ஏ-9 ஊடாக 4 நாட்களுக்குள் 30, 000 பேர் பயணம்

kandy-jaffna.jpgஏ-9 வீதி ஊடாக கடந்த நான்கு நாட்களுக்குள் சுமார் முப்பதாயிரம் பேர் சென்று வந்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதேபோன்று சுமார் இரண்டாயிரம் வாகனங்கள் சென்று வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ-9 வீதி ஊடாக பொதுமக்கள் சென்று வர தேவையான சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காடினார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 Comments

 • thurai
  thurai

  நாடு கடந்த தமிழீழத் தேர்தல் முடிந்தபின்னர், உருத்திரகுமார் சடப்படி புலிகள் கேட்ட வரியை இலங்கை அரசிடம் கேட்டுப் பெறுவார்.

  துரை

  Reply
 • lamba
  lamba

  அதற்காகத்தான் இன்வெஸ்மென்ட் பிசினஸ் என்று சொல்லிக் கொண்டு எப்பவோ போய் இறங்கிட்டாங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  துரை,
  நீங்கள் கடைசியிலை உருத்திரகுமாரையும் முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பிறதெண்டே முடிவெடுத்திட்டியள் போல??

  Reply
 • சண்முகம்
  சண்முகம்

  என்னவோ தெரியா இடுப்பு நல்லா சுழுக்கி போட்டுது ஏ9இலை! ரோட்டுகள் சரியான மோசம்! மழை வெள்ளம் வேறை! ஆனால் முந்தி கொடுத்த வரி கொடுக்க தேவையில்லை! வரிபோட்ட ஆட்களும் இல்லை! மதவாச்சியிலை ஒரு செக்கிங் பிறகு நேர யாழ்ப்பாணம் தான்! வரேக்கை ஒரு இரண்டு இடத்திலை ஐ.டி பாத்திச்சினம்! மதவாச்சியிலை வாகனத்தை சோதிச்சினம்! எல்லாம் தேர்தல் வாற புண்ணியம்! தேர்தலுக்கு பிறகும் இப்பிடியிருந்தால் புண்ணியம்!

  Reply
 • BC
  BC

  எல்லாம் தேர்தல் வாற புண்ணியம்!அல்ல. எல்லாம் புலி ஒழிந்த புண்ணியம் தான். இதற்க்கு முதலும் பல தேர்த்தல்கள் நடந்தது.

  Reply
 • பல்லி
  பல்லி

  //எல்லாம் தேர்தல் வாற புண்ணியம்!அல்ல. எல்லாம் புலி ஒழிந்த புண்ணியம் தான். இதற்க்கு முதலும் பல தேர்த்தல்கள் நடந்தது.//
  பிசி எப்போதும் கருத்து சொல்லாது ஆனால் பலர் கருத்துக்கு முற்று புள்ளி வைக்கும், பிசி யும் துரையும் ஏன் அமைதி காக்கிறியள்;? இருப்பினும்; பிசி இதை இப்படியும் பார்க்கலாம் எல்லாம் புலி விவாகரத்து(பிரபா&கருனா) அதனால் வந்த வினைதானோ;

  Reply
 • சண்முகம்
  சண்முகம்

  இங்கே பலர் இதை தேர்தல் உத்தியாக தான் பார்க்கிறாரர்கள்! ஏ9 வீதி ஏப்பிரலுக்கு பின்னும் திறக்கப்பட் வேண்டும்! புலி அழிந்ததும் ஒரு காரணம் அனால் தற்போது நடைபெறும் பல மாற்றங்கள் தேர்தலை நோக்கியதாகவே உள்ளது. எது எப்படியோ மக்கள் இங்கு மீண்டும் ஒரு சுதந்திர வாழ்வை நோக்கிய பயணம் புலிகள் இருந்திருந்தால் நடைபெற்றிருக்காது என்பது மறுக்க முடியதா உண்மை!

  Reply
 • மாயா
  மாயா

  முடங்கிக் கிடந்த மக்கள் விடுதலைக்காக தேசிக்காய் தலை வீழ்ந்தது. மீதமிருக்கும் மக்கள் விடிவுக்காக ஜனாதிபதி தேர்தல் வந்துள்ளது. தொடர்ந்தும் சில வருடங்கள் , ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தல் , மாகாண தேர்தல் என்று ஏதாவது தேர்தல் ஒன்று, ஒரு 4 வருசத்துக்கு வந்தால் நல்லது. அதை வைத்து மக்கள் சுமூகமான வாழ்வுக்கு வந்து விடுவார்கள். செலலவுதான். உயிரிழப்பு இல்லைதானே?

  ரோடு சரியில்லாததால் , சண்முகத்தாரின் இடுப்பு சுழுக்கி போட்டுதா? புலிகள் இருந்த காலத்தில ஆளைப் பிடிச்சு சுழுக்கே எடுத்தவையே? அதைவிட இது பரவாயில்ல. வீட்டுக்காரியிடம் சொல்லி சுழுக்கெடுக்க ஒரு வாய்ப்பு வந்ததே என்று சந்தேதாசப்படுங்கோ சண்முகத்தார்?

  Reply