‘ஜனநாயகப் பண்போடு நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ ரகுமான் ஜான் – வியூகம் வெளியீடு தொகுப்பு : த ஜெயபாலன்

Viyoogam_CoverRahuman_Jan‘மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ என பிரித்தானியாவில் நடைபெற்ற மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழான வியூகம் வெளியிட்டு நிகழ்வில் அச்சஞ்சிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரகுமான் ஜான் தெரிவித்தார். டிசம்பர் 21ல் லண்டனுக்கு வெளியே நோர்பிற்றன் என்ற இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடையவர்களின் சந்திப்பாக இது அமைந்தது. கௌரி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யமுனா ராஜேந்திரன், என் சபேசன் ஆகியோர் சஞ்சிகையின் மதிப்பீட்டை மேற்கொண்டனர். சஞ்சிகை மதிப்பீடு அதன் ஏற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து கலந்தரையாடல் இடம்பெற்றது. வழமை போன்ற நூலாசிரியரை நோக்கிய கேள்விகளாக அல்லாமல் கலந்துகொண்டவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்களும் விவாதங்களும் இடம்பெற்றது.

டிசம்பர் 13ல் இச்சஞ்சிகையின் வெளியீடு ரொறன்ரோவில் இடம்பெற்றது. இவ்வார நடுப்பகுதியில் இதன் வெளியீடு பாரிஸில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Yamuna_Rajendiranவியூகம் விரிவான ஆழமான விடயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றை இத்தளத்தில் விரிவாக ஆய்வு செய்ய முடியாது எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் பொதுவான தனது மதிப்பீட்டை அங்கு வைத்தார். மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு இதழாக வெளிவந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள இச்சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரைகள் அவ்வாறு அமையவில்லை என்றும் இச்சஞ்சிகை கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த விடயங்களின் கலப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். சஞ்சிகையின் வடிவமைப்பு மற்றும் தோற்றம் அதனை ஒரு சஞ்சிகை என்பதிலும் பார்க்க நூலின் தோற்றத்தினையே வழங்குவதாகவும் யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டார். வியூகத்தின் ஆசிரியர் தலையங்கம் அதன் கடந்த காலம் பற்றியும் தீப்பொறி மற்றும் உயிர்ப்பு சஞ்சிகை பற்றியும் பேசுவதைச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் சுயவிமர்சனம் செய்வதற்கான தளம் ஈழத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.

ஒரு கோட்பாட்டு இதழானது அவ்வியக்கத்தின் கோட்பாட்டு அரசியலை வெளிப்படையாக வைக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய யமுனா ராஜேந்திரன் வியூகத்தில் வெளிவந்துள்ள அத்தனை கட்டுரைகளுமே புனைப்பெயர்களில் வெளிவந்துள்ளதாகவும் வியூகம் சஞ்சிகையிலும் தொடர்புகளுக்கான எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லை எனவும் யமுனா ராஜேந்திரன் சுட்டிக்காட்டினார்.

20 வருடங்களுக்குப் பின்னர் தோழர் என்றழைக்கக் கூடிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறி தன் மதிப்பீட்டை ஆரம்பித்த என் சபேசன் இதனை ஆரோக்கியமான சூழல் ஒன்று உருவாகி உள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுடைய அரசியல் என்பது தேசிய அரசியல் என்பதைக் கடந்து செல்ல முடியாது எனத் தெரிவித்த என் சபேசன் தமிழ் தேசியம் அக முரண்பாடுகள் பலவற்றைக் கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டினார். ஆனால் அவற்றுக்காக தமிழ் தேசியத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இனசமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Sabesan_Nசமூகத்தில் உள்ள காழ்ப்புகள் முன்னோக்கி நகரவிடாமல் தடுப்பதாகக் கூறிய என் சபேசன் யமுனா ராஜேந்திரனின் மதிப்பீட்டில் பெரும்பாலும் உடன்படுவதாகத் தெரிவித்தார். குறிப்பாக கட்டுரைகளில் ஊகங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். புனைபெயர்களில் எழுதுவதில் யமுனா ராஜேந்திரனுடன் முரண்பட்ட என் சபேசன் புனைபெயரில் எழுதுவதற்கான பாதுகாப்பு போன்ற காரணங்களும் தேவையும் இன்னமும் இருப்பதாகத் தெரிவித்தார். வியூகம் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டு தனது மதிப்பீட்டை முடித்துக் கொண்டார்.

மே 18 இயக்கம் சார்பாகவும் வியூகம் ஆசிரியர் குழு சார்பாகவும் கருத்து வெளியிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது எதிர்பார்க்கப்பட்டாலும் அது நடந்து முடிந்த விதமும் முற்றாக அழிக்கப்பட்டதும் எதிர்பார்க்காத ஒன்று எனத் தனது கருத்துரையை ஆரம்பித்தார். இந்தப் புள்ளியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் எழுவதைச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் தேசிய இனப் பிரச்சினை என்ற ஒன்றில்லை என்றால் அதனை வலிந்து போராட வேண்டிய அவசியமில்லை என்றும் ஆனால் அவ்வாறான ஒரு பிரச்சினை இருக்கும் போது ஒடுக்குகின்ற தேசம் வெற்றி கொண்ட படையாகக் கொக்கரிக்கின்ற போது அதற்க எதிராகப் பேசுவது ஒவ்வொரு அரசியல் உணர்வுள்ளவரினதும் தார்மீகக் கடமையென்றே தான் நினைப்பதாகத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் இவ்வாறான விவாதங்கள் பல்வேறு தளங்களிலும் இடம்பெறுவதாகக் கூறிய அவர் அவ்வாறான விவாதங்களிற்கான தொடக்கப் புள்ளியாகவும் அவ்வாறான விவாதங்களை ஒருங்கிணைக்கும் நோக்கிலுமே மே 18 இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இது ‘முடிவல்ல புதிய தொடகம்’ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வி என்பது தமிழ் மக்களின் போராட்டத்தின் தோல்வியாக தற்காலிகமாக அமைந்தாலும் அவர்களைக் காப்பாற்றி இருக்க முடியாது எனக் குறிப்பிட்ட ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகள் பிழையான தலைமையைக் கொண்டிருந்தது மட்டுமல்ல சரியான தலைமைகள் உருவாக முடியாமல் அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்தனர் எனவும் குற்றம்சாட்டினார். போலியான ஒரு தலைமையைக் காப்பாற்றி இருக்க முடியாது எனத் தெரிவித்த ரகுமான் ஜான் தமிழீழ விடுதலைப் புலிகளால் விடுவிக்கபட்டிருந்த பிரதேசங்களில் மக்கள் எவ்வளவு சுதந்திரமாக இருந்தார்கள் என்பதும் அவர்கள் தாங்கள் விடுதலை அடைந்ததாக உணர்ந்தார்களா என்பதுமே முக்கியமான கேள்வி என்றும் சுட்டிக்காட்டினார்.  

சரி பிழையென்பது இருவழிகள் இவற்றில் எது சரி என்பதை வரலாறே தீர்மானிக்கும் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் இதில் நான் சரியாக இருக்கலாம் சிலவேளை நீங்கள் சரியாக இருக்கலாம் அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது எனத் தெரிவித்தார். மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்துகொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும் என்பதையும் அவர் விளக்கினார். ஆனால் அப்படியல்லாமல் வெறும் காழ்ப்புணர்வுடன் வெறிகொண்ட மிருகங்கள் போல் குத்திக் குதறுகின்றோம் என்றும் கொம்பியூட்டர்களில் இருந்து இரத்த ஆறு ஓடாதது தான் ஒரு குறையாக இருப்பதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். எல்லாவற்றையும் அரசியல் என்கிறார்கள் எனச் சுட்டிக்காட்டிய ரகுமான் ஜான் மார்க்சியம் புரட்சி ஏகாதிபத்தியம் திரிபுவாதம் இவற்றை நீக்கிப் போட்டப் பார்த்தால் வெறும் சேறும் சகதியுமே எஞ்சியிருக்கும் எனத் தெரிவித்தார். நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து சஞ்சிகையின் மதிப்பீடு தொடர்பான தனது கருத்துக்களை வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றுது. இதில் பெரும்பாலும் தேசியவாதம் தொடர்பான விவாதமே கூடுதலாக நடைபெற்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் தேசிய விடுதலையூடாகவே அமையும் என்று மார்க்சிய அடிப்படையில் கூறிக்கொண்டாலும் அது இனரீதியான தோற்றப்பாட்டையே காட்டுவதாக ராகவன் சுட்டிக்காட்டினார். அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாண்டியன் தமிழ் மக்களுடைய பிரச்சினையை மார்க்சிய ரீதியில் அணுகுவதாகக் கூறிக்கொள்பவர்கள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்வுகாணலாம் என்று தமிழ் மக்களின் மீதான ஒடுக்குமுறையை மறைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

கலந்தரையாடலில் கருத்து வெளியிட்ட என் சபேசன் முஸ்லிம்கள் தனியான தேசம் என்பதைத் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இலங்கையில் சிங்களம் தமிழ் என்ற இருதேசங்களே உள்ளதாகவும் கருத்து வெளியிட்டார். அப்போது குறுக்கிட்ட ராகவன் அவ்வாறே சிங்களத் தலைமைகள் தமிழர்கள் ஒரு தனியான இனம் இல்லை எனக் கருதுவதாகத் தெரிவித்தார். என் சபேசனின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட மாசில் பாலன் தேசிய இனங்களை வரையறுப்பது என்பது ஸ்ராலினின் வரையறைகளைக் கடந்து வரவேண்டும் என்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் தன்னைத் தனித்துவமான இனமாக உணருமானல் அவர்கள் தனித்துவமான இனமாகக் கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பழங்குடிகள் இன்று அவ்வாறே உணருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சபா நாவலனும் இதே கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

காலத்திற்குக் காலம் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கியவர்கள் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயற்பட்டதை உதாரணங்களுடன் காட்டிய என் கெங்காதரன் மே 18 இயக்கமும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக முடிவுகளை எடுக்குமோ என்ற ஐயத்தை வெளிப்படுத்தினார்.

மாற்றுக் கருத்தக்கான விவாதத்திற்கான களத்தை உருவாக்குவதே தமது நோக்கு என்றும் இவ்வாறான நிகழ்வுகள் அதற்கு உதவும் என்றும் தெரிவித்த ரகுமான் ஜான் நடைமுறையில் உள்ள சாதனங்களின் இன்றைய பொருத்தப்பாடு பற்றி கேள்வி எழுப்பியதுடன் உண்மைகளை நோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அதனை ஆராய்வதற்கான புதிய கோட்பாட்டு சாதனங்களை உருவாக்கி அறிமுகப்படுத்தி அதனை விவாதிப்போம்! அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம்! என்றும் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

(குறிப்பு: இது கூட்டத்தில் இடம்பெற்ற உரைகளின் விவாதங்களின் தொகுப்பு. பெரும்பாலும் கருத்து வெளிப்படுத்தியவர்களது கருத்து மாற்றம் இல்லாமல் பதிவு செய்துள்ளேன். தவறுதலாக கருத்துக்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டு இருந்தால் சுட்டிக்காட்டவும்.)

Related Articles:

‘விவாதக் களத்திற்கான தளத்தின் ஆரம்பமே வியூகம்’ ரொறன்ரோ வியூகம் வெளியீட்டு நிகழ்வில் ரகுமான் யான்

மே 18 இயக்கமும் வியூகம் வெளியீடும் : த ஜெயபாலன்

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

இதுவும் கடந்து போம்: புலியெதிர்ப்பின் அரசியல்: தேசபக்தன்
 
நடந்து முடிந்ததும்! நடக்க வேண்டியதும்!!! : தேசபக்தன்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 Comments

 • vallipuram
  vallipuram

  இத்தனை வருசமாக பிசுபிசுத்து போன இவர்களின் போராட்ட அரசியல் இனி சரியான வியூகம் அமைக்கும் என்று எப்படி நாம் நம்பலாம்?
  சரியான் வியுகம் அமைக்க தேவையான பகுத்தறிவு இவர்களிடம் என்றுமே இருக்கவில்லை! இனி வரும் என்று நம்புவது? தலைவர் கடைசியில் உள்ளுக்கு விட்டு அடிப்பார் என்று நம்பியது போலத்தான் இவர்களின் வியூகம் நிச்சயமாக முடியும்.

  Reply
 • anwar
  anwar

  தமிழ் தேசியம் என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தளமாக இருந்துள்ளது எனத் தெரிவித்த த ஜெயபாலன் அது புலித் தேசியமாக ஆக்கப்பட்டு அதிலேயே புலிகள் ஊன்றி நின்றனர் என்றும் புலிகளின் தோல்வி என்பது அவர்களுடைய தோல்வி மட்டுமல்ல அவர்கள் ஊன்றி நின்ற தமிழ் தேசியத்தினதும் தோல்வியாகவே அமையும் என்றார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

  சிங்கள தேசியத்தின் இறைமையே , தமிழ் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும். சிங்கள குடியேற்றங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன. புலிகள் ஒரு குறியீடு மட்டுமே. தேசியஇனம் என்ற விடயத்தையே இது கேள்விக்குள்ளாக்கிவிடும். தமிழர்கள் ஒரு தேசியஇனம் இல்லை என்கிற சிங்கள பேரினவாத சிந்தனையை இது உறுதிப்படுத்தும்.

  Reply
 • Anonymous
  Anonymous

  தமிழிழப் போராட்டத்திற்கான ஆரம்ப காரணிகள் எதுவும் சீர் செய்யப்படவில்லை, மாறாக மோசமடைந்துள்ளன. ஒரு இனத்தின் குரல் வளை திருகப்பட்டிருக்கிறது. வாலை நிமிர்த்துவதற்காக, பட்டினி போட்ட தெனாலி ராமனின் சிந்தனைதான் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் இருக்கிறது.

  தமிழ் தேசியத்தை கேள்விக்குரியதாக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதிகளிலிருந்து, இடதுசாரிகளுடாக தமிழ் அங்கிடுதெத்திகளிடம் பரவியிருந்த்தது
  இவர்கள் தமிழ் மக்களால் வரலாறு பூராவும் முழுமையாக நிராகரிக்கப்பட்டார்கள். தமிழ் தேசியத்திற்காக மக்கள், முள்ளிவாய்க்காலிருந்து முன்னைநாள் காலனித்துவ எசமானர்களின் தெருக்களில் கூடினார்கள். இதை வெறும் புலித் தேசியம் என்று பார்ப்பவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து அன்னியப் பட்டவர்கள். இங்கு புலிகள்தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்று சொல்லி எழுகின்ற எதுவும் சிங்கத்தின் வாலைப் பிடிக்கிற முயற்சிதான்.
  1948 இலிருந்து தமிழ்த் தலைமைகள் துரோகம் இழைத்தாலும் இன்று கூட தமிழ்த் தேசியம் என்கிற பேரில் எந்தக் குப்பைகள் வந்தாலும் அதை ஜீரணித்துக்கொண்டு அதன் பின் செல்ல தயாராக இருக்கிறார்கள். இன்று வெளி நாடுகளில் யாருக்காகவோ சேவகம் செய்கிற, தங்களை சிந்தனையாளர்களாக வரித்துக் கொள்கிறவர்கள் தங்களையும் குழப்பி, தமிழ் மக்களையும் தெருவோரங்களில் நிறுத்த முற்படுகிறார்கள். புலிகளின் தலைமையில் தமிழிழப் போராட்டம் தோல்வி அடைந்த்ததால், அந்தப் போராட்டத்தை கை விட முயல்பவர்கள், தங்களை அறிந்ததோ ,அறியாமலோ புலிகளின் தலைமைத்துவத்தை இன்றும் ஆதரிக்கிறார்கள்.அவர்களை மாற்றீடு செய்கிறோம் என்று சொல்லி அவர்கள் வழியை மானசீகமாக பின்பற்றுகிறார்கள். இவர்கள் மீது தமிழ் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள். EROS என்று ஒரு இயக்கத்தின் பிறப்பை, மறுபிரதி செய்கிற சிந்தனைதான் இந்த வெளினாட்டுக்காரரிடம் இருக்கிறது. அதற்கு உதாரணந்தான் நாடு கடந்த அரசு, வியுகம் போன்றவை.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //மாற்றுக் கருத்து ஜனநாயகப் பண்போடு நாம் நடந்து கொண்டால் மட்டுமே சரியான வழியில் நிற்பவருடன் மற்றவர் இணைந்துகொள்ள முடியும்’ // முதலில் ஜனநாயகம் என்றால் செல்லநாயகமா என்று கேட்கும் நிலையில்தான் பலதமிழர்களும் இலங்கையரும் உள்ளார்கள். வோட்டுப்போடுவதும் பெரும்பான்மையின் முடிவும்தான் ஜனநாயகமாகாது. சிறுபான்மை இனத்தின் உரிமைகள் தேவைகள் அபிலாசைகள் பாதுகாக்கப்படுவதும் ஜனநாயகம் தான். மனிதம் முன்னிறுத்தப்படாத ஜனநாயகம் ஜனநாயகமே அல்ல. எமக்கும் தென்;தென்கிழக்கு ஆசியாவுற்கும் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். தனிமனித பக்கதிவாதம்: ஒரு நல்ல இராணுவமாக வளர்ந்த புலிகள் தலைமைப்பீடத்தில் ஒரு ஜனநாயக முறையை ஒரு சுழற்சி முறையைக் கொண்டிருந்தால் புலிகள் அழிந்திருக்கவே மாட்டார்கள். ஒரு இயக்கமே ஒருவனின் தலையில் கட்டப்பட்டதால் தலையோடு தமிழனின் தலைவிதியும் போனது. முதலில் ஜனநாயகம் என்பது என்ன என்று மக்களுக்கு விளங்கப்படுத்திய பின்போ ஜனநாயத்தைப்பற்றிக் கதைக்கலாம்.

  Reply
 • naveenan
  naveenan

  வியூகத்தினதும் ஜானினதும கடந்தகாலம் பல தடம்புரண்ட பாதைகளுக்கு ஊடாகவே வந்துள்ளது. எதிர்காலம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். நீங்கள் வகுத்திருக்கும் வியூகத்தை வகுக்க வந்தடைய நீணடதூரம் பயணிக்கவேண்டும். காரணம் உங்களின் கடந்தகாலப் பயணம் பலகேள்விகளுக்கு உட்பட்டுள்ளது. ஓர் இதழ் சுயவிமர்சனத்துடன் எல்லாம் சரியாகி விடாது. சுயவிமர்சனத்தளம் ஈழத்தமிழர்கள் மத்தியில் உண்டா? என ஜமுனா கேட்கின்றார். இரண்டு மூன்று இணையதளங்களைப் பார்த்ததன் விளைவாலேயே இக்கேள்வியை எழுப்புகினறார். நிச்சயமாக சுயவிமர்சனத்தளம் உண்டு. ஆளால் அதை இணையதளங்கள் மூலம் செய்யயமுடியாது. அதற்கான தளம்வேறு > எல்லோருக்கும் சுயவிமர்சனத்திற்கான காலம் வந்துகொண்டிருக்கின்றுது. இதைத் தாண்டி யாரும் செல்லமுடியாது. தவறின் வரலாறு இவர்களை தவறவிடாது. சபேசன் முஸ்லிம் மக்களை தேசிய இனம் இல்லையென்கினறார்; அப்படியாயின் தமிழ்மக்களும தெசிய இனம் இல்லைத்தான். மே 18 இயக்கம் ஓர் நல்ல குறியீடுதான். ஆனால் அந்த இடத்தில் இருந்து சரியாகப் பயணத்தை ஆரம்பிக்கபபடவேண்டும். மீண்டும நந்திக்கரை நோக்கியல்ல.

  Reply
 • Mohamed Nisthar
  Mohamed Nisthar

  Though I have’t been to the discussion , it is not wrong to comment on the points brought up there, I suppose. Mr. Sabesan was right to say that Muslims cannot be recognized as a separate ethnic. However the point he missed is, that Moors, predominantly Muslims, are an ethnic minority like Sri Lankan Tamils and Singhalese. Therefore it would have been better if he have had some thought about this minority. When he says the Muslims are not a nation, is he expecting all the Moors to accept that they are Tamils (or Tamil Muslims)then why cannot they be Singhalse (or Singhales Muslims). So don’t be confused with language, religion and enthnicity. Tamil speaking Muslims and Singalese speaking Muslims are Muslims only by religion and their religious belief or the language they speek has nothing to do with their ethnicity. When it comes to enthnicity the Muslims (majority) are Sri Lankan Moors. If that identity is denied, specially by Tamils, then the Moors do not see any difference between the Singhalese, who deny the rights of the Tamils, and the Tamils, who deny the right of another minority, because they speak Tamil and follow Islam as their religion.

  Reply
 • meerabharathy
  meerabharathy

  நட்புடன் நண்பர்களுக்கு….
  எனக்கு இவ்வாறு அடிக்கடி பின்னுட்டம் இடுவதில் உடன்பாடு இல்லை. நமது எழுத்துக்கள் ஆக்கபூர்வமான ஒழுங்கமைக்கப்பட்ட (வீயூகம் ஆய்வு இதழ்(?)போல) ஒரு செயற்பாடாக இருக்கவேண்டும். அந்தடிப்படையில் அவர்களது செயற்பாட்டிற்கு நாம் தலைவணங்கவேண்டும். ஆனால் அதன் கருத்துக்களுக்கள்ள…

  “நபர்கள் சம்பவங்கள் என்பதைத் தாண்டி சமூக உறவுகளாக அரசியல் போக்குகளாகப் புரிந்தகொள்ள முடியவில்லை என்றால் இது என்ன அரசியல் என்றும் கேள்வி எழுப்பினார்.” எனக் கூறுகிறார் ரகுமான் ஜான்.

  இங்கு ஒரு முக்கியமான பிரச்சனையை இவர் தவறவிடுகின்றார் என்றே நான் கருதுகின்றேன்….

  நான் மேலோட்டமாக மாக்சியத்தை அறிந்தளவில் அது இந்த சமூகங்கள் எவ்வாறு ஜான் கூறுவது போல் சமூக உறவுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு ஒடுக்கும் வர்க்கம் ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதற்கு வசதியாக கட்டமைத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இவ்வாறான ஒரு சமூகப் பார்வையை தந்நதமைக்க்கா நாம் என்றும் கார்ல் மார்க்ஸிற்கு மதிப்பளிக்கவேண்டியவா;களாக உள்ளோம். ஆனால் அதற்காக அவர் கூறியதனைத்தையும் வேதவாக்காக காண்பதற்கு முற்படுவோமாயின் மீண்டும் தவறு விடுவோம்….

  அவரது தீர்கதரிசனத்தின்படி சோஸலிச புரட்சி எதிர்பார்த்த நாடுகளில் நடைபெறவில்லை…
  இரண்டாவது இவரது கோட்பாட்டினடிப்படையிலும் மற்றும் லெனினால் மேலும் மெருகுட்டப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட மார்க்ஸிய கோட்பாட்டின் அடிப்படையில்

  முன்னெடுக்கப்பட்ட ரஸ்சிய புரட்சி ஒரு ஸ்டாலினைத்தந்தது…

  ஐனநாயம் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்பியது….

  மார்க்ஸியம் லெனினிஸம் சோவியத் யூனியனின் வேதமானது…

  இவ்வாறு வளர்ந்த இந்தக் கோட்பாடு…

  ஒரு பொல்பொட்டையும் தந்நது….இப்படி பல உதராணங்களை தனிநபர் பங்களிப்புக்கு காண்பிக்கலாம்…

  மேலும் ஹிட்லர் போன்ற தனி நபர்கள் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை மறுதலிக்க முடியாது….

  இதுபோன்று தமிழ் பேசும் மனிதர்களின் சமூகங்களின் (சசிவன்) தலைவராக உருவான பிரபாகரன் என்ற தனிநபரால் ஏற்படுத்தப்பட்ட விளைவுகளையும் புறக்கணிக்கமுடியாது…

  (இங்கு புறக் காரணிகளின் பங்களிப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இவற்றுக்கும் அப்பால் தனிநபர் பாத்திரமும் முக்கியத்துவமானது என்பதே எனது கருத்து.)

  ஏன் தீப்பொறியாக இருக்கட்டம் உயிர்ப்பு சஞ்சிகையாக இருக்கட்டும் அல்லது தமிழீழ மக்கள் கட்சியாக இருக்கட்டும் இவற்றுக்குள் உருவான முரண்பாடுகளில் தனிநபரின் பங்களிப்புகள் எந்தளவு முக்கியத்துவமானது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய ஒரு முக்கியமான விடயம்…

  இது மே 18 இயக்கத்திலோ அல்லது வீயூகம் குழுவிற்குள்ளோ ஏற்படாது என்பதற்காக எந்த உத்திரவாதமும் இல்லை…

  முன்னேறிய பிரிவினர் என்பது கேள்விக்குரியது…

  மேற்குறிப்பிட்டவாறு மார்க்ஸியத்தை தமது கோட்பாடாக கொண்டு செயற்பட்ட பல முன்னேறிய பிரிவனர் தான் பல மனித சமூகங்களை அடக்கவும் அழிக்கவும் வழிகாட்டியுள்ளனர் என்பது மறுப்பதற்கில்லை….

  ஆகவே “முன்னேறிய பிரிவினர்” என்று கூறுவது மட்டும் அந்த முன்னேறிய பிரிவினர்கள் செய்வதை நியாயப்படுத்திவிடாது…

  முன்னேறிய கோட்பாடு ஒன்றை (விளக்கமில்லாது) நம்புதால் மட்டும் அல்லது அல்லது ஏற்றுக்கொள்வதால் மட்டும் ஒருவர் முன்னிறேய பிரிவினர் ஆகிவிடமுடியாது….

  இனிவரும் காலங்களில் முன்னேறிய பிரிவினர் என்பது கோட்பாடுகளை விளக்கிக் கொள்வது மட்டுமல்ல அதற்கும் மேலாக தன்னளவில் (ஊளவியல் அடிப்படையிலும் ) முன்னேறியவராக இருக்கவேண்டும்….மேலும் ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கவேண்டும்…அதுவே நம்பிக்கையை வளர்க்கும்…

  அல்லது “நிலவிலே பேசுவோம்”
  (இது குறிப்பிட்ட ஒரு நபரை தாக்குவதற்காக எழுதப்பட்டதாக கூறியபொழுதும்…இவ்வாறான ஒரு போக்கு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது)
  என்ற நடைமுறைவாழ்வுதான் முன்னேறிய பிரிவினர் மத்தியில் இருக்கும்.
  இது இன்னுமொரு முள்ளிவாய்காலை நோக்கி செல்லவே வழிவகுக்கும்…

  நண்பர்களே! எனது விமர்சனம் யாரையும் இழுத்துவிழுத்துவதற்கல்ல….மாறாக ஒரு ஆரோக்கியமான செயற்பாட்டை நோக்கிச் செல்வதற்கான விருப்பத்தின் அடிப்படையிலையே எழுகின்றது… முதலில் குழு மனப்பான்மையில் இருந்து வெளிவரவேண்டும்….

  இரண்டாவது பலர் இங்கு சிறு சிறு துண்டுகளாக பல்வேறு கடந்தகால வரலாறுகளையும் அதற்கான விமர்சனங்களையும் பின்னுட்டங்களாக இங்கு விட்டுச் செல்கின்றனர்….இதைவிடுத்து வீயூகம் ஆய்வு நுhல் போல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விரிவாக எழுதி வெளியிடுவது பயனுள்ளதாக இருக்கும்….

  சுயவிமர்சனம் என்பது மிகமுக்கியமானது…இது மற்றவருக்கு நல்லவரா இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு முதல் ஒரு தனிநபரளவில் அவருக்கு ஒரு நிழல் கண்ணாடியாக இருந்து தனிநபரில் மாற்றத்தை உருவாக்கும்….இந்த மாற்றமே நம்பிக்கையை வளர்க்கும்…ஆகவே புதிதாக இயக்கங்களையோ கட்சிகளையோ கட்ட முனையும் ஒவ்வொருவரும் தமது கடந்தகால செயற்பாடுகள் சிந்தனைகள் தொடர்பான பக்கச் சார்பற்ற சுயவிமர்சனத்தை முன்வைக்கவேண்டும்….இதற்கு யாராவது தயங்குவார்களாயின் அவர்களது செயற்பாடு சந்தேகத்திற்கிடமானது மட்டுமல்ல கேள்விக்குட்படத்தப்படவேண்டியதுமாகும்….

  நண்பர்களே நம்பிக்கையோடு முன்னோக்கிச் செல்ல…
  இன்றிலிருந்து ஆரோக்கியமான விரிவான சுயவிமர்சனங்களை சமூக மாற்றத்திற்காக அடக்கப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக செயற்பட விரும்பும் ஒவ்வொருவரும் முன்வைப்போமா?

  நம்பிக்கையுடன்
  மீராபாரதி

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு வகைகளில் கடந்த காலப் போராட்டங்களுடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டு உள்ளனர் எனத் தெரிவித்த யமுனா ராஜேந்திரன் அவர்கள் இழப்புகளையும் துயரங்களையும் நேரடியாக அனுபவித்தவர்கள் அவர்கள் உணர்ச்சிபூர்வமாகவே அரசியலைப் பார்க்கின்றனர் எனத் தெரிவித்தார். ஆனால் அரசியல் என்பது உணர்ச்சிபூர்வமானது அல்ல என்றும் அது அறிவுபூர்வமாக கையாளப்பட வேண்டும் என்பதையும் அவர் தனது மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்./—

  /dinamani,தலையங்கம்:காத்​தி​ருக்​கும் புதை​குழி First Published : 18 Dec 2009 12:37:00 AM IST.வர​லாறு என்​பது திட்​ட​மிட்டு நிக​ழக்​கூ​டி​ய​தல்ல.​ சொல்​லப்​போ​னால்,​​ மிகச் சாதா​ர​ண​மான அபத்​த​மான முடி​வு​கள்​தான் பெரும்​பா​லான சரித்​திர நிகழ்​வு​களை உரு​வாக்கி இருக்​கின்​றன.​ சமீ​பத்​தில் நடந்த இப்​ப​டிப்​பட்ட ஒரு நிகழ்வு இந்​தியா சம்​பந்​தப்​பட்​டது.​ கார​ணம்,​​ அமெ​ரிக்க வர​லாற்​றில் வியூக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த ஒரு முடிவை அறி​விக்​கும் முன் இந்​தி​யப் பிர​த​ம​ரு​டன் அந்​நாட்டு அதி​பர் உரை​யா​டி​யி​ருப்​ப​தைச் சாதா​ரண நிகழ்​வாக நம்​ம ôல் எடுத்​துக்​கொள்ள முடி​ய​வில்லை.

  ஆப்​கன் போரில் ஈடு​பட்​டி​ருக்​கும் அமெ​ரிக்​கத் துருப்​பு​க​ளின் எண்​ணிக்​கையை அதி​க​ரிப்​பது}​அதா​வது}​போரை மேலும் தீவி​ரப்​ப​டுத்​து​வது என்று வெள்ளை மாளிகை எடுத்​தி​ருக்​கும் முடிவை இப்​போது மதிப்​பி​டு​வது கடி​ன​மா​னது.​ இதைத் தவிர்த்து,​​ இப்​போ​தைக்கு அமெ​ரிக்​கா​வுக்கு வேறு நல்ல தெரி​வு​கள் ஏதும் இருப்​ப​தா​கத் தெரி​ய​வில்லை./ –/The Sinhala state after blackmailing India for decades is successful now in blackmailing the US too, by foul playing the card of ethnic majority in the island of geopolitical importance, commented a political observer reading the committee report in between the lines.
  In contrast, Tamil Nadu has failed to demonstrate its geopolitical importance to the benefit of Tamils and to the true national benefit of India, Tamil circles said, adding that at least now the politicians and elite in Tamil Nadu should be awakened to the reality.– http://tamilnet.com/art.html?catid=79&artid=30763./

  —-என்னைப் பொருத்தவரையில், தமிழ்நாடு தன் “பூகோள இருப்பை” ஈழத்தமிழர் சார்பாக காட்ட இயலாது!- ஒரு நிரந்தரமான “அரசியல் மேடை(வீயூகம்)” கண்ணில் தெரியும் வரை- அது அவ்வளவு சுலபமல்ல- ஒரு வேளை “டூ லேட்டாகவும்” இருக்கலாம்!. ஆனால், “திராவிர இயக்க கொள்கை அடிப்படை” வேண்டாம்!. அதன் ஆதி அந்தம் எங்களுக்குத் தெரியும்- திரு.கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கும் தெரியும். அது ஈழத்தமிழர் உருவாக்கியது என்பது அவர் கருத்து- அதுதான் உண்மை.அதன் உருவாக்கம்,போப் கால்டுவெல்,மார்டிம் வீலர் எண்ணங்களிலிருந்து உருவாகியது பின்பு எல்லீஸ் ஆர் டங்கனின் எண்ணங்களினால் பாமர மக்களை சென்றடைந்தது. இதன் சிறந்த கருவியாக கலைஞர் கருணாநிதி செயல்பட்டார்!. ஆனால் அதன் ஒரு பகுதி புரட்சியானது- கலைஞரின் கூத்தாடி திறமையால் அது அமிழ்ந்து விட்டது. அதன் “நெகட்டிவ் பகுதியின்” அடுத்த வளர்ச்சியே, ஜூன்,2010 “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு”. அதற்கு, கோயம்புத்தூர், பொங்களூர் பழனிச்சாமியும், திருப்பூர் பனியன் ஏற்றுமதி சங்கத் தலைவரும், கோவை இராமனாதனும் ஏற்பாடு செய்வதிலிருந்து (யமுனா ராஜேந்திரன் கவனிக்க), இதில் யார் “பலிக்கடாவாக்கப்” படுகிறார்கள் என்பதை கவனிக்க!. இது “டமாரம்தான்”, “வியூகம் அல்ல”- இது ஒரு “கண்ணி வலை”.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  எங்கள் தமிழ்சமூகம் என்றைக்கும் சஞ்சிகைகளுக்கு குறைவைத்தது இல்லை. தேவையான காலங்களில் தேவைக்கேற்ப பலவிதமான முறையில் வெளிவந்திருக்கிறது. கவிதை கட்டுரைகளுக்கு குறைவிருக்காது. இது போலத்தான் சில இடங்களை பிடிக்கிற ஆய்வுக் கட்டுரைகளும்.
  மாக்ஸியத்தை யாரும் எதிர்கலாம். சமநீதியை யாரும் எதிர்கமுடியாது ஏன்னெனில் பெரும்பாண்மை மக்களுக்கு அது மறுக்கப்படுகிறது. இதனால்தான் மாக்ஸியமும் அழிவதில்லை புரட்சியும் அழியாமல் சாகாவரம் பெற்றிருக்கிறது.

  புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த சஞ்சிகைகளில் பல விதமான எழுத்துக்கள் என்னை நிம்மதியை கெடுத்து உறங்கவிடாமல் தடுத்து நின்றன. நீ உறங்காதே !தேடு. இரண்டு சஞ்சிகைளை உதாரணமாகச் சொல்வேன் ஒன்று ” தாகம்” அதில் ஒரு சிறு கதை வருகிறது. மலையக எழுத்தாளரான மு.சிவலிங்கம் “இனிஎங்கே” ஒருசிறுகதை எழுதியிருந்தார் கதை மறந்துவிட்டேன். அந்த கதையின் முடிவில் வரும் கடைசிவார்தைகள் பதினைந்து ஆண்டுகள் சென்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த வார்த்தைகள்
  இதோ- “இந்த தேசத்தின் உரிமையுள்ள அந்த மனிதர்களின் நுரற்றிஎழுபத்திரண்டு காலவரலாறு பொய்த்து விடுமோ..?”
  இதே போலத்தான்.. நிலவிலே பேசுவோம்….
  தமிழ்இனத்தில் இன்றும் புரையோடி அழியாமல் இருக்கிற சாதிக் கொடுமையையும் வக்கிர புத்தியையும் வார்தைகளை நுன்ணிய பிரம்பாக்கி சுளீர் சுளீர் என அடிக்கிறார் என்னென்றும் மறவாவண்ணம். இது தான் சஞ்சிகைளின் போக்கு. நல்லொண்னங்களை வெளிப்படுத்துவது. வேறு விதமாக இருக்கிறது.இலங்கையில்லிருந்து வெளிநாடுவந்து உயிருக்கும் வாழ்வுக்கும் பாதுகாப்பு தேடிக் கொண்டு பலஇனமதங்களோடு வாழ்ந்து..அவர்களின் சட்டதிட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்றுக்கொண்டு தமிழ்இனத்தின் சீர்ரளிந்த புத்தியை அங்கீரித்துக் கொண்டு மாக்ஸியமும் பிழை சிங்களமக்களும் பிழை என கருத்துச் சொல்லுவதும் பிரிந்துபோய் தமது இனத்துக்கென தனிநாடு அமைக்கவேண்டுமென கூக்குரல்லிடுவதும் புது வியூகம் அமைப்பதும் நாம் முதாலிளித்துவ சிந்தனைளிலிருந்து விடுபடமாட்டோம். தமிழ்மக்களின் வழி தனிவழி என்பதை தவிர வேறு எதுவாக இருக்க முடியும். ஆகா வாழ்வதற்கு வழி தேடுகிறார்கள் தாம் மட்டும்.இது மாக்ஸியத்தில் குறிப்பிடுகிற வர்க்கநலன்கள் சார்ந்தது இல்லாமல் வேறு எதுவாகாக இருக்க முடியும?…

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன் ராஜா! மற்றநாடுகள் இலகுவாக முதலாளித்துவச் சிந்தனையில் இருந்து விடுபட்டாலும் எம்மவர் விடுபடுவது என்பது கடினமே. வகுப்புவாதமும் வக்கிரகக் குணமும் மனிதநேயமற்ற தன்மையும் தனிமனித பக்திவாதமும் இருக்கும் வரை முதலாளியும் முதலாளித்துவமும் இருக்கத்தான் போகிறது. உழைப்புக்கு மதிப்புக் கொடுக்க முடியாத சமூகம் சாதியை அமைத்து வளர்ந்து வந்திருக்கிறது. இப்படியான சமூகத்திடம் இருந்து பொதுவுடமைத் தத்துவத்தை எப்படி எதிர்பார்ப்பீர்கள். அடிமட்டத்தில் இருந்த எழுந்து வந்த இயக்கங்களும் தலைவர்களும் அழிக்கப்பட்டு பலவாண்டுகள் ஆகவில்லை. மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். இப்படி ஆரப்பிக்கப்பட்ட பேராட்டம் எப்படி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

  Reply
 • Anonymous
  Anonymous

  /மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். /
  Kusumpu on December 22, 2009 3:01 pm

  இது முற்றிலும் தவறான கட்டுக்கதை. இதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள்.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  /Following Zurich, now we see a meet in Vienna.
  Sections of diaspora influential opinion makers and the TNA are currently meeting in Vienna to discuss the ‘presidential choice’ and a political package tied with the ribbon ‘internal self-determination,’ media circles in Colombo say.
  The energy of Tamils should not be wasted on Deviated or working for others. The precious time available now has to be made the best use of it by Tamils voicing for themselves and working for their own political formation. The Senate Committee on Foreign Relations chaired by John F. Kerry assigned the task of evaluation to two of its staff members, Malaysian born, Fatema Z. Sumar and Nilmini Gunaratne Rubin, a US Sinhalese, who travelled to Sri Lanka in November with the extensive support of the American Embassy in Colombo and Sri Lankan Embassy in Washington to collect material for the evaluation./-tamilnet.—
  “கெர்ரி ரிப்போர்டை” பார்த்தால் தெரியும்,அமெரிக்காவின் புதிய ஆசிய கொள்கையின் ஒரு பகுதி என்று.இது திராவிட நாட்டுக்காரரது “ஆரியத்திற்கு ஆதரவானது அல்ல!”,அமெரிக்காவின் தவிர்க்க முடியாத வெளிநாட்டுக் கொள்கையின் “காரியத்திற்கு” ஆதரவானது என்பது!.திராவிட நாட்டுக் கோரிக்கை மக்களை கவருவதற்கான வெற்றுக் கோஷமாக மாறியபோதுதான் கலைஞர் மு.கருணநிதி,எல்லீஸ் ஆர் டங்கனிடமிருந்து “டமாரமடிக்க அரசியலில் நுழைந்தார்”!.தமிழ்ப் பற்றுள்ள(தேசியம் அல்ல),உருக்குத் மற்றும் துணி உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டிருந்த “கொங்குநாட்டுக்காரர்கள்” இதை ஆதரித்தார்கள்,அவர்களுக்கு போட்டியாக வட இந்திய மற்றும் பிரிட்டிஷாரர் இருந்ததால்.இவர்களின் கதர் துணியை கூவி விற்றுதான் கலைஞர் தி.மு.கா. வின் பொருளாளர் ஆனார்!.இவைகள் “பொங்களூர் பழனிச்சாமிக்கு நன்றாகவே தெரியும்”.தற்போது இவர்களுக்கு போட்டியாக சீனர்கள் மற்றும் குஜராத்திகள் இருக்கிறார்கள்.ஆனால்,”புலன் பெயர்ந்த தமிழர்கள்” உலகம் முழுவதும் இவர்களின் தமிழ்ப் பற்றுள்ள “சந்தையாக உள்ளனர்”?.தற்போது,”ஜூரிச் மாநாடு” மற்றும் “உலக செந்தமிழ் மாநாடு” ஆகியவற்றின் பின் புலம் புரிந்திருக்கும்!.மிக இறுக்கமான “கெர்ரி அறிக்கைக்கு” எதிராக இந்த “திராவிட அட்டைக் கத்தி” பலனலிக்குமா?.கவிழ்ந்து வரும் மேகத்தை விசிறி கொண்டு விரட்ட முடியுமா?.இந்திய மற்றும் இலங்கை பெரும்பான்மையினருக்கு ஆதரவாக அமெரிக்கா நகருவதற்கு பல காரணங்கள் உள்ளன.”சீனா” பக்கம் மகிந்த ராஜபக்ஷே சாய்வதற்கு கூட அழுத்தம்தான் காரணமே தவிர,அவர் “கன்ப்யூஷிய கலாசரத்தை சார்ந்தவரல்ல”!.”திராவிடர்கள்?!” அலங்காரமான காலி டப்பாவை உருட்டி எழுப்பிய சத்தத்தை தாங்காமல்தான்,சிறிது லாஜிக்காக “தமிழ் தேசியத்தை” இ.வி.கே.சம்பத் துவங்கினார்.அதே போல்தான்,”பல்கலை கழகத்தில்(இலங்கை) தரப்படுதலுக்கு” எதிரான உணர்வுகளை தமிழ்த் தேசியமாக மாற்றி,அதில் மாட்டிக் கொண்டுதான் பிரபாகரன் தலை போனது?- இவைகள் தமிழ்தேசியம் அல்ல!.தற்போது இன்னொரு “செந்தமிழ் தேசியம்” உருவாக்கப் படுகிறது,தொப்பி அளவாக இருப்பவர்கள் போட்டுக் கொள்ளலாம்!.ஆனால் தலைக்கு வரப்போவது தலைப் பாகையோடு போகாது,தலையோடுதான் போகும்!.

  Reply
 • at
  at

  முன்னேறிய பிரிவினர் என்ற சொற்பதத்தை தவிர்த்து முற்போக்குச் சிந்தனையாளர் என்ற சொற்பதமே பொருத்தமானதாகும் என்பது என் கருத்து.

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  //தமிழ் தேசியத்தை கேள்விக்குரியதாக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதிகளிலிருந்து இடதுசாரிகளுடாக தமிழ் அங்கிடுதெத்திகளிடம் பரவியிருந்த்தது.//

  கட்டுரையில் இருந்தது:”அதன் அடிப்படையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வில் தமிழ் தேசியம் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.”

  ‘தமிழ் தேசியம் யார் யார் வாயைக் கேட்பினும் தமிழ் தேசியத்தின் மெய்ப்பொருள் காண்பது அறிவு.’

  ஒரு விடயத்தின் மெய்ப்பொருளைக் காண்பதற்கு அதனைக் கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலமாகவே முடியும். பைபிள் குர்ஆன் மற்றும் சிவாகமங்களை நீங்கள் கேள்விக்கு உள்ளாக்காமல் விடலாம். அவை விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவை மதம்சார்ந்தவை. ஆனால் ‘தலைவர் பிரபாகரனையும் தமிழ் தேசியத்தையும் கேள்விக்கு உள்ளாக்காமலிருக்கு அவையென்ன (கல்ற்)சமயத் திரிபுக் குழுக்களா?

  ‘கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்’ என்பதை ‘கேள்விக்குரியதாக்குவது’ என்று புரிந்துகொள்பவர்கள் தான் தமிழ்த் தேசியத்தை புலித்தேசியமாக்கி இந்த மோசமான முடிவுகளுக்கு இட்டுச்சென்றனர்.

  மற்றவர்கள் மீது குறைபிடிப்பதில் காட்டுகின்ற ஆர்வத்தை விடயங்களைப் புரிந்துகொள்வதற்கு முயற்சித்து இருந்தால் அது ஆரோக்கியமானதாக அமைந்திருக்கும். நீங்கள் ஒருபோதும் உங்களை வெளிப்படுத்தாமல் மற்றவர்கள் மீது குறைகண்டுபிடித்துக் கொண்டிருப்பது மட்டுமே உங்களுக்கு சிற்றின்பத்தைக் கொடுக்கும். ஆகவே ஒரு நாளும் சொந்தமுகத்துடன் உங்கள் கருத்துக்களை மற்ந்தும் வெளியிட்டு விடாதீர்கள்.

  த ஜெயபாலன்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  அனோமியஸ் யாருக்கு மரணதண்டனை விதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்புங்கள். விடை உங்களுக்கு சுலபமாகக் கிடைக்கும். ஈழத்தில் குடிப்பதற்கு தண்ணீரோ தின்பதற்கு உணவோ இல்லாததிருந்து போதும் மரணங்களும் மரணதண்டனைகளும் தானோ எம்மிடையே மலிவாக இருந்தன.
  அரசை எதிரியாக காண்பதற்கு பதிலாக மதத்தையும் இனத்தையும் உழைப்பாளி மக்களையும் அல்லவா? எதிரியாகக் கண்டோம். இந்தப் பாவங்கள் கரைந்து முடிய பலமாதங்கள் வருடங்கள் கூடச் செல்லலாம். அது வரை……?.

  Reply
 • Anonymous
  Anonymous

  த ஜெயபாலன்
  உங்கள் ஆலோசனைப்படி எனது இரவல் முகத்துடன் கருத்துக்களை எழுதுகிறேன்.

  ‘கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை ‘கேள்விக்குரியதாக்குவது’ ஆகக் கூடாது ஏசுவே. ‘சிற்றின்பம்’ என்பது வக்கிரமான கருத்தாக ஆகுமா அல்லாவே? ‘குறையொன்றும் இல்லை’ என்று சொல்லவா நடராசா நீ இங்கே கூத்தாடுகிறாய். உங்கள் கூட்டம், மதத்தை (மார்க்சிசத்தையும் கூடவா) கேள்விக்கு உள்ளாக்காமல் விடலாம் என்பது எனக்குத் தெரியாது.

  நீங்கள் நிறுவ முற்பட்ட சமன்பாட்டில் தரவுகள் தவறானவை. இரட்டைக் கோபுரம் தரை மட்டமாக்கப் பட்ட பின், அமெரிக்கத் தேசியமா கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது? உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் புலியெனக் குறி சுடுவது, நீங்கள் சிங்க வாலைப் பிடித்து சிறு உதவி பெறுகிறவர்களாக தெரிவிக்கவா?

  நன்றி.

  Reply
 • பல்லி
  பல்லி

  பல்லி இந்த கட்டுரையில் எனது கருத்தை சொல்லவில்லை; ஆனாலும் மீராபாரதியின் கருத்துடன் ஒத்துபோகிறேன்; அதே கருத்துடன் ஜானை நேரில் சந்திக்க முயல்கிறேன், அவர் நான் இருக்கும் நாட்டுக்கு வருவாரோ தெரியவில்லை; இருப்பினும் சந்திக்கவே முயலுகிறேன், பின்னோட்ட நண்பர்களின் கருத்துக்களை அவருடன் நேரில் பேச முயல்கிறேன்; அப்படி சந்தர்ப்பம் கிடைத்து பேசினால் அதை நணபர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்; ஆனாலும் அவர் பல்லி போன்ற யதார்த்த வாதிகளுடன் பேசுவாரா அல்லது ஏசுவாரா என்பது தெரியவில்லை, பேசினால் எழுதுகிறேன் ஏசினால் விமர்சிக்கிறேன்; தொடர்ந்தும் எழுதியே எமது காலத்தை வீனாக்காமல் செயல்பட நினைப்பவர்களிடம் எமது கருத்தை முன் வைக்கலாமே என்பது பல்லியின் அவா!

  Reply
 • Jeyabalan T
  Jeyabalan T

  அனோனிமஸ் நீங்கள் என்ன தான் சொல்ல வருகின்றீர்கள். நீங்கள் புலிவாலைப் பிடிக்கவில்லை. நாங்கள் சிங்கத்தின் வாலை பிடிக்கின்றொம் என்று நிறுவ முயற்சிக்கிறீர்கள் என்பது மட்டும் தெரிகின்றது. ஒருவரது கருத்துடன் விவாதிக்க முடியவில்லை என்றால் அதற்கு இலகுவான வழி அவருக்கு உடன்பாடில்லாத கருத்தை அவரது தலையில் கட்டி விமர்சிப்பது. இந்த ரெக்னிக் தான் தற்போது பரவலாகக் கையாளப்படுகிறது. இந்த சிற்றின்பப் பேர்வழிகள் கீபோர்ட் மார்க்ஸிஸ்டுக்கள் எல்லாம் தற்போது இந்த ரெக்னிக்கை தான் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். அதனைத்தான் நீங்களும் கைக் கொண்டிருக்கிறீர்கள். கேட்ட கேள்விக்குப் பதிலில்லை. தமிழ் தேசியத்தை கேள்விக்கு உள்ளாக்குவதில் என்ன தவறு என்று கேட்டால் உங்களைப் புலியின் வாலில் முடிஞ்சு என்னை சிங்கத்தின் வாலில் முடிஞ்சு இரட்டைக் கோபுர மணல் மேடுகளில் அமெரிக்க தேசியம் இருக்கா அது தமிழ் தேசியத்தோடு ரீ சாப்பிடுகிறதா என்றீர்கள்.

  எனது கேள்வி சாதாரணமானது: தமிழ் தேசியத்தை கேள்விக்கு உள்ளாக்குவதில் என்ன தவறு? கேள்விக்கு உட்படுத்தக் கூடாத விடயங்கள் ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும் எதிர்காலத்தில் அவற்றை கேள்விக்கு உள்ளாக்குவது பற்றி மறுபரிசீலனை செய்கிறேன்.

  த ஜெயபாலன்

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  மார்க்ஸிய கொள்கைகள், தமிழ் தேசியம் அடிப்படையில் “வியூகம்” அமைப்பதற்கு முன்னால், “கிளாஸிகள் முதலாலித்துவம்” ஆட்டம் கண்டுள்ளதை உணரவேண்டும். அது தற்போது ஒருவகை “டார்க்ஸிய கொள்கையில்” பாதுகாப்பு தேடுகிறது .”சீனாவில்” “பில்லினீயர்கள்” உருவாகுவதை “கன்ப்யூஷிய? கலாச்சாரம்” தடுக்கிறது. இது இலங்கை, இந்தியாவில் இல்லை. தற்போதைய “பொருளாதார சில்லலுக்கு” முக்கிய காரணம் “புற்றுநோய் போன்று” பில்லினியர்கள் உருவானதே காரணம். இவர்கள் “இயந்திர மயமாக்கப் பட்ட” பொருளாதார “நிர்வாகங்களிலிருந்தே” உருவானார்கள். இந்த “குடும்பங்களை” சுற்றி அடிமைகளாக, “அதிகாரமயமாக்கப் படாத” மக்கள், சேவகம் செய்ய பணிக்கப் படுகிறார்கள். “கெர்ரி ரிப்போர்ட்” தமிழர்களில் மட்டும் பில்லினேயர்கள் உருவாகுவதை தடுக்கிறது?- இதை எதிர்த்து வியூகம்” அமைக்கப் போகிறீர்களா?- இதுதான் தமிழ் தேசியமா?. குறுந்தாடி மார்க்ஸியம் பேசுகிறவர்கள் அமெரிக்காவை எதிர்க்கிறேன் பேர்வழி என்று இந்த “செந்தமிழ் தேசியத்திற்கு” ஆதரவு தரப்போகிறீர்கள?. மானாட,மயிலாட எல்லாம் முடிந்து, வேறு புதிதாக “கிரியேட்டிவ்” ஏதுவும் இல்லாத தேங்கிய நிலையில், பல ஆண்டுகளுக்கு இதை பிரதியாக்கம் (இயந்திர மயம்) செய்து “பிஸினஸ்” செய்ய பணத்துடனும், அதிகாரத்துடனும் காத்திருக்கிறது “ருடோப் மேஃடாக்”கின் “ஸ்கை மற்றும் ஸ்டார்” நிறுவனங்கள். இதற்கு எதிராக திராவிட இயக்கம் கட்டப் போகிறீர்களா?. “கெர்ரி ரிப்போர்ட்” பில்லீனேயர்களை (புற்று நோய்) கட்டுப்படுத்த நினைக்கலாம்?. புற்று நோய் நம்முடைய எதிரியைக் கொல்லுகிறது என்பதற்காக, புற்று நோயை வாழ்த்தி வரவேற்போமா?. சுய விமர்சன கேள்வி ஒன்று இதில் எழுதுகிறவர்கள் யாராவது உங்கள் இளமைக் காலம் போல் வாய்விட்டு சிரிக்கிறீர்களா?. பல ஆசிய நாடுகளின் கிராமங்களில் ஏழைகள் சப்பாட்டுக்கு இல்லாவிட்டாலும், மனதார சிரிக்கிறர்கள். இதற்கு காரணம், வாழ்க்கை “இயந்திர மயமாகல் அகாததினால்தான்!”. “டெமக்கரஸி” இல்லாமல், மக்கள் வெறும் பில்லினேயர்களின் இயந்திரங்களில் உழலும் பிண்டங்களாக ஆவதற்கு எதிராக சிந்திக்க வேண்டாமா?. “முடியாட்சிகளும்”, “கம்யூனிச சித்தாந்தங்களும்” இதிலிருந்து வேறுபட்டவை என்பதை தெளிக!.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மாற்றம் ஒன்று தான் மாறாத சக்தியுடையது என கருத்தில் எடுத்தால் உங்களின் சந்தேகத்திற்கும் பதில் கிடைக்கும் குசும்பு!. இதில் கவனிக்கப்பட வேண்டியது என்ன வென்றால் ஒரு தனிமனிதனின் தேவையிலோ விருப்பதின் தேவையிலோ இது நடைபெறுவதில்லை. ஒரு நாட்டின் பெரும் தொகையான மக்களின் விருப்பத்தின் பெயரில் நடைபெறுவது.
  எண்ணிக்கையில் குறைவாகா இருந்தாலும் ஒரு கட்சி தன்னை தத்துவவாத சித்தாந்ங்களில் தன்னை செழிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.புலிகள் தம்மை முப்படைகளாலும் பலப்படுத்தி தம்மை யாரும் வெல்லமுடியாது என்று கனவு கண்டிருந்த போது… விடிந்ததும் எழுந்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. எல்லாம் முடிவடைந்து போய்யிருக்கும் என்று கட்டியம் கூறியவர்களும் புலம்பெயர் தமிழர் ஓயிருவர் இருந்தார்கள் என்பதை நினைத்தால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் அல்லவா?.

  குசும்பு!. மாக்ஸ் தனது “கூலியுழைப்பும் மூலதனமும்” என்ற சிறு புத்தகத்தில் ஒரு அறிவுரை சொல்லுகிறர்… தொழிலாளர்களே! அயர்லாந்து பட்டினி போட்டு அடிபணியப் பண்ணியதை மறந்து விடாதீர்கள் என தொழிலாள வர்கத்தை பார்த்து எச்சரிக்கிறார். இதை மே 19ம் திகதிக்கு முன்பே பலதடவை தேசம்நெற்றில் பின்னோட்டம் இட்டு ஞாபகப்படுத்தியிருக்கிறேன். எது எப்படியிருந்தாலும் நாம் மட்டுமல்ல மனிதனே! தோல்விகளில் இருந்துதானே பலபாடங்களை கற்றுக் கொள்ளுகிறோம். இதை தமிழ்இனமும் கற்றுக்கொள்ளாது என ஏன்?சந்தேகப்படுகிறீர்கள். என்ன சிலகாலம் காலதாமதம் ஆகும். அப்போது முன்பிருந்த தளர்வு சோர்வுகளை நீக்கி வேகமாக முன்னேறுவார்கள் என எதிர்பார்கலாம். இலங்கையில் 1930-40 காலப்பகுதிகள் இப்படித்தான் தொழில்சங்க நடவடிக்கைகள் வளர்ந்து அசுர பலம் பெற்றிருந்தன.

  Reply
 • DEMOCRACY
  DEMOCRACY

  திரு ஜெயபாலன் அவர்களே!, அனோனிமஸை முழுமையாக “கண்டம்” செய்யாதீர்கள். டெலோ சபாரத்தினம் கொல்லப்பட்ட போது, கையில் பசைகள் காய்ந்து கடிக்க, “பிரபாகரனே தமிழகத்தை விட்டு வெளியேறு” என்று தமிழகம் முழுவதும், சொந்த செலவில், போஸ்டர் அடித்து வெளியிட்டவன் நான். ஆனால் இதயத்தில் ஒரு ஈரப்பகுதி அதை ஏற்கவில்லை. /மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். /
  Kusumpu on December 22, 2009 3:01 pm .
  இது முற்றிலும் தவறான கட்டுக்கதை. இதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள்./—
  இது சரிதான்!.சரியில்லை என்றால்,”சிங்களவர் மீது, மகிந்த ராஜபக்ஷே போன்றவர்கள் மீது”, என்னுடைய கருத்து தவறு என்று அர்த்தம். அவர்கள் தமிழ்நாட்டு காரர்கள் மீதைவிட, தங்கள் நாட்டவர் என்று, ஈழத்தமிழர் மீது பரிவு கொண்டவர்கள். இன்னமும் அவர்கள் துட்ட கைமுனுவாகத்தான் இருக்கிறார்கள்- இயந்திர மயமாக்கப்படவில்லை- இலங்கைத் தமிழர்களைப்போல். எது எப்படியோ பொருத்திருந்து பார்ப்போம்!.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  //மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். /
  இது முற்றிலும் தவறான கட்டுக்கதை. இதற்கான ஆதாரங்களை முன் வையுங்கள்.//அனோமியஸ்
  இது கதை அல்ல பின்னோட்டம். இதில் என்ன தவறு இருக்கிறது? உங்களுக்கான பதிலை சந்திரன் ராஜா தந்திருக்கிறார் சரியாக வாசியுங்கள் /அனோமியஸ் யாருக்கு மரணதண்டனை விதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்புங்கள். விடை உங்களுக்கு சுலபமாகக் கிடைக்கும். ஈழத்தில் குடிப்பதற்கு தண்ணீரோ தின்பதற்கு உணவோ இல்லாததிருந்து போதும் மரணங்களும் மரணதண்டனைகளும் தானோ எம்மிடையே மலிவாக இருந்தன….

  ஆரம்பகாலத்தில் புலிகளுக்கும் பிரிந்து போன புளொட்டுக்கும் உள்ள அரசியல் போராட்ட முறைகளில் தத்துவார்த்தங்களில் உள்ள வேறுபாடுகளைப் புரித்திருந்தால்> தெரிந்திருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். புளொட்டின் தமிழாக்கம் என்ன என்று சொல்லுங்கள் அங்கேயே உங்களுக்குப் பதில் இருக்கிறது.

  Reply
 • Kusumpu
  Kusumpu

  சந்திரன் ராஜா- உங்களின் கருத்துடன் எனக்கு வேறுபாடு இல்லை. என் வேதனையைத்தான் எழுதினேன். அடிமட்ட சமதர்மக் கொள்கைகளைக் கொள்கையாகக் கொண்ட பல இயங்கங்களே காப்போக்கில் துப்பாக்கி எனும் முதலாளிக்கு விலைபோனார்கள். இன்று பாருங்கள் போரினால் தமிழர்கள் கொல்லாப்பட்டார்கள் ஆனால் சிங்கள மக்களின் அடிமட்டத் தேவைகளேயே பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு மக்கள் தென்பகுதியில் உள்ளார்கள். உண்மையில் புரட்சி நடந்திருக்க வேண்டிய இடமே தெற்குத்தான். இதற்கிடையில் போரினால் ஏற்பட்ட செலவை முதுகில் தாங்கி நிற்பவர்களும் சிங்களத் தொழிலாளர் வர்க்கம் என்பதை யாரும் முறுத்துரைக்க முடியாது. இப்படி இருந்தும் நவசமாஜக்கட்சியில் எத்தனை பேர் உள்ளார்கள். எத்தனை வேட்டு விடுப்போகிறது. விக்கிரமபாகு புலிகளை முழுமையாக ஆதரிக்கவில்லை பல இடங்களில் கண்டித்தும் உள்ளார். இன்று தேர்தலில் கூட இரண்டு ஒரோ கொள்கைகளையுடைய இடதுசாரிகள் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு சிங்களமக்களிடையே செல்வாக்கு அதிகம் இல்லை. வடக்கும் சரி தெற்கும் சரி இன்னும் சரியாகச் சிந்திக்கவில்லையே என்பது வேதனைக்குரியதே. இடதுசாரித்துவம் பேசித்திரிந்த மகிந்த செய்தது என்ன? மாற்றம் என்பது மாறாததுதான். மாறத்தான் யார் விடுகிறார்கள் குரல்வளையில் அல்லவா கத்தி வைக்கிறார்கள்.

  Reply
 • naveenan
  naveenan

  தமிழ்த்தேசியம் மாத்திரமல்ல> தனிமனிதனில் இருந்து சகலதும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். இது சமூக விஞ்ஞானம் சார்ந்த விமர்சன + சுயவிமர்சனமுறை. இவற்றை நாம் சரிவர கையாண்டால்> ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை இலகுவாக சரிவர அடைய முன்னேறலாம் .
  ஜெயபாலன்> நீங்களும் சில விடயங்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அது சொல்லாடல்கள சம்பந்தப்பட்டது. அண்மையில் நீங்கள் ஒருசிலரை நோக்கி கீபோட் -சொகுசு மார்க்சியவாதிகள் என பாவித்த இச்சொற்கள் பலரை நோக வைத்துள்ளது. நேற்யறயதினம் நான் ஓர் தோழருடன் (கொழும்பிற்கு) கதைத்தபொழுது இதை சுட்டிக்காட்டினார். நீங்கள் ஒருசிலர் நோக்கியே என இதை வகைப்படுத்தினாலும் > இணையதளத்தின் முன்னால் + கீபோட்டில் கை வைப்பவர்களை நோகடிக்க வைக்கழன்றது. காரணம் செயற்பாடற்ற பலர் சமுகநலன் சார்ந்த + சமூக விஞ்ஞானம் சார்ந்த பலவற்றை சொந்தப் பெயர்களில் எழுதுகின்றார்கள். அடுத்து தாங்கள் குறிப்பிடும் நபர்கள் அத்தகையவர்கள்தான் என்றாலும்> அவர்களுக்கான பதில் உதுவல்ல. கருத்துப்பலமற்ற > தத்துவப்பலமற்ற தர்க்கப்பலமற்ற நிலையோ என எண்ணண வைக்கும. பலரை எண்ணவைக்கின்றது. அடுத்து தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான மே 18 இயக்கத்தின் நிலைப்பாட்டை அறியத்தரவும்.

  Reply
 • sivam
  sivam

  [chandran.raja on December 23, 2009 10:24 am]
  //எண்ணிக்கையில் குறைவாகா இருந்தாலும் ஒரு கட்சி தன்னை தத்துவவாத சித்தாந்ங்களில் தன்னை செழிப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்//
  //மனிதனே! தோல்விகளில் இருந்துதானே பலபாடங்களை கற்றுக் கொள்ளுகிறோம். இதை தமிழ்இனமும் கற்றுக்கொள்ளாது என ஏன்?சந்தேகப்படுகிறீர்கள். என்ன சிலகாலம் காலதாமதம் ஆகும். அப்போது முன்பிருந்த தளர்வு சோர்வுகளை நீக்கி வேகமாக முன்னேறுவார்கள் என எதிர்பார்கலாம்//

  Kusumpu on December 23, 2009 6:21 pm
  ///உண்மையில் புரட்சி நடந்திருக்க வேண்டிய இடமே தெற்குத்தான். இதற்கிடையில் போரினால் ஏற்பட்ட செலவை முதுகில் தாங்கி நிற்பவர்களும் சிங்களத் தொழிலாளர் வர்க்கம் என்பதை யாரும் முறுத்துரைக்க முடியாது.///

  ///வடக்கும் சரி தெற்கும் சரி இன்னும் சரியாகச் சிந்திக்கவில்லையே என்பது வேதனைக்குரியதே. இடதுசாரித்துவம் பேசித்திரிந்த மகிந்த செய்தது என்ன?///

  உங்கள் இருவரதும் கருத்துக்கள் முக்கியமானவை, சில நிபந்தனைகளுடன் நான் உங்களுடன் உடன்படுகின்றேன். இடது சாரிகள் என்பது ஒரு பொதுமையான பதம். ஒரு கட்சி இடது சாரியாக பிரகடனப்படுத்திக் கொள்வது மட்டும் அது தொழிலாள ஒடுக்கப்பட மக்களின் நலன்களை பிரதிநிதிப் படுத்தும் என்ற உத்தரவாதம் இல்லை. இதற்கு உலகம் முழுக்க உதாரணம் காட்டலாம்.

  லங்கா சமசமாச கட்சியின் வரலாறு தொடர்பாக விளங்கிக் கொள்ளாமல் தமிழ் தேசிய பிரச்சினை புரியாத புதிராக தான் இருக்க முடியும். இரண்டு இடதுசாரி கட்சிகளும் வித்தியாசமான கொள்கைகளை பிரதிநிதிப் படுத்துகின்றன. இந்த வித்தியாசத்தை நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும். இது உங்களது அரசியல் கடமை. அத்துடன் ஏன் மார்க்சிச கருத்துக்கள் எப்போதும் தாக்குதலுக்கு முகம் கொடுக்கின்றது என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு ஒரே வழி வரலாறு தொடர்பான படிப்பு. இது நீங்கள் சுயமாக எடுக்க வேண்டிய முடிவு. மார்க்சிச கருத்துக்களுக்கு இன்று செல்வாக்கு இல்லாமல் இருக்கலாம் நீங்கள் சொல்வது போல் வரலாறு திருப்பங்களை திடீரென ஏற்ட்படுதியிருப்பதை மனித சமுதாயத்தின் ஆரம்பத்தில் இருந்தே காணலாம்.

  தேசிய விடுதலை போராட்டத்தின் தோல்விக்கு புலி உட்பட்ட அனைத்து தேசிய போக்குகளின் வேலைத்திட்டம் மட்டும் தான் காரணம் என்பதை விளங்காத மட்டும் ஒரு அடி முன்னோக்கி போக முடியாது. எனவே சிலரால் ஒரு தும் முன்னோக்கி போகமுடியாது. முன்னர் பிரபாகரனின் “பாசிச” நடவடிக்கைகளை பற்றி காலத்தை கடத்தினார்கள் இப்போது மே 18 இயக்கத்தின் அங்கத்தவர்கள் பற்றியும் அவர்களது அரசியல் எதிரிகள் தொடர்பாகவும் காலத்தை கடத்துகின்றார்கள். இது தேசியவாத அரசியலின் உயிர் நாடி. அதிஸ்டவசமாக தமிழ் தேசிய வாதத்திற்கு மட்டும் சொந்தமானதல்ல. உலகம் முழுக்க காணக்கூடிய ஒன்று.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  குசும்பு உங்கள் பின்னோட்டம் மனதிற்கு ஆறுதல் தருகிறது. உங்களுக்குள்ள சந்தேகங்கள் எவருக்கும் வரக்கூடியதே. வரும் காலங்கள் சரியான முறையில் பதில்அளிக்கும் என நம்புவோமாக!

  சமதர்மம் பொது உடமை என்பதொல்லாம் என்னை பொறுத்த வரை இன்றோ நாளையோ இன்னும் பத்து வருடங்களுக்கு சாத்தியமாகப் போவதில்லை. அதற்கான வழிகளை வகுத்து விடலாம் அல்லது ஒரு அடியாவது எடுத்து வைக்க முயற்சிக்கலாம் என்பதைத் தவிர வேறு நோக்கம் எனக்கு எதுவுமே இல்லை.

  வர்க்க உணர்வுள்ளவனாகவும் என்இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளதாகவுமே என்னை கருதுகிறேன். ஆனபடியால் பயம் இனி ஏன்? சமதர்மம் சோசலிஸம் என்பதைப் பற்றி ஒரு தமிழன் கதைப்பாராகயிருந்தால் அது எப்படி? என்கிற கேட்கிற உரிமை உங்கள் இனத்தில் பிறந்தவாகிய எனக்கும் இருக்கிறது. அதை புலிகளை தவிர யாரும் மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  Reply
 • Anonymous
  Anonymous

  ஜெயபாலன்,
  முதலாவது தமிழ்த் தேசியத்தை புலித் தேசியமாக்கியது. இரண்டாவது புலிகளின் தோல்வியை தமிழ்த் தேசியத்தின் தோல்வியாக்கியது.இந்த அனுமானங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை கேள்விக்குறியாகுவது பௌத்த சிங்களப் பேரினவாதிகளிலிருந்து, இடதுசாரிகளுடாக தமிழ் அங்கிடுதெத்திகளிடம் பரவியிருந்த்தது என்பதையே முதலிலே சொல்லியிருந்தேன். நீங்கள் எதையும் கேள்விக்குரியதாக்குவது என்னுடைய தயவில் அல்ல. எனது ஆதங்கம் எல்லாம், இப்போது தமிழ்த் தேசியத்தை கேள்விக்குரியாக்குவதன் நோக்கமென்ன? அது யாருக்கு சேவை செய்ய என்பதே? புலிகளின் தோல்வியின் பின் தமிழ்த் தேசியத்தை கேள்விக்குரியதாக்குவது என்பது புலிகளின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதும், அவர்களின் இடத்தை மாற்றீடு செய்கிற முயற்சிதான். அத்தோடு அது அடக்குமுறையாளனுக்கு சேவை செய்வதாக மட்டுமே ஆகும். முதலில் தமிழ்த் தேசியம் என்றாலென்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். வரைவிலக்கணங்களுக்குள் அப்பாற்பட்டு ஒரே ‘உணர்வு’ பூர்வமான இணைப்பும் முனைப்புந்தான் தமிழ்த் தேசியம். இது சிங்கள பௌத்த பேரினவாத அடக்கு முறையில் கூர்ப்படைந்தது. இதை மூர்க்கமடையச் செய்ததில் புலிகளுக்கு ஒரு பங்கு இருக்கிறது. புலிகளின் தோல்வி ஒரு மூர்க்க நிலையை புறம் தள்ளி இருக்கிறது. அவ்வளவே. சிங்கள பௌத்த பேரினவாத அடக்கு முறை இருக்கும் வரை தமிழ்த் தேசியம் மூப்படைந்தே செல்லும்.

  Reply
 • Anonymous
  Anonymous

  /மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். /
  புலிகளிலிருந்து புளொட் உருவானது, மக்கள் போராட்டம் என்கிற தத்துவார்த்த முரண்பாட்டிலா? அந்த முரண்பாட்டில் மரணதண்டனை விதித்ததாக அந்த எண்பதுகளில் ஏதாவது பதிவு அல்லது நிகழ்வு உங்களால் காட்ட முடியுமா?

  Reply
 • santhanam
  santhanam

  சுந்தரத்தின் மரணதண்டனையை முதல் குறிப்பிடலாம் என்னும் பல ரவி முர்த்தி வரை

  Reply
 • பல்லி
  பல்லி

  ///மக்கள் போராட்டம் என்றதுமோ புரொட்டுக்கு மரணதண்டனை விதித்தனர் புலிகள். /
  புலிகளிலிருந்து புளொட் உருவானது, மக்கள் போராட்டம் என்கிற தத்துவார்த்த முரண்பாட்டிலா? அந்த முரண்பாட்டில் மரணதண்டனை விதித்ததாக அந்த எண்பதுகளில் ஏதாவது பதிவு அல்லது நிகழ்வு உங்களால் காட்ட முடியுமா?

  மிருகங்களின் போராட்டத்தில் 1980ல் இருந்து 2009 வரை மரண தண்டனையை விட வேறு விஸேடமகா எதுவும் நடந்ததாய் எனக்கு தெரியவில்லை; மக்கள் எப்போது போராடினார்கள், என்பதும் எனக்கு தெரியவில்லை, மக்களை அமைப்புகள் தமது கேடயமாகவே அன்று இருந்து இன்றுவரை வைத்துள்ளனர், பல சதிராட்டத்தில் பார்வையாளராகவும் மக்கள் பங்குபெற்றுள்ளனர்; அம்முட்டுதான்;

  Reply
 • Anonymous
  Anonymous

  குறிப்பிட்ட விடையத்தை எடுத்துக் கொண்டு ஆய்வதை விடுத்து, எல்லாவற்றையும் பொதுமைப் படுத்தி, தெரியாத ,அறியாத சம்பவங்களை, கருத்துகளை வெளியிடுவது நீங்கள் செய்கின்ற வரலாற்றுத் துரோகம். இயங்க வைக்கின்ற பொம்மைகளல்லாது,இயங்கியல் மனிதர்களாக மாறுங்கள். உங்களால் சிந்திக்க முடிந்த்தால், வெறும் குரோதம் மட்டும் எஞ்சாது. மற்றவனில் பழி போட்டு விட்டால்,நாமே உயர்ந்து விடலாம் என்கிற மனப்பான்மையை தவிர,வேறென்ன உங்களிடம் இருக்கிறது. சேற்றிலே கால் வைக்கிறவனுக்கு,நாற்றுடன் நடை பயில்பவனுக்கு சோற்றிலே கை வைக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

  Reply
 • Anonymous
  Anonymous

  சந்தானம்!
  சுந்தரத்தின் கொலை மக்கள் போராட்டத்திற்க்கெதிரான புலிகளின் கொலையாக பிரச்சாரப் படுத்தப்பட்டது. அதில் எந்த உண்மையும் இல்லை.
  ஆயுத போராட்டங்கள் எதையும் ஒரு வருடத்திற்கு ஆரம்பிப்பதில்லை என்ற ஒப்பந்தப்படி பிரிந்து போன பின், வட்டுக்கோட்டை தபால்நிலையத்தை கொள்ளையடித்ததும், ஆனைக்கோட்டை போலிஷ் நிலையத்தை தாக்கியதும் ப்லொட்டின் முதல் மக்கள் போராட்டம் என்பதா? அந்த ஒரு வருடம் புலிகள் ஆயுதப் போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை.

  ‘துரோகத்தின் பரிசு’ என்று புலிகள் விளக்கம் அளித்திருந்தார்கள்.

  இது ஜானுக்கும் தெரிந்த்திருக்கும். இது புலிகளைப் போற்றவும், ப்ளொட்டை தூற்றவும் செய்கிற முயற்சியல்ல. மாறாக உங்கள் சிந்தனையை சீர்ப்படுத்துகிற முயற்சிதான்.

  Reply
 • santhanam
  santhanam

  அதில் பட்டு தெலிந்த பண்டிதராக தேசத்தில் நிற்கிறியல்—-

  Reply
 • santhanam
  santhanam

  வரலாறு தெரியாது கரு எழுதவேண்டாம் அரச இயந்திங்களின் இயங்குசக்திகளின் முடக்கத்தின் அடுத்த நகர்வுதான் மக்களின் கிளச்சி அரசுக்கெதிரான அடித்துடைப்புதான் தபால் பொலிஷ் புளட் புலிக்குள்ள வேறுபாடே மக்களா கெரில்லாவா அதனால் புளட்டில் 1985 5000 தோழர்கள் புலியில் 400 அம்மான்கள்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இயக்கத்தின் வரலாறு நான் படித்த காலங்களில் அறுபது சதத்திற்கு விற்ற மர்மகதை புத்தங்கள் போல் உள்ளது. அதுவும் இரவல் வாங்கிப்படித்தால் இன்னும் கடைசி இரண்டு பக்கம் கிழிந்திருந்தாலோ சொல்லத் தேவையில்லை.
  இது போலத்தான் இருக்கிறது இப்படியான கொலைகளை யார் செய்து முடித்திருப்பான்? இந்த கொலைகாரன் யார்? எவர்? இந்த மர்மக் கொலைகளை அதன் முடிவுகளையும் அறிய மிகவும் ஆவலா உள்ளார்கள். இதை அறியாத வரை இவர்கள் சாப்பிட்ட காட்டுபண்டி மான் கோழி மயில் சீஸ் இன்னும் இத்தியாதி பொருள்கள் வயிற்றுக்குள் இறங்கி செமிபாடு ஆகாத குணத்தாலேயே அதற்கு நிவாரணம் தேட ” தேசம்நெற்றை” அணுகிறார்கள். அதற்கு ஜெயபாலன் என்ன செய்யமுடியும்?. நாம் தான் எப்படி உதவிசெய்ய முடியும்?.

  Reply
 • பல்லி
  பல்லி

  //சேற்றிலே கால் வைக்கிறவனுக்கு,நாற்றுடன் நடை பயில்பவனுக்கு சோற்றிலே கை வைக்கும் உரிமை இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.//
  சரி விடுங்க மற்றவை றொட்டியோ அல்லது பாணோ சாபிடட்டும்; என்ன கண்டு பிடிப்பு?

  //அந்த ஒரு வருடம் புலிகள் ஆயுதப் போராட்டம் எதனையும் முன்னெடுக்கவில்லை.//
  இது கூட நல்ல ஒரு கண்டுபிடிப்புதான்; தலைவர் இருந்தால் ஏதாவது ஒருபட்டம் (துரோகியல்ல) நிட்ச்சயம் உங்களுக்கு உண்டு;

  சந்திரராஜா உங்கள் அளவுக்கு எங்களால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்த முடியாது, ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில் நம் கண் எதிரே நடக்கும் சமவங்களை மட்டும் பலருடன் பகிர்ந்து கொள்கிறோம்; உதாரனத்துக்கு இன்று வியூகம் அமைக்கும் ஜான் அன்று முகாமில் ஒரு தோழருக்கு சப்பாத்து காலால் உதைத்தார் என ஒருவர் இங்கே பின்னோட்டம் விட்டார், அதில் உன்மை பொய் பல்லிக்கு தெரியாது, ஆனால் அந்த சம்பவத்தை விசாரித்து பார்க்கும்போது பல சாக்கடைகள் வருகிறது, எத்தனையோ குடும்பத்துக்கு இன்றுவரை தனதுபிள்ளை ஏன் கொல்லபட்டான் என்பது கூட தெரியாது, ஆனால் அதில் பல விடயங்களை நாம் விமர்சித்துள்ளோம்; நாம் எமக்கு தெரிந்தவைகளைதான் எழுதுகிறோம், தெரியாதவைகளை தெரிந்து கொள்ள முயல்கிறோம்; அதேபோல் நீங்கள் படித்தவைகளை நம்பி எம்மை கேலி செய்யிறியள்; உங்கள் கேலிதான் எங்களை என்னும் பலரை இனம்கான வைக்கிறது; செமிபாடு என்பது சாப்பாட்டை பொறுத்த விடயம் அதனால் அது எதை யார் சாப்பிடுகிறார்கள் என்பதை வைத்தே தீர்மானிக்கலாம்;

  Reply
 • chandran.raja
  chandran.raja

  போன நுhற்றாண்டின் ஆரம்பதில் சூப்பு குடிக்கிறதிற்காகவே ஒரு தொழிலாளி பதினாறு மணத்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது. சில வேளை அதற்கும் கூடுதலாக. பஞ்சம் பசி பட்டினி நோய் பிணியென ஒரு நாட்டை பார்க்க வேண்டுமென்றால் அதோ… சீனாவைப் பாருங்கள் என்றார்கள் மேற்கு நாட்டுகாரர்கள். ரஷ்சியாவில் புரட்சிக்கு பிறகு தான் விவசாயிகளும் பள்ளிக்கூடம் சென்றார்கள். முதலாவது மின்குழியையும் உற்பத்தி செய்தார்கள். இன்னும். இன்னும்.. கம்யூனிஸ்கட்சி அறிக்கை வெளிவந்த பிறகு உலகத்தொழிலாளர் தாங்கள் பலம் பொருந்திய சமூகசக்தி என்பதை உணர்ந்தார்கள். தொழிலாளர்கள் மிருகத்தனமாக வேலை வாங்குவதும் எட்டுமணத்தியால வேலை சட்டமாக்கப் பட்டதும் தொழிலாளர் போராட்டத்தாலேயே இன்று நாம் அனுபவிக்கிற சுகங்களும் அவர்களின் தியாகத்தால் உருவானதே. முப்பது வருடங்கள் நாட்டை உலுப்பி எடுத்ததும் எமது இடதுசாரி கட்சிகளின் மந்தப்போக்களாலும் வரலாற்றின் நெளிவு சுழிவுகளாலேயும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவ்வளவு காலவரை அறியமுடியாவிட்டால் நிச்சயம் அறிந்துகொள்வது அவசியம் ஆகிறது. இருந்தால் தான் உருப்படியான எதையும் சாதிக்கமுடியும். இது எனது தாழ்மையான கருத்தாகும்.

  Reply
 • Kusumbu
  Kusumbu

  /வர்க்க உணர்வுள்ளவனாகவும் என்இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்குள்ளதாகவுமே என்னை கருதுகிறேன்/-சந்திரன் ராஜா! உங்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன்.
  /புலிகளிலிருந்து புளொட் உருவானது மக்கள் போராட்டம் என்கிற தத்துவார்த்த முரண்பாட்டிலா? அந்த முரண்பாட்டில் மரணதண்டனை விதித்ததாக அந்த எண்பதுகளில் ஏதாவது பதிவு அல்லது நிகழ்வு உங்களால் காட்ட முடியுமா?/- அநோனிமஸ்-
  தத்துவரீதியான முரண்பாடு இதுதான். உங்களுக்குத் தெரியாவிட்டால் நாம் ஒன்றும் செய்ய இயலாது. பதிவுகளைத் தேடவேண்டிய அவசியம் எமக்கில்லை பக்கதில் இருந்தவர்கள் நாங்கள். ஊர்மிளா கதை ஒரு காரணமாக இருந்தாலும் தத்துவார்த்தம் உள்ளூட்டமாக மனைத்து கொண்டிருந்தது. அன்றிருந்த பிரபாகரன் போன்றோருக்கு போராட்டம் பற்றிய தெழிவான நோக்கு சிந்தனை இருக்கவில்லை. சுந்தரம் சுடப்பட்டதற்கு போராட்ட வழியும் பொறாமையுமே காரணம். சுந்தரம் நேரடியாக புலிகளில் இருக்கவில்லை என்பது உமக்குத் தெரியுமா? சுந்தரம் புலிகளின் மத்திய செயற்குழுவில் இருந்தாரா? எதற்காக பிரபாவும் சீலனும் சுந்தரத்தைச் சுடத்திரிந்தார்கள்? புலிகளுக்குள் மக்கள் போராட்டம் என்பதைப் பற்றிக் கதைத்ததும் பஸ்தியாம்பிள்ளை அழிப்புடன் நடைமுறைப்படுத்த முயற்சித்ததும் உமாதான்.

  / வரலாறு தெரியாது கரு எழுதவேண்டாம் அரச இயந்திங்களின் இயங்குசக்திகளின் முடக்கத்தின் அடுத்த நகர்வுதான் மக்களின் கிளச்சி அரசுக்கெதிரான அடித்துடைப்புதான் தபால் பொலிஷ் புளட் புலிக்குள்ள வேறுபாடே மக்களா கெரில்லாவா அதனால் புளட்டில் 1985 5000 தோழர்கள் புலியில் 400 அம்மான்கள்./சந்தனம்- அனொனிமஸ்சுக்கு எல்லாம் அனொனியுமாகத்தான் இருக்கிறது. புதியபாதை வாசித்திருந்தால் புரியும் சுந்தரத்தின் வேலைபாடும் புதியபாதையின் தெளிவும். சந்தனம் விட்டுவிடுங்கள் சும்மா எழுதவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார்கள்.

  /ஆயுத போராட்டங்கள் எதையும் ஒரு வருடத்திற்கு ஆரம்பிப்பதில்லை என்ற ஒப்பந்தப்படி பிரிந்து போன பின் வட்டுக்கோட்டை தபால் நிலையத்தை கொள்ளையடித்ததும்/ அனொனிமஸ் குளம்பாதையும். கொள்ளைகளை ஆயுதப்போராட்டமாக்க முயற்சியாதையும். அதுசரி பிரபா; குட்டிமணி; செல்லக்கிளி; அவருடைய அண்ணன் எல்லாம் உங்கள் கண்ணில் விடுதலை வீரராக இருக்கும் போது கொள்ளை கொலை செய்பவர்கள் எல்லோரும் விடுதலை வீரர்கள் தான்.

  Reply
 • Thaksan
  Thaksan

  “சுந்தரத்தின் படுகொலை துரோகத்தின் முத்திரையா?” என்ற தலைப்புடன் அப்போது புளொட் விடுத்த துண்டுப்பிரசுரம் நினைவில் வருகிறது. அதில் புலிகள் இயக்கத்தின் பிளவுக்கான காரணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது நெல்லியடியில் தங்கிருந்த சீலனிடம்(சாள்ஸ் அன்டனி) இது பற்றி கேட்டபோது “உவங்கள் சீனாவின் சிவப்புமட்டை புத்தகத்தை படித்துப்போட்டு குழப்புறாங்கள். சனத்தை சேர்த்து போராடுறதெண்டால் நடக்கிற காரியாமா என்று கொஞ்சம் யோசித்து பாருங்கடாப்பா” என்றாராம். கடைசி வரை புலிகள் மக்களை நம்பவேயில்லை…….

  Reply
 • Kusumpu
  Kusumpu

  தக்சன் நீங்கள் எழுதியது தான் உண்மை. சரி சுந்தரம் போன்றோர் சிவப்புமட்டையை படித்துக் கிழித்தார்கள். புலிகளுக்கு என்றாவது போராட்டம் எதிர்காலம் அரசியல் போன்றவற்றில் எப்போ தெளிவிருந்தது. புலிகளின் பிரசாரக் கூட்டங்களில் எப்படித் தமிழீழம் காண்பீர்கள் என்றால் யாருமே எவருமே சரியான பதில் சென்னதில்லை. இப்பவாவது புலிவால்கள் யாராவது சொல்வீர்களா

  Reply
 • sivam
  sivam

  சந்திரன் ராஜா, குசும்பு
  உங்கள் இருவரது கருத்து தொடர்பாக நானும் இங்கே ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தேன். எனது கருத்து தேசிய விடுதலை இயக்கங்களின் இடது சாரி தன்மை தொடர்பாக இருக்கவில்லை.

  அனேகமாக எல்லா இயக்கங்களும் இடது சாரி கருத்துக்களை பெயரளவில் தன்னும் சொல்லிக்கொண்டன. புலிகளின் முதலாவது புத்தகம் “சோஷலிச தமிழ் ஈழத்தை நோக்கி” என்பதாகும். இந்த புத்தகம் பிரிவினை வாதத்தை வலுப்படுத்தும் நோக்கில் லெனினின் சுயநிர்ணய உரிமை வாதங்களை இரவல் வாங்கி இருந்த்தது. பிரதானமாக சிங்கள தொழிலாள வர்க்கத்தினை முழுமையாக நிராகரித்தது.

  PLOT மக்கள் போராட்டம், சிங்கள மக்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. இந்த இரண்டு இயக்கங்களிலும் இருந்திருக்க தேவை இல்லை புலிகளின் உடைவு, PLOT இன் ஆரம்பம் அரசியல் ரீதியானது என்பதை தெரிந்து கொள்வதற்கு.

  எப்பிடி இருப்பிலும் இதன் மூலங்களை கண்டு பிடிக்க முயற்சிப்பதன் நோக்கம் என்ன? இது எந்த வகையில் எதிர்காலத்துக்கு தேவை என்ற கேள்விகளை எழுப்ப வேண்டும். புலிகளின் அன்றைய உடைவு, மற்றைய இயக்கங்களின் இனோரன்ன பிரசினைகள். பல டசின் கணக்கான இயக்கங்களின் ஆரம்பம். புலியின் ஏகபோக அரசியல் அதன் விளைவுகள் என்ற வழமையான சிந்தனைக்குள் இருந்து வெளியில் புதிய கேள்விகளை எழுப்ப வேண்டும்.

  இலங்கையில் பலமான இடது சாரி பாரம்பரியம் இருந்தும் ஏன் வர்க்க புரட்சி சாத்தியமாக படவில்லை? ஏன் இலங்கை கம்னிஸ்ட் கட்சி, சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றில் இருந்து விலகியோர் தேசிய விடுதலை இயக்கங்களின் அரசியல் குருக்களாக செயற்பட்டனர்.

  விசேடமாக இலங்கையின் இடது சாரி கட்சிகளின் வரலாறு தெரியாமல் தேசிய இனப்பிரசினை விளங்கிக் கொள்ள முடியாது

  மே 18 அமைப்பினர் தேசிய இயக்கங்களில் ஏற்பட்ட பிழைகளை திருத்தினால் ஒரு புதிய புனிதமான இயக்கத்தினை பிரிவினை வாதத்தின் அடிப்படையிலோ அல்லது தீவு முழுக்க புரட்சி செய்ய ஒரு தமிழ் தேசியத்தின் அடிப்பையிலோ உருவாக்க முடியும் என்று கருதுகின்றனர் என்று நான் நினைக்கின்றேன்.

  இதற்கு முன் நிபந்தனை ஆக சுயவிமர்சனம் என்ற பரிதாபமான அரசியலை தெரிந்து எடுத்திருக்கின்றார்கள். சேத்துக்குள் நின்றுகொண்டு சேத்தினை கழுவ முடியாது, மாறி மாறி முடிவில்லாமல் பூசலாம். தப்பித் தவறி சுத்தமாக வெளியில் வந்தாலும் தேசிய வேலைத் திட்டத்தின் குணாம்சம் மாறாது.

  நோபல் பரிசு கிடைத்த பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் தலைவர் அரபாத் மரணிக்கும் போது இயக்கத்தின் நிதி தொடர்பான தகவல்கள் அடங்கிய ஓர் சிறிய புத்தகத்தை துலைத்து விட்டார். இன்று வரை தெரியாது இயக்கத்தின் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்று.

  கேள்வி தனிமனிதர் இல்லை என்ன வேலைத்திட்டம் என்பது தான்

  Reply
 • பல்லி
  பல்லி

  ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது எல்லா தறுதலையும் அயல்நாட்டு வட்டவாளங்களை தூக்கத்தை கெடுத்து படித்து அதை எமது சமூகத்தின் மீது திணிக்க அரும்பாடு பட்டார்களே தவிர எமது சமூகத்தின் தேவையையோ அல்லது விருபத்தையோ சிறிதேனும் புரியவும் இல்லை விரும்பவும் இல்லை, பக்கத்து நாட்டில் இருந்த வர்க்கத்தை கவனித்த அமைப்புகள் எமது நாட்டில் இருந்த சொர்க்கத்தை மறந்து தொலைத்தனர், அதுவே இன்று நாம் அகதியாகி பலரை அகதியாக்கி சிலரை துரோகியாக்கி; இன்னும் பலரை மாவிரர் என சொல்லி இப்படி பலவகையிலும் மரணங்களையும் நியாயபடுத்தி இன்று மக்களை அனாதைகள் ஆக்கி அவன் அவன் அயல் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் அரசியல் செய்கிறான், ஆனாலும் இன்று வரை பக்கத்து நாட்டு வர்க்கம் பற்றி பேசுவதை மட்டும் மதுபோதையிலும் மறப்பதில்லை;

  Reply
 • BC
  BC

  //sivam- அனேகமாக எல்லா இயக்கங்களும் இடது சாரி கருத்துக்களை பெயரளவில் தன்னும் சொல்லிக்கொண்டன. புலிகளின் முதலாவது புத்தகம் “சோஷலிச தமிழ் ஈழத்தை நோக்கி” என்பதாகும்.//
  இது சரியான தகவல். எனக்கு தெரிந்தவர் ஒருவர்(உங்கள் பாசையில் முன்னாள் போராளி) இது பற்றி முன்பே கூறியிருந்தார். அந்த புத்தகத்தில் என்ன எழுதப்பட்டது என்று தனக்கும் மற்றவர்களுக்கும் விளங்கவில்லை என்றும் கூறினார்.

  //PLOT மக்கள் போராட்டம், சிங்கள மக்கள் இணைக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது.//
  சிங்கள மக்கள் இணைக்கப்பட வேண்டுமானால் பின்பு எதற்க்கு தமிழீழ போரட்டம்?

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இளமைப் பருவகாலம் ஏதாவது புதுமை செய்யவேண்டும் என்பதே எண்ணிக் கொண்டிருக்கும். இந்த விசையால் நானும் ஒருகாலத்தில் உந்துப் பட்டவனே!. இளம் வயதில் இடதுசாரி இயக்களில் ஈர்ப்பு கொண்டு அதை பின்பற்றினாலும் புலம்பெயர் தேசத்திற்கு வந்து இன்னும் கூடுதலாகியதே ஒழிய குறைவில்லை. இதன் அர்த்தம் புரட்சிகர உணர்வையும் சிந்திக்கிற தன்மையையும் யாரும் அடக்கி வைக்கமுடியாது என்பதே உண்மை.
  சிவம்! இனி நாம் என்ன செய்வது கேட்டால் ஒன்றுமே செய்யவேண்டாம் என்று தான் சொல்வேன். விரக்தியின் காரணம் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
  தமிழ்மக்கள் மட்டுமல்ல சிங்களமக்களும் அவ்வளவு தூரத்திற்கு துன்பப் பட்டுவிட்டார்கள்.நுhறு ஆண்டுகள் சென்றாலும் ஆறாத-மாறாத வடுகள் தமிழ்முஸ்லீம் மக்களுக்கு- ஆறுதல் தேடக்கூடிய நிழல்களை ஏற்படுத்திக் கொடுக்க முறச்சிப்போம். வடக்கே கிழக்கே தேய்ந்துமறைந்து போன தொழில்சங்கங்கள் விவசாயக்கழகங்கள் மீன்வர்களின் வாழ்வுசங்கங்கள் புத்துயிர் ஊட்டி மீளஎழச் செய்வோம். சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருக்கட்டும். டக்ளஸ் தேவாந்தா சந்திரகாந்தன் கருணா மகிந்தா ராஜபக்சா நல்லசக்தியாகவே நான் இனம் காணுகிறேன். இதையும் மீறி சிலவிஷயங்கள் நடந்தேறினால் அது தவிர்கமுடியாததே!

  அரசாங்கத்துடன் தொடர்சியான கலந்துரையாடல் விவாதங்கள் மூலமே நாம் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் முகாம் அகதிகள்- சிறைக்கைதிகள் பிரச்சனைகளைுக்கு தீர்வுகாணமுடியும். தமிழ்-சிங்கள அரசியல் தலைவர்களால் ஏற்படுத்தி வைத்த இனவெறிப்போக்குகளையும் படிப்படியாக துடைத்தெறிய முடியும். இன்றைய நிலை இதுவே! நாளைய நிலை வேறுவிதமாக இருக்கலாம். மலையக மக்களின் வாழ்வுப்பிரச்சனை சாதிப்பிரசனை முஸ்லீம்மக்களின் அவலநிலை இவற்றைப் புரிந்துகொண்டு ஒரு இடதுசாரி இயக்கம் உருவாகுமானால் அதற்கும் ஆதரவு அளிக்கத் தயங்கமாட்டேன். அதற்கு நாம் நீண்டதூரம் இன்னும் நடக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இது இப்படியிருக்க எதிர்பார்க்க முடியாத சில சம்பவங்கள் கூடா ஒரு பிரளயத்தை ஏற்படுத்தலாம்.அப்போது எமது கருத்துக்கள் மாறுவதற்கும் இடம் உண்டு. மிகுதியை உங்கள் கருத்துக்களை அறிந்து தொடருகிறேன் சிவம்.

  Reply
 • BC
  BC

  //ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது எல்லா தறுதலையும் அயல்நாட்டு வட்டவாளங்களை தூக்கத்தை கெடுத்து படித்து அதை எமது சமூகத்தின் மீது திணிக்க அரும்பாடு பட்டார்களே தவிர எமது சமூகத்தின் தேவையையோ அல்லது விருபத்தையோ சிறிதேனும் புரியவும் இல்லை விரும்பவும் இல்லை.//

  இந்த கருத்து மிகவும் சரியானதாக நான் உணர்கிறேன்.

  Reply