இலங்கையில் உள்ள புலிப் போராளிகளை கைகழுவும் புலம்பெயர் புலிகள்!!! : த ஜெயபாலன்

Protest_Londonதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பபட்டு வந்த நிதி புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கொல்லப்பட்டது அறிய வந்தபின் சென்றடையவில்லை என இலங்கையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ ரீதியாக பலத்த அழுத்தங்களை எதிர்கொண்டுள்ள நூற்றுக் கணக்காண போராளிகள் புலம்பெயர் புலிகளினாலும் கைவிடப்பட்டு விட்டதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக சரணடையும் வழிகள் பற்றி சிந்திக்க முற்படுவதாக தெரியவருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு பகுதியினர் இலங்கை இராணுவத்திடம் சரணடைவது பற்றிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றது. இப்பேச்சுவாரத்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மட்டு அம்பாறைப் பொறுப்பாளரும் தற்போது அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரியவருகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தன்னுடன் சரணடைவது பற்றி தொடர்பு கொண்டிருப்பதை முரளீதரன் உறுதிப்படுத்தி உள்ளார்.

Reggie_TROதமிழீழ விடுதலைப் புலிகளின் துணை அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கயஸ்தர் ரெஜி மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி விடயங்களுக்கு பொறுப்பானவர்கள் ஐரோப்பாவிலே குறிப்பாக லண்டனிலேயே உள்ளனர்.

ஏற்கனவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரில் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் யுத்தத்தில் கொல்லப்பட்டனர் அல்லது இயக்கங்களிடையே இடம்பெற்ற மோதலில் படுகொலை செய்யப்பட்டனர். ஒவ்வொரு இயக்கமும் தடைசெய்யப்பட்ட போது அதன் போராளிகள் அனைவராலும் கைவிடப்பட்டு உதிரிகளாகி பல தவறான வழிகளில் ஈடுபட்டனர். பிழையான அரசியல் சக்திகளால் உள்வாக்கப்பட்டு மீண்டும் அவர்கள் ஆயுத பாணிகளாக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்பட்டு குடும்பங்களைக் காக்கவும் தங்கள் உயிர்களைக் காக்கவும் ஆயுதக் குழுக்களாக உருவெடுத்தனர். இதனை புலிகளில் இருந்து கருணா அம்மான் பிரிந்து சென்ற போதும் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள் உலகிலேயே மிகவும் செல்வந்தமான ஒரு இயக்கம். இதன் ஆண்டு வருமானம் 300 மில்லியன் டொலர்கள் என சில ஆண்டுகளுக்கு தி எக்கொனமிஸ்ற் தெரிவித்து இருந்தது. அப்படி இருந்தும் இந்த நிதிக் கையாள்கை சிலருடைய கரங்களில் மட்டுமே உள்ளது.

தற்சமயம் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பல நூற்றுக் கணக்கானவர்கள் பல்வேறு பகுதிகளில் சிதறுண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வே பிரபாகரன் உயிருடன் உள்ளாரா இல்லையா என்ற வாதம் தொடர்கையில் இப்போராளிகளின் எதிர்காலம் பற்றிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைவாதா? அவ்வாறு சரணடைந்தால் அவர்களது வாழ்வுக்கான உத்தரவாதம் என்ன? அல்லது அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு வேறு நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருவதற்கான வாய்ப்புகள்? இவை பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்கள் அவசரமான ஆனால் தெளிவான முடிவுகைள அறிவிக்க வேண்டும்.

மேலும் உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

22 Comments

 • uma
  uma

  உயிரிழந்த போராளிகளின் குடும்பங்களுக்கு உதவுவது ஊனமுற்ற போராளிகளுக்கு உதவுவது போன்ற காத்திரமான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் கைவசமுள்ள நிதி பயன்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.//

  மிகச்சரியான கருத்து; நடைமுறைப்படுத்த அனைவரும் பங்களிக்க வேண்டும்.

  Reply
 • thevi
  thevi

  புலிப் போராளிகள் தொடர்பாக ஜெயபாலன் குறிப்பிட்ட விடயங்களை புலத்து புலிகள் செய்து விட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள். புலத்து புலிகளை பொறுத்த மடடில் தமிழ் ஈழப் போராட்டம் என்பது ஒரு வியாபாரம். தற்போது கடை மூடப்பட்டு விட்டது. அனைவரும் கலைந்து செல்கிறார்கள்.

  Reply
 • வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்
  வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

  Hi Friends,
  I write this with a lot of sadness, relief and hope, form what has happened in the past few months. As a Tamil speaking Sri Lankan, (and proud to be one) I deeply feel that together, we can build the burnt bridges and pave a path to peace, happiness, equality and prosperity for us and for the future generations to come.
  We cannot forget what happened for the past three decades, however we need to put aside our emotions, despair and remember those lives, which were lost in bloody war in the name of “equality”. We Tamils speaking Sri Lankans have to now reconcile and win the trust of the nation. For decades, we have been secretive, unpredictable and uncompromising. Sure enough, we were discriminated in the past, deprived of our equal rights and treated unfairly. Now we have to give the nation a chance to prove that, it is not the case.
  We have to let go of the past and not react to our feelings in an irrational and selfish way. We talk about the 1953 era, of the riots and how the Tamil speaking Sri Lankans were discriminated and treated badly. In 1953, the whole world was a different place and had a different attitude. In America blacks could not go in to a restaurant or a supermarket or attend a white school, the aborigines in Australia did not have any rights. Now America has a black president, and the Aborigines have equal rights; we Tamils now have to give it a chance for change to happen in our motherland. We are hanging on to views and ideologies, which formed thirty years ago, which are not appropriate anymore. I think that, in the past 20 years we have created a doubt in the minds of the Sinhalese and the nation, making them wonder weather every other Tamil speaking Sri Lankan is a Tamil Tiger or not.
  Prior, to 1988, before I left to Australia, I remember after a rugby game at Longden Place and a few (in my context) drinks at the club, going home in the early hours of the morning, my only fear was whether I will be stopped and breathalysed and charged for DUI. In the later years in my many trips to SL, the fear was whether I would be subject to harassment because of my name. Why do you think it is so? Is it not because of the war, the suicide bombings? All of this distrust of Tamils started after the war began. So, did we not create this for ourselves? This is not only happening to the Tamils, in fact If you send money to the US or visit the US bearing an Arabic name, you are scrutinised vigorously, which began after “9/11”. The Arabic world calls it “discrimination”.
  In 1983, the news of the death of 13 soldiers sparked an organised riot, and over 2000 Tamils lost their lives and over 100,000 Tamils were displaced. The nation soon realised that it should not have let it happen, and the wider community shared the same sentiment. In 1996 a raid on a Military camp in Mullaitivu by the Tigers, 1,500 soldiers were killed, yet there was no repeat of 1983, or for that matter since 1983 several thousands soldiers have lost their lives and we did not see a repeat of 1983.
  We talk about “Genocide”, which is a very powerful and compelling word. No doubt, that many women and children have lost their lives, but one has to remember in every war, innocent people loose their lives. There is blame on both the armed forces and the Tigers. Lets not be the judge of that, let the appropriate organisations investigate and report the findings.
  The Tamil Diaspora and number of organisations are having protest marches and their websites are relentlessly publishing calls for the IC to intervene about the mistreatment and harassment of the civilians. However much we are angry and anxious, we must have patients and let the government, UN and the other aid organisation to embark on the huge task ahead of them to relocate, resettle and reconcile the civilian casualties.
  We have been having protest marches for decades around the world. Has one head of state or a member of a parliament took a flight and gone to Sri Lanka and discussed the problem with the authorities? I do not think so. The IC will mention our plea in their speeches, or talk about it when the next election comes around.
  Does the IC know the differences between Jayasinghe and Jayasingham? It is up to us reconcile and rebuild friendships. What has happened in the past has happened, we cannot turn back the clock. The truth of what happened in the battle zones will only surface, if the victims have no fear in revelling the truth. From this point, onwards it is up to us to make sure that this is possible. We should regain the trust and the sympathy of the grater community.
  We Tamil speaking Sri Lankans started this war his was never an option. For thirty years, we have fought a bloody war with no results. Are we going to continue this for another thirty years? No. We, have lost too much, the nation has lost too much. It is time to take a step back and think sensibly putting aside our emotions and pride.
  The Tamil Diaspora and community leaders, spokespersons and organisations are calling for the Tamil community to “re-group and realise our leaders dream”, after three decades of war, is it not the time now to wake up from that dream? They say now that the Tigers are defeated that we will be systematically eradicated, as there is no one to protect us. We should stop speculating of what the future holds for the Tamil speaking Sri Lankans in Sri Lanka and need to get these myths out of our heads and win the trust of the nation we should responsibly publish and circulate articles and news items, or even refrain from doing so until the displaced civilians are settled. Now we need to concentrate and work closely with those who are in SL to help the refugees.
  In the past, few days there are reports that, during the celebrations following the governments victory over the Tigers, that may Tamil business were forced to give money towards the celebrations, and this news is from “Reliable sources”. This may be true may not be true, however when we hear such news we need to think rationally and responsibly before we spread it around, Sometimes, in times of sadness, desperation and anxiety the, truth is often exaggerated and taken out of context. We all remember, back in SL at a big match we generally have a “hat collection” to pay for our celebrations. This has been a culture. Every Christmas, New-year, Vesak or during Vel Festival, the garbage collectors, the posties etc go house-to-house collecting money for celebrations. It is not an unusually thing to happen. The people who have not experience this should not be alarmed and portrait such incidents as “ discrimination and harassment”.
  I ask those who read this to support me in achieving a united and equal Sri Lanka for all who were born there. One day I wish to return to the country of my birth and live as an equal citizen in peace and harmony.
  How can you help? Tamil speaking Sri Lankans should reach out to the Sinhala speaking Sri Lankans and speak about the grievance you have, and ask them to help you achieve security and equality. My, Sinhala speaking Sri Lankan friends should reach out to a Tamil speaking Sri Lankan and unconditionally trust them and help them achieve security and equality.
  We, Tamil speaking Sri Lankans have to realise that this is the only nation that Sinhalese is spoken, and we should respect that, win their trust and respect in return.

  Reply
 • Constantine
  Constantine

  As a first excersise can we ask the full accounts for ‘Vannanga Mann’ from Mr. Moorthy (White Pegion) . After that we can ask him for ‘Sunnami Fund’ accounts.

  Reply
 • Karan
  Karan

  COLOMBO, Sri Lanka (AP) — The Sri Lankan military says it has killed 11 suspected Tamil rebels in the eastern jungles, in the biggest clash since declaring victory against the insurgents last week.

  Reply
 • கையறு தமிழன்
  கையறு தமிழன்

  போராளிகளே!, தேசம்நெட் துவங்கியதிலிருந்து தலையில் அடித்துக் கொண்டு தூக்கமில்லாமல் துடித்து, “எதிர்வு கூறியிருந்தேன்”. நீங்கள் சிந்திய வியர்வை, உழைப்பு, கண்ணீர், இரத்தம் அனைத்தையும் சிலர் வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தேன். ஒவ்வொரு காயம்பட்ட உயிரையும் பராமரிப்பது, சிலவு அதிகம் பிடிக்கும். அதற்காக, கடைசி சமயத்தில் கூட, முன்னூறு உயிர்கள் கிளினொச்சியை நெருங்கிய போது, சாகடிக்கப் பட்டப்போது, நடு இரவில் துடித்தெழுந்து எழுதினேன். ஆனால் புலம் பெயர் வியாபாரிகள் (திருநீறு பூசிக் கொண்டு லண்டன் கோயில்களில் பணத்தைப் பிடுங்கும் சைவப் பழங்கள்), உடையார் கட்டு அணை உடைந்து, 2000 இந்திய இராணுவ வீரர்கள் பலி, 3000 இலங்கை இராணுவத்தினர் பலி என்றுதானே ஈவிரக்கமில்லாமல், பிஞ்சுக் குழந்தைகள், “ஐயோ நானும் என் தம்பியும் மட்டும் யாருமில்லாமல் தெருவில் நிற்கிறோமே” என்று போர் பகுதியில் நின்று கதறிய போதும், ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தார்களே தவிர, அப்போதே இந்த “அநியாயத்தை” நிறுத்துங்கள்! என்று தெருவில் இறங்கியிருந்தால்??… போங்கடா.. எல்லாம் போச்சு!!…

  Reply
 • Vannikumaran
  Vannikumaran

  பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?இல்லையா? அதற்கு முதல் இவ்வாறான ஒரு சூழ்நிலைவரும்போது புலிகள் என்றால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லி பிரபாகரன் சயனைட் குப்பியை கழுத்தில் கட்டச் சொன்னார். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் அதைச் செய்யட்டும். தப்பிஅரசிடம் தஞ்சமடைபவர்கள் உண்மையான புலி இல்லை அவர்களைக் காப்பாத்த வேண்டிய பொறுப்பும் புலியளுக்கு இல்லையெண்டுதான் நான் நினைக்கிறன். ஆனால் புலத்தில குடுத்த காசுக்கு கணக்கு கேக்கிற நீங்கள் என்ன பற்றுச்சீட்டு வாங்கியே சுனாமிக்கும், வணங்கா மண்ணுக்கும் காசு குடுத்தனியள். எல்லாம் கேடி கேபி பத்மநாதன் தன்ர எக்கவுண்டுக்கு மாத்தி தன்ர கணக்கு வழக்குகளைப் பார்க்கிறார். அதாலதான் உந்த புலம் பெயர் புலியெல்லாம் பத்மநாதனை தலைமையாக்குறதுக்கு துடிக்குது. ஐயோ அவர் செய்யுறது கள்ளக் கடத்தல் அது மட்டுமல்ல பிரபாகரனை மடக்குறதுக்கு றோவுக்கு தகவல் குடுத்ததும் அந்த மனுசன்தானாம் எண்டு அரசல் புரசலாக சில ஊகங்கள்.

  புலம் பெயர் புலிகளுக்கோ அதன் ஆதரவாளர்களுக்கோ பிரபாகரன் பற்றியோ இல்லை தற்போது இலங்கையில் தவிக்கவிடப்பட்டிருக்கும் புலிகள் பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. இப்பொழுது சர்வதேச ரீதியாக புரண்டுகொண்டிருக்கும் புலியின் முதலீடுகளை எப்படி அதை வைத்திருக்கும் பினாமிகள் தம்வசமாக்குவது எண்ட பிரச்சனையில ஓடித்திரியினம். இந்த நேரத்தில முர்த்திட்ட கேள்வி கேக்கிறியள். பதில் வராது… ஆனால் கேள்வி கேக்காம குடுத்துப் போட்டு திடீரெண்டு கணக்கு கேட்டால் யாராலும் சொல்ல முடியாது. நீங்கள் கணக்கு கேப்பியள் எண்டு கனவிலையும் நினைக்கேல்லை. கோயில் உண்டியலில போட்ட காசுக்கு யாரும் கணக்கு கேட்க முடியுமா. இல்லை கணக்க காட்டத்தான் முடியுமா? இனியாவது கணக்கு விடாமல் இருந்தால் சரி.

  மிக முக்கிய விடயம் கே பி தமிழர் விடயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழர் எம் கடமை அடுத்து த வி பு தலைமையால் தத்தளிக்கவிடப்பட்ட எமது பிள்ளைகளை ஏதோ விதத்தில் காப்பாற்றி அவர்களை வாழவைக்கவேண்டிய பொறுப்பு தமிழருக்கு உண்டு. அதற்கு எதாவது முடியுமெண்டால் அதைப் பற்றி உடனே யோசித்து அதற்கான வழிவகைகளைப்பற்றி ஆராய்வோம்.

  வன்னிக் குமரன்

  Reply
 • raja
  raja

  சுனாமியால் சேர்க்கபட்ட நிதி எங்கே ரெயி என்பவர் ஏன் மறைந்து வாழ்கிறார் இவர்தானாம் அடுத்த புலியின் தலைவர். ஆனால் கடைசிவரை ஆலோசகர் இறக்கும் வரை வீட்டு வாசலிற்கு விடவில்லையாம். ரெயி தான் தலைவரின் வீரமரணத்தை வெளிச்சத்திற்கு வர விடாமால் தடுப்பதாக உள்வீட்டு தகவல்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சுனாமிநிதி மட்டுமல்ல கண்ணீர்த்துளிகள், வணங்காமண் என்று சுருட்டிய அனைத்து நிதிகளையும் மீளப் பெற்று அகதிமுகாம் மக்களுக்கும், புலிகளிலிருந்து சரணடைந்தவர்களின் புனர்வாழ்விற்காகவும் பாவிக்கப் படவேண்டும். அது போல் சரணடைந்த புலிகளை தாயகத்திலேயே வைத்திருந்து அவர்களுக்குரிய கெளண்சிலிங் வழங்கப்பட்டு படிப்படியாக அவர்களுக்குரிய புனர்வாழ்வை வழங்க வேண்டும். ஆனால் இவர்களை வெளிநாடுகளுக்கு அகதிகளாக அனுப்பி வைக்க முயற்சித்தால், புலன் பெயர்ந்த புலிப்புண்ணாக்குகளுடன் சேர்ந்து மீண்டும் தமது கைவரிசைகளைக் காட்டவே முனைவார்கள். இதனால் மீண்டும் எமது இளையோரின் வாழ்வை சீரழிக்கவே, இவர்களின் வரவு வழிசமைக்கும். எனவே நாம் எடுக்கும் ஒவ்வொரு முன்னெடுப்பும் எதிர்காலத்தைச் சிந்தித்தே நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும்.

  Reply
 • Nanpi
  Nanpi

  வன்னிக்குமரன், பார்த்திபன் உங்கள் பிரச்சினைதான் என்ன. சொல்லிப் போட்டு அழுங்கோவன். உமாவின் விமர்சனத்தைப் பார்த்தாவது சிந்தியுங்கோவன்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  அது சரி, வீதியில கத்தின புலிக் குட்டிகளுக்கு ( புலத்து இளையோர்) என்ன நிலமை?

  Reply
 • Pulikuddi
  Pulikuddi

  உங்கள் நோக்கம் பெரும்தன்மை எமக்குப் புரிகிறது ஜெயபாலன். இதுதான் கடசிப்பணம் கடசிப்போர் என்று பணம் திரட்டினார்கள். இப்பதான் விளங்குகிறது கடசிப்போர் இப்படித்தான் இருக்கும் என்று. அங்குள்ள புலிகளை இங்குள்ள புலம்பெயர் புலிப்புண்ணாக்குகள் பார்ப்பதா? என்னையா சொல்லுறியள். புலிகளின் வாணவேடிக்கை முடிந்தது களியாட்டங்கள் கலைந்தன. வெளிநாடுகளில் கடசிப்போர் என்று வீடுவாசல்களை அடைவுவைத்துக் காசு கொடுத்தார்கள் தெரியுமா? வாங்கின காசுகளை எப்படிப் பதுக்குவது என்று பார்க்கிறார்கள் புலம் பெயர் புலிப்புண்ணாக்குகள். புலிப்பினாமிகள் தனிப்பட்ட தம்பெயர்களில் வீடுகளை வாங்கி வாடைக்கு விட்டுகள்ளார்கள். இது எல்லாம் கோவில் கணக்குத்தான். இப்பதான் யோசிக்கிறோம் புலிகளுக்காக காசுசேர்க்கப்போயிருந்தால் சேர்ப்பதில் 15 வீதம் தந்திருப்பார்கள். பொறுப்பாளராக வந்தால் 4 அல்லது 5 தனிவீடுகளை பிள்ளைகளின் பெயரில் வாங்கி வாடைக்கு விட்டிக்கலாம். ஆயுதங்களைப் போட்டுவிட்டு அரசிடம் சரணடையச் சொல்லுங்கள். இவர்கள் வெளியில் இருந்தால் சிலவேளை சில பிரபாகரன்கள் உருவாகி மக்களை சின்னாமபின்னமாக்கி விடுவார்கள். தமிழினத்துரோகி பிரபாகன் போனதால் இவன் வாரிசுகள் எங்கெங்கோ எத்தனை எத்தனை துரோகிகள் உருவாகப்போகிறார்களோ யார் அறிவார்?

  Reply
 • Vannikumaran
  Vannikumaran

  வணக்கம் நண்பி உலகத்தில என்ன நடக்கிறதெண்டாவது தெரியுமா? உமாவின் கருத்துக்குப் பிறகுள்ள விமர்சனங்களை அடுத்து என்ன சொல்லுறதெண்டு தெரியாம சொல்லியிருக்கிறயள்.
  என்ன புலிப்பினாமியள் உங்களுக்கும் கொமிசன் தருகினம் போல. அதுதான் உந்த அழுகை அழுறியள். நிறுத்தும் உம்மடை புலிப்பாட்டை.
  நன்றி பார்த்திபன்

  வன்னிக்குமரன்

  Reply
 • மாயா
  மாயா

  புலத்து புலித் தலைமை என்று வெட்டுக் குத்தோடு களம் இறங்கி இருப்பவர்கள், மேலும் இலங்கையில் இருக்கும் தமிழருக்கு கலக்கத்தை உண்டு பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். புலிகள் ஜனநாயக நீரோட்டத்துக்கு வருவதாகவும் , எமது போராட்டம் தொடரும் போன்ற சுருதியில் சூடேற்றும் போது ,மீதமாக முகாமில் இருக்கும் தமிழர்களையும் அரச படைகள் துருவித் துருவி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

  இனி பிரச்சனை முடிந்தது என நினைத்தவர்களுக்கு , புலத்து புலிச் சுருதிகளால் ஆபத்து தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. பாவம் அந்த அப்பாவிகள். சற்று வாயை பொத்திக் கொண்டு இருக்காமல் மரத்தால் விழுந்தவனுக்கு மாடு குத்தும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

  இணையத்தில் சில கீரோக்கள் நடத்திய வீராப்புகளால்தான் அங்கே சீரோ ஆனது. இனியாவது புரிந்து கொள்வர்களா?

  Reply
 • போராளி
  போராளி

  புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தற்போது கைவிடப்பட்டுள்ள சக போராளிகளின் எதிர்காலம் பற்றி தங்கள் நாடுகளில் உள்ள பொறுப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து அப்போராளிகளின் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த முயற்சி எடுப்பது மிக மிக அவசியம்.

  என்ற ஜெயபாலனின் கருத்து உட்பட அனைத்தியும் நான் வரவேற்க்கின்றேன்.

  Reply
 • thevi
  thevi

  அதுதான் கருணா தமிழ் செல்வனின் குடும்பத்தை வெளியே விடச் சொல்லியிருக்கிறாரே. சூசையின் குடும்பத்தையும் சந்திக்க போறாராம். நீங்கள் என்ன கைவிட்டாச்சு என எழுதுகிறீர்கள்.

  Reply
 • accu
  accu

  தலை செத்ததை ஒத்துக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில்? கலப்பதாகக் கூறிய புலிகளுக்காகட்டும் அல்லது தலை சாகவரம் பெற்றது போராட்டம் தொடரும் எனக் கூறும் புண்ணாக்குப் புலிகளுக்காகட்டும் இனி இலங்கையில் இடமில்லை. இந்த இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே சொத்துக்கான போரட்டம் சில காலத்துக்கு வெளிநாடுகளில் நடக்கலாம் மற்றும்படி இவர்கள் வெறும் வெத்துவேட்டுக்களே!
  தோழர்,கருணா,சித்தர் போன்ற அரசின் அனுசரணை உள்ளவர்களின் மூலம் இடம்பெயர்ந்த மக்களுக்கும், சரணடைந்த புலிகளுக்கும், இன்னும் குழுக்களாக மறைந்து வாழும் புலிகளுக்கும் அவர்களின் சாதாரண வாழ்வுக்கு வழி செய்வதே இன்றைய முக்கிய தேவையாகும். அனைவரின் கடமையுமாகும்.நன்றி.

  Reply
 • palli
  palli

  //தோழர் கருனா,சித்தாத்தர் போன்ற அரசு அனுசரனை உள்ள//
  முன்னது புலிதோல் களட்டிய புலி;
  பின்னது பசும் தோல் மூடிய புலி;

  Reply
 • palli
  palli

  போராளிகளுக்காக மட்டுமல்ல அங்கு சிதை உண்டு முப்பதினாயிரத்துக்கு மேலானவர்கள் கை கால் கண் இப்படி உறுப்புகளை இழந்து அவர்களது எதிர்காலமே இருண்டுவிட்டது, இவர்களுக்கு நாம் என்ன செய்ய போகிறோமோ தெரியவில்லை; இருப்பினும் முதல் கட்டமாக இந்த புலி பணக்காரரை இனம் காட்டுவோம், அதுடன் அவர்களாய் திருந்தி (வாய்ப்பில்லை) தாம் மக்களிடம் சேகரித்த பணத்தில் அந்த மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்; இல்லையேல் அவர்களை அந்தந்தநாட்டில் சட்டத்தின் முன் நிறுத வேண்டியதுதான்; நண்பர்களே உங்களுக்கு தெரிந்த பணம் சேர்த்த புலி பினாமிகளின் தகவல்களை தேசத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்; பல்லி சொல்லுவது K P உட்படதான்;

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  பல்லி,
  கே.பி பற்றிய விபரத்தை சர்வதேசப் பொலிசார் தான் திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதிப் பொறுப்பாளராகவிருந்தவர்களின் விபரம் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தெரியும் தானே? அவர்களின் விபரங்களையும் அவர்கள் எந்த எந்த காலங்களில் எதற்கெதற்கென்று நிதி சேகரித்தார்கள் என்ற விபரங்களையும் சேகரித்து அதன் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அது போல் வங்கிகள் மூலம் கொடுப்பனவுகள் வழங்கியவர்களிடம் அந் விபரங்களையும் பெற்று நடவடிக்கைகள் எடுக்கலாம்.

  சமீபத்தில் கூட இங்கு சுவிசில் எல்லைப்பாதுகாப்பு வீரர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி என்று சிலர் சுருட்ட முனைகின்றனர். இப்படிக் கேட்டு வந்தவர்கள் பலர் வீட்டிலிருந்தவர்களால் கழுத்தைப் பிடித்து வெளியேற்றாத குறையாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படியான நடவடிக்கைகள் எனி ஒவ்வொரு நாட்டிலும் அரங்கேற வேண்டும்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  பார்த்திபன் அங்கிருந்த எல்லைப் படைக்காக , சுவிஸ் எல்லை தாண்டிய படைகள் பல இடங்களில் பணம் வசூல் செய்தே உள்ளது. அங்குதான் எப்படி பணம் போகும் என்ற கேள்விக்கு, வணங்கா மண் அதற்காகத்தான் போகிறது என்றார்களாம். இப்போது கேட்டால் வணங்கா மண் நடுக் கடலில் போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்களாம். வங்கிகளில் கடன் வாங்கிக் கொடுத்தவர்கள் நிலை பரிதாபம்? அதை அவர்கள்தான் கட்ட வேண்டும். கொடுத்தவர்கள் தலையை சொறிந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் கோயில் கணக்குதான்.

  தலைவர்கள் என்று கொடியேத்தியவர்கள் தலை தெறிக்க மறைந்து ஓடுகிறார்கள். யாரைப் பிடிப்பது. இருக்கிறதை பதுக்க முயற்சிதான நடக்கிறது. சில நாட்களுக்கு முன் புலிக்கு காசு சேர்க்கிற சிலர் ஒரு மதுக் கடையில விஸ்கியோடு பார்க்க முடிஞ்சது. “நாட்டில நடக்கிறதை தாங்க முடியல்ல. அதுதான் ஒரு பெக் அடிக்க வந்தம் ” என்றார்கள். தமிழீழ காசு மதுக் கடையிலும் தண்ணியா கரையுது. கொலை நாயகர்கள் ஜனநாயகர்களா வருவார்கள் . இனியும் திருந்தாத கூட்டம் எப்பவும் திருந்தாது. வாழ்க தமிழீழம். வளர்க தலைவர்கள் சொத்து.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  நண்பன்
  இப்போ மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வளவு நாளும் ஏமாற்றியது போல் எனி ஏமாற்றிப் பிழைப்பு நடாத்த முடியாது. சமீபத்தில் சுவிசில் செங்காலன் எனும் இடத்திலும் இயக்கத்திற்காக காசு சேர்க்கப் போன சிலர் நையம் புடைக்கப்பட்டு ஓடியுள்ளனர். இனி இப்படியான சம்பவங்கள் தொடரவே செய்யும்.

  Reply