருவளவீதமானது 1965 ஆம் ஆண்டில் 5.19 வீதமாகவும், 1975 ஆண்டில் 3.6 வீதமாகவும், 1995 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 1.96 வீதமாகவும் காணப்படுகின்றது. இவ்வாறு குறைவடையும் போக்கானது, பெண்கள் கல்வியில் ஈடுபாடு, திருமண வயதில் ஏற்பட்ட மாற்றம், குடும்பக் கட்டுப்பாடுகள் பற்றிய விழிப்புணர்வு, பெண்களின் தொழில் அந்தஸ்து அதிகரிப்பு போன்ற காரணங்களாக அமைந்ததெனலாம்.

உலகளாவியரீதியில் தற்பொழுது வளர்ச்சியடைந்து வரும் குடித்தொகையானது, குடித்தொகைக் கடிகாரத்தின் 2009 ஆண்டு கணிப்பின் படி, குடித்தொகை வளர்ச்சி வீதமானது 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றது.  எனினும் 2050 ஆம் ஆண்டில், குடித்தொகை வளர்ச்சி 0.5 வீதமாக குறைவடைகின்ற பொழுதிலும், உலக சனத்தொகையானது 900 கோடியாக பதிவாகும் என அமெரிக்க குடித்தொகை மதிப்பீட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

குடித்தொகையானது இதே வேகத்தில் வளர்ந்து கொண்டு செல்லுமாயின் 2075 ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் 2200 ஆம் ஆண்டில் 1,200 கோடியாகவும் உயரும் என குடித்தொகை வளர்ச்சி தொடர்பான அறிக்கைகள் பலவற்றில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கான பிரதான காரணங்களாக பிறப்பு வீதம், இறப்பு வீதம் என்பன அமைந்துள்ளன. உலக மக்கள் தொகை நிர்ணயப்படி பிறப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்களின் கருவலம் பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கின்றது. இனப்பெருக்க திறன்கொண்ட பெண்கள் பெறும் உயிருள்ள குழந்தைகளின் எண்ணிக்கை ‘கருவலம்” எனப்படும். ஓராண்டில் ஆயிரம் மக்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பிறப்பு வீதம் எனப்படும். நாடுகளின் பிறப்பு வீதமானது உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் பிரிக்கும்போது வருகின்றது. பிறப்பு வீதத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக வயது, மதம், கல்வி நிலை, பொருளாதார நிலை, இருப்பிடம் போன்றன அமைகின்றன.

குறித்தொரு ஆண்டில் ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்களில் ஆயிரம் பேருக்கு மரணம் அடைகின்றோரின் எண்ணிக்கை ‘இறப்பு வீதம்” என்பர். நாடுகளின் இறப்பு வீதம் எனும்போது இறந்தோரின் மொத்த எண்ணிக்கையை ஆயிரத்தால் பெருக்கி நாட்டின் மொத்த சனத்தொகையால் வகுக்கும்போது பெறப்படும் எண்ணிக்கையாகும். பொதுவாக இறப்பு வீதத்தைவிட பிறப்பு வீதம் அதிகமாகக் காணப்படுவதே குடித்தொகைப் பெருக்கத்திற்கான காரணமெனலாம். நவீன காலத்தில் மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றம் பெருமளவுக்கு இறப்பு வீதத்தைக் கட்டுப்படுத்தியுள்ளது.

பூமியில் உள்ள வளங்கள் 200 கோடி மக்களுக்கு மட்டுமே போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகப்படியான மக்கள் தொகையால் சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு நாளும் பூமியின் வளங்களை புதிதாக இரண்டு லட்சம் பேரோடு பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் வாழும் பூமிக்கு நாமே ( மனிதர்கள் ) பாரமாகிவிட்டோம் எனும் நிலைக்கு மனித சனத்தொகை அதிகரித்துவிட்டதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். இந்த சனத்தொகை அதிகரிப்பானது பூமியில் இருக்கும் பயன்பாட்டுக்குரிய வளத்தை விட அதிகமாக உருவாகி வருவதால் குடிநீர் மற்றும் உணவு வளப்பிரச்சனை என்பது உலகில் விரைந்து அதிகரிக்கும் நிலை இருந்து வருகிறது.இதனை ஈடு செய்ய நீர் முகாமைத்துவப் பயன்பாடு மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப் பயிர்களின் உற்பத்திகளை அபரிமிதமாக அதிகரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இருப்பினும் இது விடயத்தில் சிக்கல்களும் நிறைந்திருக்கின்றன.

பூமியின் கொள்ளளவை விஞ்சிய உலக சனத்தொகை அதிகரிப்பானது ஆபத்தான விளைவுகளையே உருவாக்கும் என்பதால் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலை பூமியில் தோன்றி இருக்கின்றது என்கின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.மனித இனத்தின் பெருக்கம் பூமியின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பையும் அதிகரிக்க வகை செய்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை பெருக்கத்தின் பாதிப்பு அபிவிருத்தியடைந்த நாடுகளிலும் பார்க்க அபிவிருத்தியடையாத நாடுகளிலே அதிகமாகக் காணப்படுகின்றன. காரணம் உலக வளத்தில் 80 சதவீதத்தை வைத்திருக்கும் அபிவிருத்தியடைந்த நாடுகளான செல்வந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகை வெறும் 20 சதவீதம்தான். மாறாக வெறும் 20 சதவீத வளத்தைக் கொண்டிருக்கும் அபிவிருத்தியடையாத நாடுகளான ஏழை நாடுகளில் உள்ள மக்கள் தொகையோ 80 சதவீதம்.

ஒரு குடும்பத்தில் எவ்வளவு தான் பொருளாதார வளம் இருந்தாலும் குடும்பத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தவறினால் வளம் வறண்டு விடும். வாழ்வு வீழ்ந்து விடும். அளவோடு பெற்றால் தான் வளமோடு வாழ முடியும். வீட்டுக்குப் பொருந்தும் இந்த நியதி நாட்டுக்கும் பொருந்தும்.

ஜூன் 2009இல் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ரஸ்யா, இங்கிலாந்து ஆகிய ஜி.8 நாடுகளின் மாநாடு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ‘உலக வறுமையும், பற்றாக்குறையும்” என்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் ஜொசெர்சின் கூறியதாவது உலகில் உள்ள ஆறு பேரில் ஒருவர் பசிக்கொடுமைக்கு உள்ளாகிறார். உலகில் 6 விநாடிக்கு ஒரு குழந்தை போதிய சத்துணவின்மையினால் இறக்கிறது. ஆப்பிரிக்க மண்டல நாடுகள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது போன்ற நிலை கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் இருந்ததில்லை. இதே நிலை நீடித்தால் பட்டினிச்சாவு ஆபத்து ஏற்படும். மனிதாபிமான அவலத்தின் விளிம்பில் உலகம் உள்ளது. இதனை எதிர் கொள்ள முழுமையாக நன்கொடைகளையே நம்பியுள்ளோம்.” என்றார். இக்கருத்து இவ்விடத்தில் ஆழமாக ஆராயப்படல் வேண்டும்.
2012 இன் ஆரம்பத்தில் உலக சனத்தொகை 700 கோடியை எட்டிவிடுமெனவும் 2050 இல் 900 கோடியைத் தாண்டி விடுமெனவும் ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதிகளவு சனத்தொகைப் பெருக்கம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும். 2010 – 2050 வரையான காலப்பகுதியில் உலக சனத்தொகையின் அரைப்பங்கை கொண்டதாக 9 நாடுகள் இருக்குமென கூறப்படுகிறது. அதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகியவை அடங்கியுள்ளன.

ஏனைய நாடுகள் நைஜீரியா, எதியோப்பியா, கொங்கோ குடியரசு, தான்சானியா ஆகியவை அதிகளவு சனத்தொகையை கொண்ட நாடுகளாக இருக்கும். அண்மைய மதிப்பீடுகளில் பாரிய மாற்றங்கள் இல்லையென்று பொருளாதார, சமூக விவகாரத் திணைக்களத்தின் குடித்தொகை பிரிவின் பணிப்பாளர் ஹானியா ரிவிசன் தெரிவித்துள்ளார். 2050 இல் உலக சனத்தொகை 901 கோடியாயிருக்குமென மதிப்பிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். உலக சனத்தொகை எதிர்பார்ப்புகள் தொடர்பாக 2008 இற்கான மீளாய்வு அறிக்கையை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

பெண் ஒருவருக்கு 2.5 பிள்ளைகள் என்ற விகிதத்தில் தற்போது உலகளாவிய ரீதியில் பிறப்பு வீதம் உள்ளது. இப்போதிலிருந்து 2050 வரை பெண் ஒருவருக்கு 2.1 பிள்ளைகள் என்ற விகிதத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடையுமென கணிப்பிடப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார். மிகக்குறைந்தளவு வளர்ச்சியடைந்த 49 நாடுகளில் சனத்தொகை வேகமாக அதிகரித்துவருகிறது. வருடாந்தம் 2.3 வீதத்திற்கு சனத்தொகை பெருகி வருவதாக குடித்தொகை மதிப்பீட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

வறுமை, வேலையின்மை, அடிப்படைச் சுகாதார வசதியில்லை. சுற்றுச்சூழல் கேடு, தண்ணீர்ப் பஞ்சம் போன்றவற்றிலிருந்து வன்முறை, கொலை, கொள்ளை வரையிலாக அனைத்தும் அளவுக்கதிகமான மக்கள் தொகைப் பெருக்கத்தின் பக்க விளைவுகளே என்ற உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் வனவளம் அருகி, மண் அரிப்பு பெருகி சுற்றுச்சூழல் சீர்கெடுகிறது. கான்கிரீட் காடுகளின் வளர்ச்சியால் பயிர் காடுகளுக்கான நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கிராம மக்கள் பிழைப்புக்காக நகரத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கே குடிசைகள் பெருகி சுற்றுச் சூழல் சீர் கெடுகிறது. குடிநீர்ப் பற்றாக்குறை, மின்சாரப் பற்றாக்குறைஇ போக்குவரத்து நெரிசல், மருத்துவமனைகளில் கூட்டம், பள்ளிக்கூடங்களில் இடமின்மை, போன்ற பல்வேறு பிரச்சனைகளால் நகரங்கள் நரகங்களாகின்றன.

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை நேரடியாக நோக்குவோம். அவை அடிப்படையில் உணவுப் பிரச்சினை, தொழில் பிரச்சினை, வதிவிடப் பிரச்சினை என வகுக்கலாம். கல்வி வசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி முதலிய சமூக நலச் சேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளென பல குடித்தொகை பிரச்சினைகள் தலைதூக்கியிருக்கின்றன. இவற்றினால் அதிகளவில் பாதிக்கப்படுவன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளே.

குடிசனப் பெருக்கத்தினால் இன்றைய உலகம் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை உணவுப் பிரச்சினையாகும். அதிகரித்துவிட்ட மக்களுக்கு போதிய உணவுமில்லை. ஊட்டமான உணவுமில்லை. உலகில் மக்கள் தொகை மூன்றிலொரு பங்கினர் உணவுப் பற்றாக்குறையினால் தவிக்கின்றனர். மூன்றிலொரு பங்கினருக்கு மாத்திரமே போதுமானளவு உணவு கிடைக்கின்றது. அத்துடன், வேலையில்லாப் பிரச்சினை குறைவிருத்தி நாடுகளில் அதிகளவில் தலைதூக்கியுள்ளன. அதனால்தான் அண்மைய ஆண்டுகளில் பலவிதமான தொழில்களை நாடி இலங்கை, இந்திய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவில் இடம்பெயர்கின்றனர். மூளைசாலிகள் வெளியேறுவதும், மனிதவலு வேளியேறுவதும் ஒரு நாட்டின் ஏற்பட்டிருக்கும் வேலையில்லாமையினாலும் ஊதியக் குறைவினாலுமாகும். பொதுவாக பயிர்ச்செய்கை பொருளாதாரத்திலேயே தொழில் பிரச்சினை அதிகளவு காணப்படுகிறது. அதிகரிக்கும் மக்கட் தொகைக்கு வேலை வழங்கும் திறன் பயிர்ச்செய்கைக்கு இல்லை. அதனால்தான் குறைவிருத்தி நாடுகள் இன்று கைத்தொழில் ஆக்கங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று முக்கியமாக நகர்ப்புறங்களில் வதிவிடப் பிரச்சினைகள் தோன்றியிருக்கின்றன. மக்கள் தொழில் நாடி நகரங்களில் குடிபெயருவதால் நகரங்களில் இருப்பிடமின்மை உருவாகின்றது. நியுயோர்க், லண்டன், ஹொங்கொங், பரிஸ் போன்ற பெரிய நகரங்களில் மாத்திரமன்றி கொழும்பு போன்ற சிறிய நகரங்களிலும் வதிவிடப் பிரச்சினைகள் உருவாகுகின்றன. அதனால்தான் வானளாவிய மாடிக்கட்டடங்கள் இந்த நகரங்களில் கட்டப்பட்டு வருகின்றன. பண்டைய காலம் முதலே குடித்தொகைப் பிரச்சினை பொருளாதார புவியியல் அறிஞர்களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது. இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து அறிஞர்கள் மக்கள் தொகைக் கோட்பாடுகளை விஞ்ஞானபூர்வமாக உருவாக்கியுள்ளனர்.

மேலும், சனத்தொகை பிரச்சினை உக்கிரமடைய உலகக் குடிப்பரம்பலும் ஒரு காரணமாக அமைகின்றது. கிழக்காசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் வடக்கில் அமெரிக்க நாடுகளிலும் சனத்தொகை பரம்பல் அதிகரிப்புக்கான காரணங்களாக பயிர்ச்செய்கைக்கு உகந்த விளைநிலங்கள் காணப்படுவதும், உகந்த காலநிலை காணப்படுவதும் பிரதான காரணிகளாக அமைகின்றன. அதேநேரம், அதிகக் குளிர்ப் பிரதேசங்கள், அதிக வெப்பப் பிரதேசங்கள்ää அதிக ஈரழிப்பான பிரதேசங்கள், அதிக உயரமான பிரதேசங்களில் சனத்தொகைப் பரம்பல் மிக ஐதாகக் காணப்படுகின்றது.

மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து இரு வேறு கருத்துக்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. ‘பிறக்கும் குழந்தை வயிரோடு மட்டும் பிறக்கவில்லை. உழைப்பதற்கு இரு கரங்களோடு பிறக்கிறது’ இது சமவுடமைவாதிகளின் கருத்தாகும். அதாவதுää பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சமவுடமைவாதம் மூலதனமாகவே கருதுகின்றது. மறு சாரார். ‘கரங்கள் உழைப்பது சில காலம்தானேஇ ஆனால் காலம் முழுக்க வயிற்றுக்கு சோறிட வேண்டுமே’ என்று வேதனை கொள்கிறது இது முதலாளித்துவவாதத்தின் அடிப்படை. ‘ஒரு ஜோடிக் கரங்கள் பல ஜோடி வயிற்றுக்கு காலமெல்லாம் காப்பாற்றுமே’ என்ற நம்பிக்கையை பின்னைய கருத்து ஏற்படுத்துகின்றது. இதை வேறுவிதமாகக் கூறும்போது பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் சுமையாகவே கொள்ளப்படுகின்றது.

அறியப்பட்ட வளங்களை கணக்கில் கொண்டு உலக மக்கள் தொகை மிகையாக (Over Population) கருதப்படுகிறது. நாளைய தினம் மனிதனின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் இயற்கையின் இரகசியங்கள் முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு புதுப்புது வளங்கள் கண்டறியப்படுமானால் இருக்கும் இந்த மக்கள் தொகை குறைவானதாக (Under population) கருதப்படும் நிலை ஏற்படக்கூடும்.

அதே போல மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் கேடுகளை விட மக்கள் தொகை குறைந்துவிட்டால் அது பேராபத்தில் முடிந்து விடும் என்ற கணிப்பும் இருக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டின் காரணமாக உழைக்கும் மகளின் எண்ணிக்கை குறைந்து, ஓய்வெடுக்கும் மூத்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இவையனைத்தும் எதிர்காலத்தில் நிலவும் சமூக, பொருளாதார, இயற்கை சூழலைப் பொறுத்தது. இன்றைய சூழலில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொகை ஒரு நாட்டிற்குச் சொத்தா? அல்லது சுமையா? என்றால் தொழிலாளர்களின் தேவை பெருமளவில் இருக்கும். சில நாடுகளுக்கு வேண்டுமானால் அது இருக்கிறது என்பதே உண்மை. அதன் பொருட்டே சிறுகுடும்ப நெறியை பின்பற்றுவோருக்கு அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் அளிக்கிறது.

சீனாவில் 6 தடவை நிலநடுக்கம் 18 ஆயிரம் வீடுகள் தரை மட்டம்

china_yunnan_.gifசீனாவில் உள்ள யுன்னன் பிராந்தியம், தென்மேற்கு சீனா ஆகிய இடங்களில் நேற்று இரவு ஆறு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6 ரிச்டர் அளவில் ஏற்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 600க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனரென சீனா அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகியதுடன் 75 ஆயிரம் வீடுகள் சேதமடைந்ததாக ஷிங்குவா செய்திச் சேவை தெரிவித்தது.

நிலநடுக்கத்தின் பின்னர் 9 தடவைகள் சிறு அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இது மூன்று தொடக்கம் 4.1 ரிச்டர் அளவீடாக இருந்த தென அமெரிக்க பூகற்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இடம்பெயர்ந்தோரை தங்கவைக்கவென 5000 கூடாரங்கள் அவசியமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4000 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் சுமார் 1000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்ட யுன்னன் பிரதேசம் மலைப்பாங்கான தென்பதால் சுமார் 4 இலட்சம் பேரை அங்கிருந்து அகற்றி வேறு இடங்களில் தங்கவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு சிக்பொன் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் 90 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் 3 இலட்சத்து 75 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர்.

முந்தைய சேத விபரங்களை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்கிறது ஐ.நா.

110709gordon.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் வன்னியில் கடமையாற்றிய மருத்துவர்களின் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு ஏற்றவாறு பொதுமக்கள் சேதம் தொடர்பில் தாம் வெளியிட்டிருந்த விபரங்களில் மாற்றம் செய்யப்போவதில்லை என இலங்கையில் உள்ள ஐ.நா. பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

வன்னிக் களமுனையில் யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் காயங்கள் குறித்த தமது தகவல்களில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் கோர்டன் வைஸ் வலியுறுத்தியுள்ளார்..

புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் சர்வதேச ஊடகங்களுக்கு மிகைப்படுத்திய தகவல்களை வழங்கியதாக வன்னி மருத்துவர்கள் அண்மையில் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டிருந்தனர்.

தவிர, லண்டனிலிருந்து வெளிவரும் டைம்ஸ் பத்திரிகையில், போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வவுனியா நிவாரண முகாம்களில் ஒரு வாரத்துக்கு 1400 பேர்கள் இறக்கிறார்கள் என்ற மதிப்பீட்டுடன் தாங்கள் உடன்படவில்லை என்றும் கோர்டன் வைஸ் குறிப்பிட்டுள்ளார்.

இடம்பெயர் மாணவரின் உயர் கல்வி மேம்பாட்டுக்கு விசேட திட்டம் – சார்க் சிறுவர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து பிரதமர் தகவல்

pmsrilaka.jpgஇடம் பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மேம்பாட்டுக்கென 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டமொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார். சார்க் பிராந்திய நாடுகளிலுள்ள 18 வயதுக்குக் கீழ்பட்ட 50 கோடி சிறுவர்களின் எதிர்கால கனவுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியது எமது பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்கள் மட்ட நான்காவது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இலங்கை சிறுவர் மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சர் திருமதி சுமேதா ஜி. ஜயசேனவின் தலைமையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிதமர் மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் மூலம் எமது நாட்டின் சிறுவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் கண்டு வந்த வன்முறைகளுக்கும், அழிவுகளுக்கும் இப்போது முடிவு கட்டப்பட்டுள்ளது. எமது தேசத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால்தான் பல தியாகங்களுக்கு மத்தியில் எமது படைவீரர்கள் பெற்றுத்தந்த வெற்றி அர்த்தமுள்ளதாகும்.

பயங்கரவாதம் காரணமாக மிகமோசமாக பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு வடக்கின் வசந்தம் என்ற புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மாணவர்களின் உயர் கல்வி வசதிகளை மேம்படுத்துவதற்கு 1058 மில்லியன் ரூபா செலவில் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

சார்க் பிராந்தியத்தின் சிறுவர்கள் குறித்த இந்த 4வது மாநாட்டில் ஒரு முக்கிய விடயத்தை நாம் மறந்துவிட முடியாது. தெற்காசியாவின் சனத் தொகையில் 40 வீத மானவர்கள் 18 வயதுக்கு கீழ்பட்டவர்கள் என்பதை நான் நினைவுபடுத்திக் கொள்கின்றேன். இது எண்ணிக்கை அடிப் படையில் சுமார் 50 கோடியாகும்.

50 கோடி சிறுவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். இன்று நாம் எந்தளவுக்கு எமது கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அதைப் பொறுத்துத்தான் எமது எதிர்கால சந்ததியின் அபிவிருத்தியும் வளர்ச்சியும் அமைந்திருக்கும்.

சர்வதேச சிறுவர் உரிமைகள் சாசனம் அனைத்து சார்க் நாடுகளாளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்களுக்கான எமது வேலைத்திட்டங்கள், கொள்கைகள், விளக்கங்கள் என்பனவற்றை வடிவமைத்துக் கொள்ள நல்லதோர் களம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டங்களில் எமது மக்களுக்கான வறுமை ஒழிப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம் என்றார்.

இன்றும், நாளையும் வவுனியாவில் நடமாடும் சேவை

வவுனியாவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள மக்கள் நடமாடும் சேவையில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சும் பங்கு பற்றி மக்களுக்கு சேவையாற்ற உள்ளது.

இவ்வமைச்சினால் கையாளப்படும் விடயங்கள் சம்பந்தமாக பொது மக்களிடமி ருந்து கிடைக்கும் கோரிக்கைகள், முறைப்பாடுகள் என்பன கவனத்திற்கு எடுக்கப்பட்டு அவை சம்பந்தமாக உடனடி நிவாரணங்கள் வழங்கமுடியுமாயின் அவை வழங்கப்படும்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு பிரதி அமைச்சர் எம். எஸ். செல்லச்சாமியின் தலைமையில் அவரது பிரத்தியேக செயலாளர், அமைச்சின் செயலாளர் மற்றும் தபால் மா அதிபர் அவரது உதவியாளர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

பரீட்சை மீள்மதிப்பீட்டு விண்ணப்பம் பல்கலை நுழைவை பாதிக்காது – பாராளுமன்றில் அமைச்சர் சுசில் தெரிவிப்பு

susil1111.jpgக.பொ.த.  உயர்தரப் பரீட்சைன் “இஸட்” புள்ளி பெறு பேறுகளின் அடிப்டையிலேயே பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகிறார்களென கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேற்று மீளாய்வு காரணமாக எந்த மாணவருக்காவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக எமக்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அது குறித்து நியாயமான தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க நேற்று சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்த கவனயீர்ப்புக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது: 2008ம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 3ம் திகதி வெளியிடப்பட்டது. இந்த பெறுபேறுகள் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் ‘இஸட்’ புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்பட்டன. முதலாவது மதிப்பீடு செய்வதற்கு நான்கு மாதங்களும் ஒன்பது நாட்களுமே எடுத்துக் கொள்ளப்பட்டன. இப்பெறுபேறுகளில் திருப்தியடையாத மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீட்டு கோரிக்கையின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட மீள் மதிப்பீடு காரணமாக 1.28 சதவீத பெறுபேறுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மீள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பப் பத்திரங்களுக்குரிய விடைத்தாள்களே மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

ஆகவே சகல பெறுபேறுகளிலும் பாரிய மாற்றங்கள் இடம்பெற வாய்ப்பில்லை. முதலாவது மதிப்பீட்டு க்குட்பட்ட பெறுபேறு மீள்பரிசீலினையின்போது திருத்தப் படுமாயின் புள்ளிகளிலும் மாற்றம் ஏற்பட்டு மாணவர்கள் பெறுகின்ற தரங்களிலும் வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. இது ஏனைய மாணவர்கள் பெற்றிருக்கும் தரங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார்.

மக்கள் வங்கி உதவி முகாமையாளர் கொலை; 5 இராணுவத்தினர் கைது

கொள்ளுப்பிட்டி, லிபர்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளர் கொலையுடன் தொடர்புடைய இராணுவ கெப்டன் ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினரை சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த கெப்டன் ஒருவர், இரண்டு கோப்ரல்கள் மற்றும் இரண்டு இராணுவ வீரர்களே கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:-

கடந்த ஏப்ரல் மாதம் 4ம் திகதி வக்ஓயா, லபுகம வீதி, 6/1 இலக்க வீட்டுக்கு அருகிலுள்ள பாலம் ஒன்றின் அருகிலிருந்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டெடுத்தனர். உயிரிழந்தவர், அம்பலாங்கொடை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாஸா மக்கள் வங்கி கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றும் குணசிங்க பிரேமதிலக்க எனவும் அடையாளம் காணப்பட்ட போதிலும் கொலையுடன் தொடர்புடையவர்கள் அடையாளங்காணப்படவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சகோதரர்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்டுவந்த கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினர் கெப்டன் உட்பட ஐந்து இராணுவ வீரர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட வங்கி உதவி முகாமையாளருடன் மிகவும் நெருக்கமான உறவு வைத்துள்ள கப்டன் கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வான் ஒன்றில் நான்கு இராணுவத்தினருடன் முகாமையாளரையும் இணைத்துக் கொண்டு அவிஸ்ஸாவெல்ல பிரதேசத்திற்கு சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

வானில் சென்று கொண்டிருந்த கெப்டன் இடைவழியில் இறங்கிக் கொள்ள ஏனைய நால்வரும் தமது காலில் போடும் மேஸ்களை பயன்படுத்தி வங்கி உதவி முகாமையாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வக்ஓயா பிரதேசத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக எஸ். எஸ். பி. தெரிவித்தார்.

உதவி முகாமையாளரின் கழுத்திலிருந்து தங்கச் செய்ன் மற்றும் கைச்செய்ன்களை இவர்கள் வங்கி ஒன்றில் அடகு வைத்துள்ளனர் அதனையும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை கொலை செய்யப்பட்டவர் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியை பொலிஸார் தேடிவருவதாக தெரிவித்த அவர், விசாரணைகளை தொடர்ந்தும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் முன்னெடுத்து வருவதாகவும் குறிப் பிட்டார்.

ரவி கருணாநாயக்கவின் கடவுச்சீட்டு முடக்கம் – ரூ. ஒரு இலட்சம் ரொக்கப் பிணை; ரூ 10 இலட்சம் சரீரப்பிணை

ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க, நாணயமாற்று கட்டுப்பாட்டுச் சட்டவிதிகளை மீறிச் செயற்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது. ரவி கருணாநாயக்கவினதும் மேலும் இரு பிரதிவாதிகளினதும் கடவுச் சீட்டுக்களைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பிரதிவாதிகள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுவித்தார்.

ரவி கருணாநாயக்க ஒரு முன்னணி அரசியல்வாதி என்பதால் அவரது கடவுச்சீட்டை முடக்க வேண்டாமென அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அரச சட்டவாதி திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்தவேண்டுகோளை நீதிபதி நிராகரித்ததுடன், நேற்று ரவி கருணாநாயக்க, கடவுச் சீட்டை நீதிமன்றத்திற்குக் கொண்டுவரவில்லையென அவரது சட்டத்தரணி தெரிவித்ததால், திங்கட்கிழமை அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டுப் பிரஜையான ராஜ் ராஜரட்ணமும் – கலன் இன்டர்நஷனல் மாஸ்டர் பஃண்ட் நிறுவனமும் அனுப்பிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கியின் அனுமதியின்றி அவர்களின் சார்பில் ஸ்ரான்டர்ட் சார்ட்டட் வங்கியின் கிருலப்பனை கிளையில் வைப்பில் இடுவதற்கு ரெக்ஷியா கோன்ப்ரேட் நிறுவனத்திற்கு உதவியும், ஒத்தாசையும் புரிந்ததாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இதனடிப்படையில் இவருக்கும் குறித்த நிறுவனத்தின் ஆலோசகர் லிங்கோன் பியசேனவுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 2006 – 2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மத்திய வங்கியின் அனுமதி பெறாமல் கொழும்பு யூனியன் வங்கியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இந்தப் பணம் அமெரிக்காவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஷியா கோப்ரேட் கொன்சல்டன்ட் நிறுவனத்தின் நிர்வாக முகாமையாளரான ரஞ்சித் தி சில்வா நிறுவனத்தின் சார்பில் நீதிமன்றில் சமுகமளித்திருந்தார்.

இடம்பெயர்ந்த க.பொ.த மாணவருக்கு விசேட அடையாள அட்டைகள்- பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் நிவாரண கிராமங்கள் விஜயம்

க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் இடம் பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை பெற்றுக் கொடு ப்பதற்காக பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு செல்லவுள்ளனர்.

அடுத்தவாரம் செல்லும் இவர்களுடன் புகைப்படப் பிடிப்பாளர்களும் செல்லவுள்ளனர்.

வவுனியா, செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் சுமார் 1500 மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். புலிகளால் பலவந்தமாக படைக்கு சேர்க்கப்பட்டு தற்போது சரணடைந்துள்ளவர்களுள் சுமார் 300 பேரும் இவ்வுயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களுக்கும் இவ்விசேட அடையாள அட் டையை பரீட்சை திணைக் களம் வழங்கவுள்ளது. எல்லா நிவாரணக் கிராமங்களிலு முள்ள மாணவர்கள் பரீட்சை க்குத் தோற்றும் விதத்தில் பரீட்சை நிலையங்கள் அமை க்கப்படவும் உள்ளன என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க நேற்று தெரிவித்தார்.