ழூண்றுகால் முயலின் கண்கள்.

September 11th, 2008

இருப்பிடம் இழந்த குருவுக்கு குடல் அழுதது.

 

அம்மனைக் கும்பிடவோ அப்பன் முருகனை நேரவோ என்று அழுதுகொண்டு திரியும் ஆடுகள் மாடுகள் ஆகிய அறிவுள்ள ஜீவன்களுக்கு மத்தியில்
இந்த ஆடுகள் மாடுகள் பிடித்துண்ணும் காண்டா மிருகமொண்றின்
(காண்டா மிருகம் மச்சம் தின்னாது என்போரை வெறுப்போம்).
உறுமலில் பிறந்தது கணீரென்ற சண்டித்தனம்.

 

கடகம் கீறிய காதாவடியில் விழுந்தது பளார் என்றொரு அறை.
கயிரும் கம்பியும் கண்ட கண்ட மனிதற்ற வாயும் கடித்த கை, காண்டாமிருக (சானி)
பிசைந்தது.

 

அம்மாவான நம்புவேன் அவர்கள் கதைகளை.
மூண்றுகால் முயலோடு வந்த முற்போக்கு என் பிடரியை குத்தி வருடியது.

 

என் முட்டி தட்டி முதுகில் பல்லக்கிறக்க சவுக்கெடுப்பர்.
இந்த காலிடப்பா அவர்தம் கால்களில் இடறி கீறி கிழியும்.

 

பருப்புகளுக்கும் பறவை இனத்துக்குமே ஒரு கேடு.

 

கட்டை விழ மறுக்கும் நித்திரை வெறியனின் கையிலிருக்கும் புனித புத்தகங்களின் வசனங்களை காலை ஓதி மாலை ஓதி காலம் இறக்கும் வரை ஓதி கடைசியில் எம் கழுத்திலும் கழிப்பர். குறைபாடுகளற்ற மந்திரம் இயற்றுவர்.

 

இரவிலும் இருட்டிலும் பல் நறும்பி கதிரை குரைக்கும்.
…எம் குடலுருவி கதிரை குரைக்கும்.
மில்லியன் தலைகள் உருண்டதால் தவளைக்கென்ன கவலை?
ஒரு கொக்கரிப்பில் கூரை கவிழும் -
நம்பர்கள் தெறிக்கும்.

 

குரல்வரும் குரல்வளை அவர்தம் அரசுடமை.

 

வரலாறு அறும் அறும் என்று காத்திருந்தபின் பிடரியில் விழும் கோடரி.
எம் வரலாறு அறுந்து நிசக்கும்.
உம் மதம் பிறந்து உலுப்ப கண் மறைக்கும்.

 

தூரத்திருந்த பாயில் கிடக்கும் முள் துண்டு மேலும் மெலியும்.

 

பொறுக்கிகள் எம் குரல்களில் பேசுவர்.
எம் கனவுகள் வாழ்வர்.
உயிரில் வரி எடுப்பர்.
நுகர்வர்.
எம் பாட்டனுக்கு நடந்த கதை சொல்லி புதிய கதையில் எம் புகழை குடிப்பர்.

 

மூண்றுகால் முயலுக்கு எல்லாம் கண்மறைக்கும்.
கரும்பேரிருட்டு சுவைக்கும் ழூளை
வரிக்கு வரி கண்கெட்ட முறையை வாந்தியெடுக்கும்.
-அது மொக்கு.

 

அது அப்படியிருக்க ஒரு கூட்டம் ‘கட்டிடம் வளர்க்கும’;.
கண்காண மறுத்த கேள்விகள் தெறிக்க பைப்படி இருந்து பல்லடி வரையும் வீனே சிந்தி வெறிக்கும்.

 

மரம் மாடு ழூண்றுகால் முயல் என்று அன்பு செய்தல் நல்லது.
அன்பை உயிர் சொருகி உரசிப் பழகுவது ஓசியில் கிடைக்கும்.

 

மனிதவெள்ளம் மயக்கும் கருத்துத்தாகம் மௌனம் இருந்து பிறக்கும்.
நல்லது தோழர்கள்.
கண்ழூடி நன்மைக்கும் நட்புக்கும் உடன்படுவோம்.
உள்நெருப்பு கத்தும் வறுமைக்கும் உடன்படுவோம்.
நெருக்கி நொறுக்கி பற்களின் இடுக்கில் தப்பித்தவறி கிடக்கும் ஒருசொட்டு இரத்தத்துடன் நட்பும் நன்மையும் தவிர நெருப்பில் கூடி நிரப்பவா முடியும்?

 

நியாயமான கேள்வி.
நாமென்ன கட்டிடம் வளர்க்கவா உம் கைகளை கேட்டோம்.
ழூக்கிலடிக்கும் உங்கள் எதிரியின் பகலை கடித்து அவர்தம் முத்திய தடிப்பை உறிஞ்சத்தான் பங்கு கேட்டோம்.
வரலாறு கொண்டு காது குடைவதில் கண்கள் இருளும்.
நெருப்பின் பகுதிகள் கரம் நீட்டி அணைப்பது ஒரே ஒரு புரட்சிதான்.

கொக்கட்டிச் சோலை

September 11th, 2008

கொக்கட்டிச் சோலை ஒரு பாலை - அங்கு நான்
கைககட்டிச் சீவித்த வேளை - ஒரு விடியாத காலை

 

மம்பெட்டி கொண்டாந்து தருவார் - மத்தியானம்
சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் - பேந்து
வெள்ளாட்டி வருவா தேத்தண்ணியோட - பேணி
இல்லாட்டி என்ன உந்தப் பிளாவப்பிடி என்பா

 

பிஞ்சுப்பனை செத்துப்போச்செண்டா கவலை
அஞ்சு செடி கருகிப்போச்செண்டா கவலை
மாய்ஞ்சு மாய்ஞ்சு நானுடையும் வேளை
கொஞ்சம்கூட மனக்கவலை இல்லை

 

அவவுக்கு புதுக்கவிதை போலவொரு பிள்ளை
தாயின் எடுப்புக்கும் சாய்ப்புக்கும் இணையாக
கடுப்பான உடம்போட - தோட்டத்தில்
கண்டபடி திரிஞ்சா

 

கள்ளடிச்சுப்போட்டு நானொருக்கா
கட்டிப் புடிச்சிட்டன்

 

பொல்லா வியாதி வந்தாப்போல் துடிச்சா - நான்
வெள்ளாச்சி தெரியுமோ வென்றழுதா

 

அவ வீட்டு மாட்டுக்கும் வெள்ளச்சி பேர்

 

பொல்லாப் பிழையடி பெட்ட
சொல்லாதே என்று சொன்னதில் விட்டிட்டா

 

பின்பிந்த
வெள்ளாளர் வந்தார்கள் வெளிநாடு
வெள்ளையர்கள் கறுப்பர்கள் என்று - மக்கள்
கலர்களராய் கலப்புக் கலியாணங்கள் செய்வாராம்

 

சிவப்புக் கொடியணிந்த தோழி அவவின்
ஆங்கிலப் படிப்புக்கு வழி சொன்னா
வெள்ளயனைப் பிடியடி தானா வரும் மொழி என்று

 

இன்னும்
வெள்ளையனோ கறுப்பனோ
வலையில் விழுந்த பாடில்லை
தங்கச்சி வாயில் இங்கிலீசு
தவண்டபாடுமில்லை

 

சிவப்புக் கொடியணிந்த தோழி
தமிழ் நாட்டில் தமிழ் கற்று
அகதிகள் புனர் வாழ்வில் கருத்தோடு இருந்தா

 

இந்த வெள்ளச்சியும் வெள்ளாச்சியும்
இணைபிரியா நன்பர்கள் என்று
வெளியில் கதை
ஊரில் கதை
உலகெல்லாம் கதை

 

வீட்டில் விசேசமென்றால்
வெள்ளச்சிக்கு சொல்லித்தான் மறுவேலை

 

எடுபிடிக்குப்போன நான்
எட்டி நின்று பார்த்தேன்

 

வந்து போகும் தமிழர்கள்
வெள்ளச்சியை வின்ணாணம் பார்க்க
சேர்ந்து பார்த்த நானும் - ஒருக்கா
பியர் அடிச்சுப்போட்டு
கட்டிப்பிடிச்சிட்டன்

 

தப்போ தவறோ என்று
எட்டி நடக்க இருந்த என்னை
எட்டி இழுத்து
பல்லும் பல்லும் இடிபட இட்டா ஒரு முத்தம்

 

பட்டென்று வந்ததொரு பொறாமை
ஊரில இவையோட பழகோம் - நீயோ
படுப்பதென்பது மேலும் கீழாமென்று எடுத்தோதி
ஆக்கினை வரிகளை அடுக்கியும்
வெள்ளச்சி என்னை விடாப்பிடியா காதலிச்சா

 

கள்ளியடி அவள்,
யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் இரவுக்கு காதலிச்சா
அதுபோதுமென்றில்லை ஆனாலும் காணும்!

 

என்னை நினைச்சு நினைச்சு வெள்ளாச்சி உருக
நான் வெள்ளச்சியோடிருப்பேன்

 

அவ வீட்டு மாட்டுக்கும் அதுதானே பேர்

 

இதுகள் மிருகங்கள்
ஆடு மாடு நாய் பூனை போல
கண்டபடி சேருதுகள் கண்டபடி பிரியுதுகள்
என்றவா தாய்க்கு கடிதம் போட்டா

 

படிச்ச வெள்ளாட்டி
ஏதோ புதினமென்று
விழுந்து விழுந்து சிரிச்சா.

நன்றி  சத்தியக் கடதாசி

வெற்றி

September 11th, 2008

உண்புகையும் சினம்கரித்து தணல் சிதறும்

 

குத்திக் கீறி தெறித்த உதிரம் பதற

 

கரையும் படை சிதறி துணிவுடையும்

 

வறுமைக்கடி வழமை காட்டும்

 

-கதறிக்கிடைத்த வடிவான வெற்றி


FireStats icon Powered by FireStats