கனடா: தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

Viyoogamமே 18 2009ல் முடிவுக்கு வந்த வன்னி யுத்தம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போக்கிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. வன்னி யுத்ததத்தில் நிகழ்ந்த மிக மோசமான மனித அவலமும் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட இலங்கை அரசு தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லாததுமான அரசியல் சூழல் இலங்கை அரசுக்கு எதிரான தொர்ச்சியான போராட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றது. இதன் எதிரொலியாக நீண்ட அரசியல் பின்னணியை உடையவர்களின் கூட்டு முயற்சியாக மே 18 இயக்கம் கடந்த ஆண்டு உருவானது தெரிந்ததே.

மே 22ல் நடந்து முடிந்த வன்னி யுத்தத்தினை நினைவுகொள்ளும் நிகழ்வு ஒன்றை மே 18 இயக்கம் கனடாவில் ஏற்பாடு செய்துள்ளது. ‘தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள் மதிப்பீடும் கலந்தரையாடலும்’ என்ற தலைப்பில் இந்நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘நடந்து முடிந்த இனப்படுகொலைகளில் இருந்து மீள் எழுச்சி கொள்ளும் நாளாக மே 18யை நினைவுகூருவோம்’ என மே 18 இயக்கம் தனது அழைப்பிதழில் கேட்டுக் கொண்டு உள்ளது. ( மேலதிக தகவல்களுக்கு: May18_Movement_Discussion )

மே 18 இயக்கம் தனது அரசியல் கொள்கை இதழாக வியூகம் சஞ்சிகையை வெளியிட்டு வருவதும் அதன் வெளியீட்டு நிகழ்வு கனடா லண்டன் பாரிஸ் ஆகிய நகரங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மே 18 இயக்கம் தொடர்பான மேலதிக வாசிப்பிற்கு:

தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் மீள்மதிப்பீடும் கலந்துரையாடலும் – மே 18 இயக்கம் : ஜெயபாலன் த

பிற்போக்கு தலைமைகளையும், கைக்கூலிகளையும் தோற்கடிப்போம்!

இடதுசாரி முன்னணித் தோழர் விக்கிரமபாகுவை ஆதரிப்பதாக ‘மே 18 இயக்கம்’ முடிவு!

பாராளுமன்ற ஜனநாயகமும் ஜனநாயக முன்னணியும் : ரகுமான் ஜான்

இலங்கையில் தேர்தலும் தமிழ் மக்களது அரசியல் எதிர்காலமும் : கலந்துரையாடல்

 ‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

இரயாகரன் சார்! எனக்கொரு உண்மை தெரிந்தாக வேணும் : த ஜெயபாலன்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

 • santhanam
  santhanam

  இவர்கள் மிகுதிதமிழர்களை மெல்லசாக்காட்ட போகிறார்களா?

  Reply
 • NANTHA
  NANTHA

  எனக்குத் தெரிந்த வரை இவர்கள் “முன்னாள்” இயக்கர்களும் புலிகளினால் துரத்தப்பட்டவர்களும் என்று அறிகிறேன்.

  மொத்தத்தில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்!

  Reply
 • accu
  accu

  கனடாவில் உள்ளவர்கள் ஒருமுறை இந்தச் சந்திப்பில் கலந்து தமது கருத்துக்களை சொல்லலாம்தானே! நான் செல்கிறேன். நந்தாவும் வரலாம்தானே? அதன்பின் எம்கருத்துக்களை கூறுவது நியாயமாகும் அல்லவா.

  Reply
 • PALLI
  PALLI

  accu,
  நியாயமான கருத்து; நாம் என்ன கருத்தை சொன்னோம் அதுக்கு அவர்கள் கருத்து என்ன என பலதை போட்டு வந்து சொல்லலாம், நான் தான் சொன்னேனெ நந்தாவை தவிர மற்ற யாவரும் எதுக்கும் அருகதை அற்றவர்கள்?

  Reply